இடுகைகள்

முழுமையைத் தவறவிடுகின்றன

படம்
  சில வெற்றிப்படங்களில் - தனித்தன்மை கொண்ட நாயகப்பாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஸ் என்ற நடிகையை மையப்பாத்திரமாக்கி எடுக்கப்பட்டுள்ள டிரைவர் ஜமுனாவும் இணையவெளிப்படங்களின் பொதுத்தன்மையோடுதான் வந்துள்ளது. குறிப்பாகச் சொல்வதென்றால் , முழுமையைத் தவறவிட்ட இன்னொரு படமாகவே இருக்கிறது. தமிழில் எடுக்கப்படும் பெரும்பாலான படங்கள் குற்றப் பின்னணி , ரகசியம் , திடீர் திருப்பம் , எதிர்பாராத முடிவு என்ற கட்டமைப்போடுதான் எடுக்கப்படுகின்றன. அந்தப் பொதுத்தன்மை இந்தப்படத்திலும் இருக்கிறது.

சூழலில் வாழ்தலும் எழுதுதலும்

படம்
அச்சு நூல்களுக்கு இணையாக இணைய இதழ்களையும் வாசிப்பவன். அதன் இடையே முகநூலிலும் நுழைந்து வெளியேறுவதுண்டு. கோவிட் தொற்றுக் காலத்தில் முகநூலில் செலவழித்த நேரம் அதிகம் என்றே சொல்லலாம். முன்பு வாசிக்கக் கிடைத்தது போல முகநூல் கவிதைகள் இப்போது இல்லை என்ற உணர்வு உண்டான நிலையில் தான் முகநூலில் எழுதப்படும் தன் அனுபவக் குறிப்புகளைத் தேடி வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. தன் அனுபவக் குறிப்புகளை எழுதும் முகநூல் பதிவர்களில் பலர் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள், அமைப்புகளில் செயல்படும்போது சந்திக்கும் சிக்கல்கள் எனப் பலவற்றை எழுதும்போது அவற்றை வாசித்தபோது புனைவுகளின் தன்மையை நெருங்குவதைக் கண்டிருக்கிறேன்.

சென்னைப் புத்தகக்கண்காட்சி பரிந்துரைகள் -3

சிறுகதைகள் அறியப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளுக்கு இணையாகப் புதிய எழுத்தாளர்களின் கதைகளை வாசித்த ஆண்டுகளாகக் கடந்த மூன்றாண்டுகளைச் சொல்லலாம். குறிப்பாகக் கோவிட் தொற்றுக்காலம் இணையத்தில் வாசிப்பை அதிகப்படுத்தியிருப்பதால் இந்த மாற்றம் நிகழ்ந்தது என்று சொல்லலாம். 2022 -இல் கடையாக வாசித்த கதைத் தொகுதி ஹேமிகிருஷின் நெட்டுயிர்ப்பு. அதேபோல் தொகுதியின் எல்லாக்கதைகளையும் வாசித்து முன்னுரை எழுதிய தொகுப்புகள்: பிரமிளா பிரதீபனின் விரும்பித் தொலையும் ஒரு காடு, அம்பிகா வர்ஷினியின் சிதைமுகம், எல்லாஅக்கதைகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். இமையத்தின் தாலிமேல சத்தியம் தொகுப்பின் கதைகள் எல்லாவற்றையும் வாசித்திருக்கிறேன். சுஜித் லெனின் தொகுப்பு வந்திருக்கிறது. அவரது பெரும்பாலான கதைகள் வாசிக்கப்பட்ட கதைகள். சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ள தொகைநூலையும் வாங்கி வைத்துள்ளேன். அதில் உள்ள கதைகள் பாதிக்கு மேல் முன்பே வாசித்தவை. இவர்கள் அல்லாமல் யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ள் ---& பிறகதைகள் என்ற வகைமைத் தொகுப்புகளாக 2022 இல் வந்த தொகுப்புகளை வாசித்திருக்கிறேன். இந்த ஆண்டுக்கும் அந்த வகைமைத் தொகுப்புகள் பலவற்றை

சென்னைப் புத்தகக்காட்சிப் பரிந்துரைகள் -2

நாம் எப்படி வாசிக்கிறோம்? வாசிப்புத்தேவைகள் எப்படி உருவாகின்றன? நமது வாசிப்பு விருப்பங்கள் எப்படிப்பட்டவை? வாசித்தவற்றை யாருக்குச் சொல்கிறோம் என்ற புரிதலோடு இந்தப் பரிந்துரைகள்.

