இடுகைகள்

எஸ்.ரா.வின் ஞாபகக்கல்: நல்லதொரு உருவகக்கதை

படம்
எஸ்.ராமகிருஷ்ணனின் ஞாபகக்கல், பெண்ணென்னும் பொதுப்பெயருக்குரியவளாக இருக்கும் வரை அவளுக்குள்ளிருக்கும் விருப்பங்கள், ஆசைகள், கனவுகள் எல்லாம் குடும்பத்தின் பாத்திரம் ஒன்றைத் தாங்கும்போது தொலைந்துபோகும் மாயத்தை உருவகமாக முன்வைத்துள்ளது. ஆண் முதன்மைக்குடும்ப அமைப்பில் பெண்களின் விருப்பங்களைத் தொலைத்துக்கட்டும் பாத்திரங்களாக மனைவி, அம்மா போன்ற பாத்திரங்கள் இருப்பதைக் கதை விவரிப்பின் மூலம் உணர்த்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். குறிப்பாக இந்தியக் குடும்ப அமைப்பின் மீது நேரடியான விமரிசனத்தைக் கதை முன்வைக்கிறது.

கூட்டம் - ஒற்றை

  கூட்டம்- ஒற்றை . இவ்விரண்டில் எது முந்தியது என்று கேட்டால் ஒற்றையென்னும் தனிமையே முந்தியது எனச் சொல்பவரும் உண்டு. கூட்டமாக இருந்தவர்களே தனியர்களாக மாறினார்கள் என்பவர்களும் உண்டு. ஒன்றுக்குப் பின் உருவானதே இரண்டு, மூன்று, பத்து, நூறு, ஆயிரம், லட்சம், கோடி என்னும் எண்ணுப்பெயர்கள்.

பா.செயப்பிரகாசம் என்னும் தெக்கத்திக்காரர்

படம்
நிலப்பரப்பு சார்ந்தும் சொல்முறைகள் சார்ந்தும் பேசப்பட வேண்டிய கதாமாந்தர்கள் சார்ந்தும் கரிசல் இலக்கியத்தின் எல்லைகளை விரிவுபடுத்தியவர் சூரியதீபன். அந்தப் பெயர் அறிமுகமானது மன ஓசை இதழ் வழியாகவே. ஆனால் அதற்கும் முன்பே பா.செயப்பிரகாசம் என்ற பெயர் அறிமுகம். கரிசல் எழுத்தின் முன்னத்தி ஏராகக் கி.ராஜநாராயணன் பெயரை முதலில் வைத்துத் தொடங்கும் பெரும்பாலான பட்டியல்களில் மூன்றாவதாக வந்து நின்றவர் பா.செயப்பிரகாசம். இரண்டாவது பெயர் பூமணி.

குழுக்கள் - கருத்துகள் - செயல்பாடுகள்

படம்
நிறுவனங்களின் செயல்பாடுகளில் பலதரப்புக் கருத்துகளும் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் குழுக்களை அமைத்தல் நடைமுறைச் செயல்பாடாக இருக்கிறது. அரசர்களின் அதிகாரம் செயல்பாட்டில் இருந்த காலத்தில் அரசர்களுக்கு ஆலோசனைகள் சொல்ல அமைச்சர்கள் குழுக்கள் இருந்தன என்பதை வரலாற்றுக்குறிப்புகள் தருகின்றன. எண்பேராயம், ஐம்பெருங்குழு போன்ற பெயர்களைத் தமிழ்க் கல்வெட்டுகள் சொல்கின்றன. வெவ்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி - நியமனம், குலுக்கல் முறைத் தேர்வுகள் வழியாக உருவான அக்குழுக்கள் ஆலோசனைகளை மட்டுமே வழங்கமுடியும். முடிவு எடுக்கும் - செயல்படுத்தும் அதிகாரம் அரசர்களின் கையில்தான் இருந்தது.

விஜயராவணனின் ஆரஞர் உற்றன கண் : தமிழில் எழுதப்பெற்ற உலகக்கதை

படம்
விஜயராவணனின் கதையில் இடம்பெற்றுள்ள இரண்டு பாத்திரங்களும் தமிழர்கள் அல்ல; தமிழ் நிலப்பரப்புகளோடு தொடர்புடையவர்களும் அல்ல. ஜெர்மனியின் ‘ஸ்டட்கர்ட்’ நகரில் ஆண்டு நிறைவு நாளின் கொண்டாட்டக் காட்சிகளின் பின்னணியில் தற்செயலாகச் சந்தித்த புலம்பெயர்ந்த இளைஞனோடு நட்புக் கொண்டு, அவனோடு தன்னை இணைத்துக் கொண்ட ஹன்னா என்ற ஜெர்மானிய நங்கையின் காதல் கதை எனச் சுருக்கமாக நான் சொல்லிவிட முடியும்.

கோவையில் ஒரு கலைக்கூடம்

படம்
தன்னிடம் ஒரு கலையுணர்வு இருக்கிறது; அதனைப் பொதுவில் வைக்கும்போது முழுமையடைகிறது என்ற நம்பிக்கை இந்திய மனிதர்களிடம் இல்லை. கோ இல்கள் தான் கலை வெளிப்பாட்டுக்களங்களாக இருந்திருக்கின்றன. பண்டைக்காலத்தில் புரவலனை நாடித்தான் புலவர்கள் போய்ப் பாடிப்பரிசில் பெற்றிருக்கிறார்கள். கூத்தரும் பொருநரும் விறலியரும் பாடினிகளும் ஆற்றுப் படுத்தப்பட்ட விதங்களைத் தமிழிலக்கியங்கள் சாட்சிப்படுத்துகின்றன. புரவலன் இல்லையென்றால் இறைவன். இறைவன் இருப்பதாக நம்பும் இடத்தில் நின்று நெக்குருகிப் பாடியிருக்கிறார்கள்.

நாடகங்களின் ஊடாகப் பிரபஞ்சனின் படைப்புத்தளம்

படம்
படைப்பு- படைப்பாளர் உறவு கதாபாத்திரம் ஒன்றின், அல்லது நிகழ்வு ஒன்றின், அல்லது இருப்பு ஒன்றின், அல்லது இருப்பின்மை ஒன்றின் – இப்படி எல்லாவிதமான ஒன்றுகளின் மீது கருத்தை, எண்ணத்தை, புன்சிரிப்பை, ஏளனத்தை, ஏக்கத்தை, மனநிறைவைப் பதிவு செய்து விட வேண்டும் என்று தோன்றும்பொழுது படைப்புச் செயல் தொடங்குகிறது. படைப்பாளி அவற்றின் கால நீட்டிப்பையும், வெளியின் விரிவையும் தடுத்து நிறுத்தி, தனது குறிப்பை அதன் மீது ஏற்றிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறான். படைப்புச் செயல் நிறைவடைகிறது.