இடுகைகள்

முனைவர் தே.ஞானசேகரன்- கல்விப்புல எல்லைகளைத் தாண்டியவர்.

படம்
இன்று முற்பகலில் (நவம்.24) பேரா.தே.ஞானசேகரனின் மறைவுச் செய்தி அலைபேசி வழியாகவும் முகநூல் குறிப்புகள் வழியாகவும் வந்து சேர்ந்தன. ஓய்வுபெற்று 2 ஆண்டுகள் தான் ஆகின்றன. அதற்குள் மரணம் என்பதை ஏற்கமுடியவில்லை.

வரலாற்றுவாதத்தின் சிக்கல்கள்

மக்கள் உரிமைகளையும் விடுதலையையும் முன்னெடுக்க நினைக்கும் சமுதாய இயக்கங்களும் அரசியல் இயக்கங்களும் வரலாறு படைப்பது பற்றிய அக்கறைகளை விட வரலாற்றைப் பயன்படுத்துவது பற்றியே அதிகம் சிந்திக்கின்றன. கடந்த காலம் தரும் படிப்பினைகள் நிகழ்காலத்தைப் புரிந்து கொள்ளவும் எதிர் காலத்தை வடிவமைக்கவும் உதவும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. தனிநபர் சார்ந்து பல நேரங்களில் இந்த நம்பிக்கை உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் திரள் மக்கள் இயக்கங்கள் முன் வைக்கும் போராட்டங்களுக்கும் விடுதலைக்கும் அது அப்படியே பொருந்தக் கூடியதுதானா? என்பது தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று.

இலக்கியமும் வாசிப்பும் ஏற்பும்.

படம்
‘கவிதைகள் எப்போதும் விற்பனைக்கல்ல;அவரவர் மனத்திருப்திக்கு மட்டும் உரியது’ என்றே தோன்றுகிறது. எப்போதும் கவிதைகள் அச்சிடப்பெற்று வெளியீடுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. முகநூலில் பகிரப்படும் வெளியீட்டு விழா அழைப்பிதழ்கள் வழியாகவே ஒவ்வொரு வாரமும் பத்துக்குக் குறையாமல் கவிதை நூல்கள் வெளிவருவதாக அறியமுடிகிறது. அதே நேரம் நூலகங்களுக்கு நூல்கள் எடுக்கும் நூலக ஆணைக்குழு கவிதைகள் வாங்குவதை நிறுத்தி ஆண்டுகள் பல ஆகிவிட்டன என்ற தகவலும் இருக்கிறது.

தேர்வுமுறைகள் மாற்றப்பட வேண்டும்.

படம்
தேசிய தரமதிப்பீட்டுத் தேர்வு அறிமுகப் படுத்தப்பெற்ற பின்னணியில் தமிழகப் பள்ளிக்கல்வி வாரியம் பள்ளிப்பாடங்களைச் சீரமைப்புச் செய்வது தொடர்பாகவும், தரமுயர்த்துவது தொடர்பாகவும் ஆரம்ப நிலையில் பல்வேறு விவாதங்களை நடத்தியது. மையப் பள்ளிகள் வாரியப் பாடங்கள், சிறப்பான கல்வியை வழங்கும் கேரளப்பள்ளிக் கல்வி வாரியம் மட்டுமல்லாமல், வெளிநாடுகள் சிலவற்றின் பாடத்திட்டங்களையும் பெற்று ஒப்பிட்டுப் பேசினார்கள் கல்வியாளர்கள். ஆரம்ப நிலைப்பேச்சுகள் தாண்டி, பாடங்கள் எழுத வழிகாட்டப்பட்டன. நானும் ஒரு குழுவில் தமிழ்ப் பாடங்கள் எழுதும் குழுவில் இருந்தேன்..

படங்கள் வழி மதுரை நினைவுகள்

படம்
மதுரை என்னுடைய நகரமென்று இப்போதும் சொல்கிறேன். அந்நகரில் இருந்த ஆண்டுகள் குறைவுதான். மாணவனாக விடுதிகளில் 6 ஆண்டுகள் தங்கியிருக்கிறேன். அமெரிக்கன் கல்லூரியில் வாலஸ் விடுதியிலும் வாஸ்பன் விடுதியிலும் 4 ஆண்டுகள். பல்கலைக்கழக விடுதியில் இரண்டு ஆண்டுகள். தொடர்ந்து திருமணம் செய்துகொண்டு ஆய்வு செய்த ஆய்வாளர்களுக்கான குடியிருப்பில் 5 ஆண்டுகள். அதன்பிறகு கே கே நகரில் ஒரு ஒண்டுக் குடித்தனமாக ஓராண்டு. மொத்தம் 12 ஆண்டுகள். ஆனால் எனது கிராமத்திலிருந்து நான் வாழ்ந்த பல நகரங்களுக்கும் போக மதுரைதான் வழி. எனது கிராமம் இப்போதும் மதுரை மாவட்டத்திற்குள் தான் இருக்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஒரு கிளையான வாசிமலையான் கோவில் மலைக்குத் தெற்கே இருக்கும் தச்சபட்டி என்ற அந்தக் கிராமம் அப்போதும் 70 தலைக்கட்டுதான்; இப்போதும் அதே 70 தலைக்கட்டுதான். வளர்ச்சியே இல்லாத கிராமம். அங்கிருந்து மதுரைக்கு வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு காரணங்களுக்குப் போய் வந்திருக்கிறேன். வாழ்ந்திருக்கிறேன். ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக்கட்டமைப்பும் நுட்பங்களும்

படம்
சங்க்ரதாஸ் சுவாமிகளின் 50 நாடகங்களில் 14 நாடகங்கள் அச்சில் கிடைக்கின்றன. கிடைக்கின்ற 14 நாடகங்களையும் வாசித்து முடிக்கின்ற ஒருவருக்கு அவரது நாடகக் கட்டமைப்பு எது எனச் சுலபமாகப் புரிந்துவிடும். “நற்திறக் கட்டமைப்பு“ என்ற எளிமையான வடிவத்தையே சுவாமிகள் தனது நாடக வடிவமாகக் கொண்டுள்ளார். நற்திறக் கட்டமைப்பு அனைத்து நாடகங்களிலும் அமைந்துள்ள விதத்தை விரிவாகப் பார்ப்பதற்குப் பதிலாக அவரது “பிரஹலாதா என்ற நாடகம் எவ்வாறு நாற்திற வடிவக் கட்டமைப்புடன் உள்ளது என்பதைக் காணலாம். இது ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்‘ என்பது போலப் பின்னா் அனைத்து நாடகக் கதைகளோடும் பொருத்திப் பாரத்துக்கொள்ள ஏதுவாக அமையும்.