இடுகைகள்

கல்வியுலகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆறு மாதத்தில் தமிழ் நெடுங்கணக்கைக் கற்றுக் கொண்டார்கள்

படம்
வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பித்த அனுபவம் சுகமானது. இங்கிருந்து போன முதல்வருடம் புதிய மாணாக்கர்கள் இல்லை. இரண்டாம் ஆண்டில் 7 பேரும், மூன்றாம் ஆண்டில் 3 பேருமாகப் 10 பேர் தான். அவர்களுக்குப் பேச்சுத் தமிழ் கற்பிப்பதுதான் எனது வேலை. தமிழ் நெடுங்கணக்கு ஏற்கெனவே அவர்களுக்குத் தெரியும் . அதைக் கற்பிக்கும் வாய்ப்பு அந்த வருடம் வாய்க்கவில்லை.

மொழி இலக்கியப் பாடத் திட்டங்கள் உருவாக்கலுக்கான பயிலரங்கு

எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி இலக்கியக் கல்விக்கான பாடத்திட்ட உருவாக்கம் என்னும் பொருளில் இருநாள் பயிலரங்கு ஒன்றை நடத்திடத் திட்டமிட்டுள்ளோம்.  பாடத்திட்டக் குழுக்கள் சார்ந்த பங்கேற்பாளர்கள், மாணவப் பிரதிநிதிகள், மதிப்பீட்டாளர்கள், வல்லுநர்கள், கருத்துரையாளர்கள் என ஐவகைப் பிரிவினர் இடம் பெறுவிதமாகத் திட்டமிடப்பட உள்ளது 

எந்த மொழியின் வழியாகக் கல்வி கற்க வேண்டும்?

படம்
   இந்தக் கேள்விக்குத் தாய்மொழியின் வழியாகக் கல்வி கற்பதே சிறந்த கல்வி எனப் பலரும் உடனடியாகப் பதில் சொல்கிறார்கள். மொழிகளின் இயல்புகள், மாற்றங்கள், வளர்ந்த வரலாறு, தேய்ந்து காணாமல் போனதன் காரணங்கள் எனப் பலவற்றையும் ஆய்வு செய்து முடிவுகளைச் சொல்லும் மொழியியல் (Linguistics) துறையைச் சார்ந்த அறிஞர்களும் ஆய்வாளர்களும் தாய்மொழியின் வழியாகக் கற்றலே இயல்பானது; எளிமையானது; சரியானது எனச் சொல்கின்றனர்.

மொழிக் கல்வியும் மொழிவழிக் கல்வியும்

படம்
தமிழக அரசு அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழி வகுப்புகளை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப் போகிறது என்ற அறிவிப்பை எதிர்ப்பதா? ஆதரிப்பதா? என்று குழப்பமாக இருக்கிறது. இன்றைய உலகமயச் சூழலில் தாய்மொழிவழிக் கல்வியை மட்டும் வலியுறுத்தும் தைரியம் என க்கு இல்லை. அப்படி வலியுறுத்துபவர்களுக்கு கிடைக்கக் கூடிய பட்டங்கள் பலவாக இருக்கும் என்பதும் எனக்கு தெரியும் . நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத பிற்போக்குவாதி ; மொழி வெறியன் ; கிணற்றுத்தவளை என்பதான தூற்றல் வார்த்தைகளால் அர்ச்சனை கள் கிடைக்கலாம்.

