இடுகைகள்

தே.த.நு.தே.(NEET) சில குறிப்புகள்

குறிப்புகள் தான்; கட்டுரை அல்ல இந்திய அரசாங்கம் ஒத்துக்கொண்ட ஒதுக்கீடுகள் அல்லது பங்கீடுகள் பலவிதமானவை. சாதிக்குழுக்கள், அரசுகள், பாலினம், அரச சேவைக் குழுவினர் என நுட்பமான சொல்லாடல்கள் அதற்குள் செயல்படும்.தேசிய திறனறி நுழைவுத்தேர்வு இப்போதிருக்கும் சாதிக்குழுமங்களின் அடிப்படையிலான இட ஒதுக்கீட்டையோ ( 31 +30+20+19), மத்திய- மாநில பங்கீட்டையோ (15 +85) அசைத்துப் பார்க்கப்போவதில்லை. இவ்விரு பங்கீட்டைத் தவிர பெண்களுக்கென 33 சதவீதப்பங்கீடும், முன்னாள் ராணுவத்தினருக்கென 10 சதவீதப்பங்கீடும் இருக்கின்றன.இவைபற்றிப் பேச்சையே காணோம். பள்ளிக்கல்வியில் ஒருவர் கற்ற கல்விமுறையையும் தேர்ச்சிமுறையையும் முற்றிலும் புறக்கணித்துவிட்டுச் சிறப்புப்பயிற்சிகள் வழியாக, தே.த.நு.தே.(NEET)வை எதிர்கொண்டு இடம்பிடிக்கச் சொல்லும் இம்முறை, இந்தியாவிலிருக்கும் நகர்ப்புறச் சூழல் - கிராமப்புறச் சூழல் என்ற பாரதூரமான வேறுபாட்டையும், பணமுடையவர் - பணமற்றவர்கள் என்ற வேறுபாட்டையும் கவனத்தில் கொள்ளவில்லை. அப்படியான வேறுபாடுகள் இருக்கின்றன; அதைக்களைய வேண்டிய தேவை இருக்கிறது என்பதைக் கணக்கில் கொள்ளவில்லை. ”அவையெல்லாம் இருக்கும்

கல்விச்சந்தை - 2023

படம்
எண்பதுகளில் கல்வியைக் குறிக்கும்போது சந்தை அதனோடு இணையும் சொல்லாக இருந்ததில்லை. இப்போது எல்லாத் துறைகளோடு சந்தை இணைந்துவிட்டது. மருத்துவம், பொழுதுபோக்கு, வேளாண்மை என எல்லாமே சந்தையின் தேவைக்கானதாக மாறிவிட்டன. கல்வியும் இப்போது கல்விச்சந்தை என்ற சொல்லோடு சேர்ந்தே குறிப்பிடப்படுகின்றது.

சொல்வது நட்புக்காக மட்டுமல்ல

படம்
நான் இதையே சமகால வரலாறு,இலக்கியம் என்பேன்.தொடர்ந்து பேரா.அ.ராமசாமி எல்லா துறை சார்ந்த விசயங்களிலும் ஆர்வமும்,அறிவும் ஊட்டும் வகையில் எழுதி வருகிறார்.விமர்சகர் என்பதை தாண்டி அவரின் சமூக அரசியல், கல்வி, பாடதிட்டம், தேர்வுகள்,சினிமா,நாடகம்,கலைகள், இலக்கியம் என அனைத்து துறைகளிலும் வகுப்பறைக்கு வெளியே உள்ள சமூக பேராசிரியர்கள்,அறிஞர்கள் பட்டியலில் பேரா.அ.ராமசாமிக்கும் முக்கிய பங்குண்டு. உயர்கல்விக்கு உரிய உருத்தான பேரறிஞர்கள் குழுவோ,வாரியமோ இருந்தால் இவர் அங்கு அங்கீகரிக்கபட வேண்டும். வயது வரம்புக்குட்பட்டவராக இருந்தால் துணைவேந்தராக நியமிக்கலாம். விமர்சகர், சமகால பதிவர் ,திறனாய்வு என்ற வகையில் கண்டிப்பாக சாகித்ய அகாடமி போன்ற உயரிய விருதுகள் வழங்க வேண்டும் கார்த்திக், சீடு, மதுரை

அபிலாஷ்: குடும்ப அமைப்பின் மீதான விமரிசனம்

படம்
இன்று காலை ஒரு பயணத்தின்போது ஹலோ எப்.எம்மில் (106.4) பாடல்களுக்கிடையே நண்பர் அபிலாஷ் சந்திரனோடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நடத்திய உரையாடல்களையும் கேட்டுக்கொண்டே பயணம் செய்தேன். அவர் முகநூலில் எழுதும் ஆண் X பெண் முரண்களை மையமிட்ட உரையாடல்கள். அவரது முகநூல் விவாதங்களை வாசித்தபோது தோன்றிய கருத்துகள், இன்று வானொலி உரையாடலைக் கேட்டபின் கூடுதல் அழுத்தம் பெற்றதால் இப்போது சொல்லத்தோன்றுகிறது.

பத்துத்தலெ :

படம்
இவையெல்லாம் குற்றச்செயல்கள், வெளிப்படும்போது தண்டனைகள் உண்டு எனத் தெரிந்தபின்னும் திட்டமிட்டுச் செய்யும் செயல்களுக்குப் பின்னால் எதிரெதிர்க் கூட்டணிகளின் மறைமுக ஒப்பந்தங்கள் இருக்கவே செய்யும்.மறைமுக ஒப்பந்தங்களைக் கதைப்பின்னலின் ரகசிய முடிச்சுகளாக மாற்றிக் குற்றக்குழு மோதல் ( Gang war )படங்கள் உருவாக்கப் படுகின்றன. ஒவ்வோராண்டும் எடுக்கப்படும் இருபத்திச் சொச்சம் குற்றக்குழு மோதல் படங்களில் ஒன்றாகவே அண்மையில் வந்த ‘பத்துத்தல’ யும் கணிக்கப்பட வேண்டிய படம்.

இந்திரனுக்கு வேர்ச்சொல் தலித் இலக்கிய விருது

படம்
வானம் அமைப்பு முன்னெடுக்கும் நிகழ்வுகள் அடையாள அரசியலோடு தொடர்புடையது.  அடையாள அரசியலுக்கும்  அவைசார்ந்த பண்பாட்டு நடவடிக்கைகளுக்கும் தற்காலிக நோக்கங்கள் மட்டுமே இருக்கும்; இருக்க வேண்டும். எல்லாவகையான அடையாளங்களும் மறைந்து மைய நீரோட்டத்தில் கலக்கும் நாளுக்காகவே உலகம் காத்திருக்கிறது.  அந்த நாளில் மனிதர்களும் மனித மேன்மையும் மட்டுமே மிஞ்சியிருக்கும். இதொரு கனவு தான். என்றாலும் காணவேண்டிய கனவு.

ஆடும் நாற்காலிகள்

படம்
குறுநாவல் மூலம்: ஜெயகாந்தன் நாடக ஆக்கம்: அ.ராமசாமி