இடுகைகள்

காலத்திற்கேற்ற தமிழ் இலக்கியக்கல்வி

படம்
  காலத்திற்கேற்பவும் மாணாக்கர்களின் வேலை வாய்ப்பை நோக்கமாகவும் கொண்டு தமிழ் இலக்கியக் கல்வியை மாற்றும் திட்டத்தை முன்வைத்துப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. பன்முகக்கலை அறிவியல் கல்லூரி (Liberal Arts and Science) என்ற பெயருக்கேற்ப அதன் பட்டப்படிப்புகளை வேலைவாய்ப்புள்ள பட்டப்படிப்புகளாக வடிவமைத்துள்ளது   குமரகுரு கல்வி நிறுவனங்களில் கலை அறிவியல் கல்லூரி.     

மனையுறைச் சேவலும் பேடும்

படம்
  பொழுது புலர்ந்தது. சொல்லிவிட்டுச் சேவல் பேடுடன் தனக்கான இரையைத் தேடி இறங்கிவிட்டது. முருங்கை மரத்தின் இலைகளிலிருந்தும் பூக்களிலிருந்தும் காய்களிலிருந்தும் விழுந்து பரவியிருக்கும் தேன் துளிகளையொத்த சிறுதானியங்களைத் தேடி உண்கின்றன இரண்டும். இவ்விரண்டும் மனையுறைவாசிகள்.

கறுப்புமில்லை-வெளுப்புமில்லை: வண்ணங்கள்

படம்
நயன்தாரா - விக்னேஷ் திருமணம் சமூக ஊடகங்களின் பெரும்போக்காக -ட்ரெண்டாக உருட்டப்பட்டன. இரண்டு நாளைக்கு முன் கமல்ஹாசன் நடித்த விக்ரம்- 2 என்ற சினிமாவின் உருவாக்கமும் அது உண்டாக்கிய உணர்வுகளும் உருட்டல்கள். அதற்கு முன் கலைஞர் பிறந்தநாள். எழுத்தாளர்களுக்கு வீடு வழங்குதல். இப்படியான உருட்டல்களால் சமூக ஊடகங்களின் இருப்பு தவிர்க்க முடியாதனவாக மாற்றப்படுகின்றன. மாற்றப்படும் நிகழ்வுகளைக் கவனித்தால் அவற்றிற்குப் பேருருத்தன்மைகள் இருப்பதைக் கவனிக்கலாம்.

அ.ராமசாமியின் விலகல் தத்துவம் - தேவி பாரதி

  ஒன்று ஏறக்குறைய இருபதாண்டுகளுக்குப் பிறகு கைகூடும் கனவு அது.

இன்னொரு திருப்பம்; இனியொரு பாதை

படம்
திருவள்ளுவராண்டு 2053 வைகாசி மாதம் ஒன்பதாம் நாள் 2022, (2022, மே, 23) கோயம்புத்தூர், குமருகுரு கல்வி நிறுவனங்களில் அமைந்துள்ள தமிழியல் கல்விப் புலத்தின் முதன்மையர் (இணை) என்ற பொறுப்பில் இணைந்துள்ளேன்.  2019, ஜூன் 30 ஆம் தேதி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றபின் சில சுற்றுலாக்களை முடித்துவிட்டு ஏதாவதொரு கல்வி நிறுவனம் அல்லது கலையாக்க நிறுவனத்தில் இணைந்து பணியாற்றவே நினைத்திருந்தேன்.

கதையல்ல வாழ்க்கை- நாடகமல்ல; கதை நிகழ்வுகள்

படம்
முன்னறிவிப்பு ‘தன்னுடைய ‘ஆஃபர், மணலூரின் கதை, வீடும் கதவும், நன்மாறன் கோட்டைக்கதை’ என்ற நான்கு சிறுகதைகளையும் இணைத்துக் “கதையல்ல வாழ்க்கை” என்ற தலைப்பில் பிரசன்னா ராமசாமி நாடகமாக்கிக் கொண்டிருக்கிறார். வாய்ப்பிருந்தால் வந்து பாருங்கள்’ என்ற தகவலை அனுப்பியிருந்தார் இமையம். அந்த நான்கு கதைகளையும் அச்சில் வந்த போதே வாசித்தவன். திரும்பவும் அந்த நான்கு கதைகளையும் எடுத்து வாசித்தேன்.