வார்சாவில் ஒரு நேர்காணல்

போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழக மாணாக்கர்களின் வளாகப் பத்திரிகை  செட்னா -ஸ்டூடன்ஸ் கெஜட்டா .  என்னுடைய நேர்காணல் வந்துள்ளது. இரண்டு பகுதிகளாக உள்ள நேர்காணலைப் பின்வரும் இணைப்புகளில் வாசிக்கலாம்.   http://gazeta-sedno.pl/3874/whats-up-uw-a-passage-to-india-part-1/ http://gazeta-sedno.pl/3881/whats-up-uw-a-passage-to-india-part-2/

வார்சாவில் ஒரு நேர்காணல்

போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழக மாணாக்கர்களின் வளாகப் பத்திரிகை செட்னா -ஸ்டூடன்ஸ் கெஜட்டா . என்னுடைய நேர்காணல் வந்துள்ளது. முதல் பகுதி இது . http://gazeta-sedno.pl/3874/whats-up-uw-a-passage-to-india-part-1/ அடுத்த பகுதி அப்புறம் வரும் .

இந்தியச் செவ்வியல் மொழிகள் இரண்டு: தமிழும் சமஸ்கிருதமும்

படம்
                                                                  முன்குறிப்பு: இந்தியவியல் அறிஞர் ஜார்ஜ் எல் ஹார்ட் இந்தியச் செவ்வியல் மொழிகள் பற்றிச் சொன்ன ஒரு குறிப்பை அண்மையில் ரவிக்குமார் தனது நிறப்பிரிகை என்னும் வலைப்பூவில் ஆங்கிலத்தில் பதிவு செய்துள்ளார். அதன் தமிழ் வடிவம் பலருக்கும் படிக்கக் கிடைத்தால் நல்லது என்பதால் தமிழாக்கிப் பதிவு செய்துள்ளேன்.

பாடத்திட்ட உருவாக்கமும் பங்கேற்பு அரசியலும்

படம்
இந்திய அளவிலான பள்ளிக்கல்விப் பாடத் திட்டத்தில் இடம்பெற்ற இரண்டு கேலிச் சித்திரங்கள் கண்டனத்திற்குள்ளானதை நாம் அறிவோம். அதே நேரத்தில் தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகம் ஒன்றில் இடம் பெற்றதாகச் சொல்லப்பட்ட சிறுகதை ஒன்றும் கண்டனத்தைச் சந்தித்தது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பட்டப்படிப்புக்கான பகுதி -1 (தமிழ்) பாடத்தில் இடம் பெற்ற டி. செல்வராஜின் நோன்பு சிறுகதை அது.

வந்தார்கள்; வென்றார்கள்; செல்லவில்லை

படம்
ஆதியிலே வார்த்தை இருந்தது; அது தேவனாயிருந்தது; தேவனோடு இருந்தது என ஆதியாகத்தின் முதல் வசனம் ஆரம்பிப்பது போலச் சில வரலாற்று நூல்களில், “ஆதியிலே பாரதவர்ஷம் என்றொரு கண்டம் இருந்தது; அக்கண்டத்திற்குள் 56 தேசங்கள் இருந்தன; அத்தேசங்களின் ராஜாக்கள் அவ்வப்போது நடக்கும் சுயம்வரங்களில் தலையை நீட்டுவதற்காக வரிசையில் நிற்பார்கள் எனப் பலரும் படித்திருக்கலாம். படிக்கவில்லை என்றால் பழைய புத்தகக் கடைகளில் கிடைக்கும் பெரிய எழுத்துக் கதைகளை வாங்கிப் படித்துக் கொள்ளுங்கள்.- வாசித்து விட்டு இவையெல்லாம் கற்பனையான புராணங்கள் தானே; எப்படி வரலாறு ஆகும் எனக் கேட்கலாம். புராணம், புனைகதை, வரலாறு என்பனவற்றிற்குப் பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதால் அவற்றைப் புராணங்கள் சார்ந்த வரலாற்று நூல்கள் என வகைப் படுத்திக் கொள்ளுங்கள். வேறு வழியில்லை.