புத்தகக்கண்காட்சி-2023/ எனது பரிந்துரைகள் - முதல் தொகுதி

இலக்கியமாணவனாக நினைக்கத் தொடங்கி, இலக்கியத்திறனாய்வு இலக்கியமாணவனாக நினைக்கத் தொடங்கி, இலக்கியத்திறனாய்வு ஆசிரியனாக ஆனவன் நான். சிற்றிதழ் வாசிப்பில் அறிமுகமான க.நா.சு.வும், வெ.சாமிநாதனும் காரணங்களைச் சொல்லாமல் பெயர்களை முன்வைக்கிறார்கள் என்பதை உணர்த்தியவர் சி.சு.செல்லப்பா. அவரது விமரிசனப்பார்வையில் பனுவலுக்குள் நின்று பேசும் ஓர் ஒழுங்கு உண்டு. அந்த ஒழுங்கைத்தாண்டிப் பனுவல்களைச் சூழலில் வைத்து வாசிக்கவேண்டும்; பனுவல்களுக்குள் இருக்கும் தரவுகளையும் நிகழ்வுகளையும் காலப்பின்னணியில் காரணகாரியங்களோடும், தர்க்கபூர்வமாகவும் விவாதிக்க வேண்டும். அதன் மூலம் ஒரு கருதுகோளை நிறுவிக்காட்ட முடியும் என்ற திறனாய்வு முறையியலைக் கற்பித்த முன்னோடிகள் இலங்கையின் பேராசிரியர்கள் க.கைலாசபதியும், கா.சிவத்தம்பியும். அவர்களின் பாதையில் முதன்மையாகக் கல்விப்புலங்களுக்குள் அறிமுகமான தமிழக முன்னோடித் திறனாய்வாளர் கோ.கேசவன். அவரது பள்ளு இலக்கியம் - ஒரு சமூகவியல் பார்வை, மண்ணும் மனிதர்களும் என்ற இரண்டு நூல்களும் வாசிப்புத்திளைப்பை உருவாக்கிய திறனாய்வு நூல்கள். இவை படித்த நூல்கள். படிக்கச் சொல்கிறேன். படித்துப்பாருங்கள்

யாவரும்.காம். நல்ல கதைத்தேர்வுகள்

படம்
பதிவேற்றம் பெற்றுள்ள (2023, ஜனவரி) மூன்று சிறுகதைகள் இவை:           பிரமிளா பிரதீபன் – 1929                     ரம்யா – ட்ராமா குயின்,           வைரவன் -லெ.ரா-பிரயாணம் இம்மூன்று கதைகளையும் ஒரே வாசிப்பில் வாசிக்க முடியவில்லை. எல்லா விதத்திலும் வேறுபாடுகளோடு இருக்கின்றன. 

நாவல் எழுத்து: பெருவெளியும் சிறுவெளியும்

படம்
“உங்கள் வாழ்நாளில் உங்களைப் பாதித்த பெரும் அல்லது நினைவில் இருக்கக்கூடிய நிகழ்வு அல்லது ஆளுமையைப் பற்றிச் சொல்லுங்கள். அரசியல் அல்லது சினிமா சார்ந்த ஆளுமைகளையோ, அவர்களால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகளாக இருக்கக்கூடாது” இப்படியொரு தூண்டுகோலை முன்வைத்து அந்த வகுப்பைத் தொடங்கினேன். பல்கலைக்கழக மானியக்குழுவின் புத்தொளிப்பயிற்சி வகுப்பு அது. நடத்தியது ஒரு பல்கலைக்கழகத்தின் ஆசிரிய மேம்பாட்டிற்கான இயக்குநரகம் என்றாலும் இந்தியாவின் எந்தப் பல்கலைக்கழக எல்லைக்குள் இருந்தும் வந்து கலந்து கொள்ளலாம். ஒரேயொரு வரையறை, அவர்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரியின் தமிழ் ஆசிரியராக இருக்கவேண்டும்; அவர்களுக்கான பணியிடைப் பயிற்சி அது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் டெல்லி, கேரளம், ஆந்திரம் முதலான மாநிலங்களின் கல்லூரிகளிலிருந்தும் மொத்தம் 48 பேர் கலந்து கொண்டிருந்தனர்.