தமிழில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள்- முன்னும் பின்னும்

படம்
தமிழில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு பல்வேறு திசை வழிகளில் சென்று கொண்டிருக்கிறது.நாட்டார் வழக்காற்றியலைப் பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள் உள்ளிட்ட வாய்மொழி மரபு (Oral Tradition) எனவும், சடங்கு சார்ந்த, பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த கூத்து, ஆட்டமரபுகள் அடங்கிய கலைகள் (Folk Arts) எனவும், சமய நம்பிக்கையோடு, பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகள், அவை சார்ந்த நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், ஊர்ப்பெயர், மக்கட்பெயர் உள்ளிட்ட பண்பாட்டுக் கோலங்கள் (Customs and Manners) எனவும் பகுத்துக் கொண்டு ஆய்வுகள் நடைபெறுகின்றன. முறைப்படுத்து வதற்காகவும், ஆய்வு முறைகளுக்காகவும், இப்படிப் பிரிக்கப்பட்டாலும் நாட்டார் வழக்காற்றியல் அனைத்திற்கும் பொதுவான கூறு ஒன்று உண்டு. நிலம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்ட மக்களின் வாழ்க்கை முறைகளிலிருந்து பிரிக்க முடியாதவை இவ்வழக்காறுகள் என்பதுவே அப்பொதுக்கூறு.

நாட்டுப்புற இயலைச் சுற்றி

படம்
தேசப்பற்று, தேசிய ஒருமைப்பாடு, வலிமையான பாரதம் எனத் தனக்குப் பிடித்தமான கருத்தியலின் நோக்கிலிருந்து ஆய்வுகளின் பின்னணி நோக்கங்களைக் கேள்விக்குள்ளாக்கும் ஜெயமோகனோடு ஒன்றுபட்டும் முரண்பட்டும் நிற்கும் இந்தக் கட்டுரை ஆறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. தீம்தரிகிட இதழில் வந்த கட்டுரையைச் சூழலின் தேவை கருதிப் பதிவேற்றம் செய்கிறேன்.

பாடத்திட்டம்: பாஸ்டன் பாலாவின் கேள்வி: எனது பதிலும் விளக்கங்களும்

படம்
எனது முகநூல் சுவரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியாகத் தினத்தந்தியின் செய்தி ஒன்று இருந்தது. அதை எனது சுவரில் ஒட்டிய பாஸ்டன் பாலா என்பவர், ” இது குறித்து தங்கள் எண்ணம்   என்ன ? ”  என்று கேட்டிருந்தார். http://www.dailythanthi.com/article.asp?NewsID=740129&disdate=6%2F26%2F2012   பாஸ்டன் பாலா ! உங்கள் கேள்விக்கு முதலில் எனது கருத்தைச் சொல்லி விடுகிறேன்:   ” நவீனத்துவ அடிப்படைகளற்ற நம்பிக்கைகள் சார்ந்து எழுப்பப்படும் கண்டனங்கள் ஏற்கத்தக்கன அல்ல என்பது என்னுடைய பொதுவான கருத்து. ’ பக்தர்களின் ” நம்பிக்கைக்கும் , ” பாட்டாளி மக்களின் ” ” தார்மீகக் கோபத்திற்கும் ,   ஆதிக்கக் குழுமங்களின் ” கண்ணசைப்புக்கும் ஏற்பப் பாடத்திட்டத்தை அமைப்பது என முடிவு செய்து விட்டால் பாடத்திட்டம் உருவாக்குவது சாத்தியமில்லாமலே போய்விடும் என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

மீட்டெடுக்க வேண்டிய தனித்தன்மை

படம்
நம்முன் நிகழும் நிகழ்வுகளுள் எவை நம்பிக்கை சார்ந்தவை? எவை பாவனை சார்ந்தவை எனக் கண்டுபிடிப்பது எல்லோருக்கும் சுலபமல்ல. அப்படிக் கண்டு பிடிப்பதில் தேர்ந்தவர்களும் கூட தொடர்ச்சி யான கவனிப்பின் மூலமே சாத்தியப் படுத்து கின்றனர். சாத்தியப்படும் நிலையில் சிலவற்றை நம்பிக்கைகள் என்கிறார்கள்; சிலவற்றைப் பாவனைகள் என்கின்றனர். நம்பிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன; பாவனைகள் அம்பலமாக்கப்படுகின்றன.

ஆவணப்படுத்துதலின் அரசியல்: நகரும் நாட்டுப் புறங்கள்

முன்குறிப்பு : திரும்பவும் எழுத வந்துள்ள விமலாதித்த மாமல்லன் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் நடந்த இலக்கிய சர்ச்சைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார். வலைப்பூவிலும் முகப்பனுவலிலும் அவர் தட்டிவிடும்   ஒவ்வொன்றும் மைய உருவாக்கத்தை அழிக்கும் தடாலடியாக இருக்கிறது. அவர் வேகத்திற்கோ, அவரோடு மோதும் எழுத்து ஜாம்பவான்களின் வேகத்திற்கோ ஈடுகொடுக்கும் வேகம் என்னிடம் இல்லை.   எம்.டி.முத்துக் குமாரசாமியின் தேசிய நாட்டுப் புறவியல் மையம் செய்து வரும் ”ஆவணப்படுத்துதலின் பின்னணிகள்” பற்றிய குறிப்பொன்றை எழுதியுள்ளார். மிரட்டிப் பணிய வைப்பது அல்லது பணம் கரந்து விடுவது என்பது மாமல்லனின் நோக்கமாக இருக்கலாம்   என அந்தக் குறிப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கும் எம்.டி. எம்.மின் கூற்று அங்கதத்தின் உச்சம் என நினைத்துக் கொண்டிருந்த போது, ஆவணப்படுத்துதலில் ’சந்தேகங்கள் எழுப்ப வேண்டியதில்லை’ என, அப்பாவியாகக் கருத்து சொன்ன ராஜன்குறை விலா நோகச் சிரிக்க வைத்துவிட்டார். தன்னை மானுடவியல் மாணவர் எனச் சொல்லும் ராஜன்குறை அதிலிருந்து தோன்றிய நாட்டுப்புறவியலைத் தனக்குச் சம்பந்தம் இல்லாத துறையாகச் சொன்னது கண்ணில் நீரை வரவழைத்த

அறிவுசார் மண்டலம் என்னும் கனவு.

படம்
நெருக்கடிகள் எப்போதும் நினைப்புகளையும் கனவுகளையும் தான் குறி வைக் கின்றன. சென்னை கொட்டிவாக்கம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை ஒருமுறை பார்த்து விட்டு வார்சா வர வேண்டும் எ ன்பது நினைப்புகளில் ஒன்று. அந்த நினைப்பு புதிதாகத் தோன்றிய ஒன்றல்ல; அதன் வயது மூன்று. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அப்படியொரு நினைப்புத் தோன்றக்காரணம் எனது புத்தக ஆசையோ! படிக்கும் விருப்பமோ அல்ல. அரசின் செயல்பாடு தான் காரணம். அப்படியொரு நம்பிக்கையை ஏற்படுத்திய அரசுச் செயல்பாடு வேறொன்றும் அதற்கு முன்பு ஏற்பட்டதில்லை.  

சிங்கத்திடமிருந்து தலைவரை யாராவது காப்பாற்றுங்கள்

படம்
தமிழ்நாட்டில் பேராசிரியராக இருந்து தமிழைக் கற்றுத் தந்தேன். ஆனால் வார்சாவில் வருகைதரு பேராசிரியராக வந்து தமிழைச் சொல்லிக் கொடுக்கிறேன். ஆம்,”கற்றுத் தருதல்” ”சொல்லித் தருதல்” என்ற இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து கவனமாகவே சொல்கிறேன். வார்சாவில் எனது வேலை போலந்து மாணவ, மாணவிகளுக்குத் தமிழ் பேசக் கற்றுக் கொடுப்பதுதான். மாணவ, மாணவிகள் என்று சொல்வதற்குப் பதிலாக மாணவிகள் என்றே குறிப்பிடலாம். ஒன்பது பேரில் ஒருவர் மட்டுமே மாணவர்; எட்டுப்பேர் மாணவிகள்.  

கடந்த காலத்திற்குள் பதுங்கி இருக்கிறது இந்தியவியல்

படம்
பல்கலைக்கழக நுழைவு வாயில் போலந்து வந்த மூன்றாவது நாளில் நான் பணியாற்றும் இந்தியவியல் துறையின் தலைவர் பேரா . டேனுடா ஸ்டாசிக் கொடுத்த அழைப்பிதழ் தமிழ்நாட்டு நினைவுகளைக் கொண்டு வந்து சேர்த்தது. பாண்டிச் சேரி பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பொறுப்பேற்று நண்பர் குணசேகரன் தலைமையில் ஏற்பாடு செய்த அரங்கியலாளர் சந்திப்பு தொடங்கி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடத்திய தலித் எழுத்தாளர் சொற்பொழிவு வரிசை, செவ்வியல் கவிதைகளோடு நவீன கவிகளை உறவாட வைத்த பத்துநாள் பயிலரங்கு வரை ஒவ்வொன்றும் வந்து போய்க் கொண்டே இருந்தன.

கல்வியில் கொள்கையின்மை

நிகழ்கால வாழ்க்கைமுறை ஒவ்வொரு மனிதரையும் பலரையும் சார்ந்து வாழ வேண்டிய நெருக்கடியைத் தந்துள்ளது. சார்ந்து வாழ்தலின் முதல்படி, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளுதல். தன்னை வெளிக்காட்ட -தனது கருத்தை நிதானமாகவும் செம்மையாகவும் எடுத்துச் சொல்லப் பேச்சை விடவும் எழுத்து முறை கூடுதலாக உதவும். அனைவருக்கும் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என நினைப்பதில் பின்னணியில் இத்தகைய காரணங்களே இருக்கின்றன.

உயர்கல்வி சந்திக்கும் சிக்கல்கள்

உயர்கல்வியில் காலத்தின் தேவைக்கேற்பச் செய்ய வேண்டிய அனைத்து மாற்றங்களையும் செய்வதற்கு தேசிய அளவிலும் மாநில அளவிலும் அமைப்புகள் இருக்கின்றன. பல்கலைக்கழக மானியக்குழு, மாநில உயர்கல்வி மன்றம், அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி மன்றம் போன்ற பெயர்களில் இயங்கும் இந்த அமைப்புகளே அவ்வப்போது பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான வழிகாட்டு நெறிகளையும் விதிகளையும் உருவாக்கித் தருகின்றன. பல்கலைக்கழகங்கள் அவற்றை உள்வாங்கிக் கொண்டு அவை இயங்கும் வட்டாரத்திற்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்குவது, தேர்வுகளை நடத்துவது, பட்டங்களை வழங்குவது எனப் பணிகளைச் செய்கின்றன. இப்பணிகளைச் செய்ய ஒவ்வொரு அமைப்பிலும் நியமன உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுமாக கல்விநிலைக்குழு, ஆட்சிப்பேரவை, ஆட்சி மன்றக்குழு எனச் சிற்றதிகாரம், பேரதிகாரம் நிரம்பிய அமைப்புகள் செயல்படுகின்றன. அவற்றின் தலைவராக இருப்பவர்களே துணைவேந்தர்கள்.

கலைப்பாடங்களின் அழிவு

ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்னும் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் கற்றுத்தந்த பாடங்கள் மூன்று பெரும் பிரிவுகளாகவே இருந்தன, இன்றளவும் கூடப் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் அறிவியல் புலம், சமூக அறிவியல் புலம், மொழிப்புலம் என மூன்று புலங்கள் தான் இருக்கின்றன.ஆனால் இம்மூன்று புலங்களும் பல்வேறு துறைகளைக் கண்டறிந்து வளர்ச்சி பெற்ற நிலையைத் தொண்ணூறுகள் வரை ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் காண முடியும்,