இடுகைகள்

பின்காலனிய மனநிலையும் பெரியாரின் பெண்கள் குறித்த சிந்தனைகளும்

படம்
  இந்திய சமூகம் விடுதலைக்குப் பிந்திய காலகட்டத்து மனிதர்களால் நிரம்பிக் கொண்டிருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தினர் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருககிறார்கள் என்றாலும், இன்றைய இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஐந்து பங்குப் பேர் 1947 க்குப் பின் பிறந்தவர்களாக இருக்கிறார்கள் எனக் கணக்கெடுப்பு சொல்கிறது. இன்று எழுபத்தைந்து வயதைத் தாண்டிய சிலருக்குக் காலனிய ஆட்சிக்கெதிராக நடந்த போராட்டங்களின் நிழல் படிந்த ஞாபகங்கள் நினைவில் இருக்கலாம். ஆனால் 2000 க்குப் பிந்திய இந்திய சமூகம் என்பது முற்றிலும் வேறானதாக இருக்கிறது. ஐரோப்பிய மனநிலையை நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ தனக்குள் உள்வாங்கியதாகவே இந்தியத் தன்னிலை அல்லது தமிழ்த் தன்னிலை என்பது உருவாகி இருக்கிறது. இது நிகழ்கால இருப்பு

தமிழர்களின் வாரக்கடைசிகள்

படம்
  உலகத் தமிழர்களின் பொழுது போக்குகளில் முதலிடத்தில் இருப்பவை தொலைக் காட்சிகள். அவற்றுள் வாரக் கடைசிக்கான நிகழ்ச்சிகளைக் கலவையாகத் தருவதின் மூலம் பார்வையாளத் திரளைத் தன்வசப்படுத்திய அலைவரிசை ஸ்டார் விஜய்.

திறந்தே கிடக்கும் பின்வாசல்கள்

படம்
சொந்த வீட்டுக் கனவு இல்லாத மனிதர்கள் இருக்க மாட்டார்கள். அதிலும் கனவுகளை நிறைவேற்றிப் பார்க்கும் வாய்ப்புள்ள நடுத்தரவர்க்க மனிதர்களுக்கு சொந்த வீட்டுக் கனவு நிறைவேறத்தக்க கனவு என்பதிலும் ஐயமில்லை. சொந்த வீட்டுக் கனவை நிறைவேற்றும் போது முன்வாசல் வைத்துக் கட்டுவதோடு இன்னொரு வாசலையும் வைத்துக் கட்டுகிறார்கள்; அந்த வாசல் வீட்டின் முன்வாசலுக்கு நேரெதிராகப் பின்புறம் இருக்க வேண்டும் எனப் பார்த்துக் கொள்கிறார்கள். இதனை நம்பிக்கை சார்ந்தது என்று சொல்வதா?தேவை சார்ந்தது சொல்வதா? என்று விளக்குவதா எனத் தெரியவில்லை.

விலக்கப்படும் நந்திகள்

படம்
தேர்தல் வழியாகத் திரும்பவும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். இந்தக் குறுகிய காலத்தில் அதன் செயல்பாடுகள் சில, தமிழகத்தின் பெரும்பான்மை மக்களால் ஏற்புடையனவாக மாறிக் கொண்டிருக்கின்றன. தனது தேர்தல் வாக்குறுதிகளாகத் தந்த இலவசங்கள், கரோனாப் பெருந்தொற்றைச் சமாளித்தல் போன்றனவற்றிற்காகக் கிடைக்கும் பாராட்டுகளும் ஏற்புகளும் பொதுப்புத்தி சார்ந்தவை. அவற்றைத் தாண்டித் திராவிட இயக்கங்களின் கருத்தியல் சார்ந்த முன்னெடுப்புகளும் கவனிக்கப்படுகின்றன; பாராட்டப்படுகின்றன என்பதே இப்போதைய விவாத மையம்.

ஒக்கூர் மாசாத்தியின் கவிதைகளில் நடத்தை உளவியல்

முன்னுரை: ஐரோப்பியர்கள் அனைத்துச் சொல்லாடல்களையும் அறிவியலின் பகுதியாக பேசத் தொடங்கிய காலகட்டம் 18 ஆம் நூற்றாண்டு. தொழிற்புரட்சிக்குப் பின்பு மதத்தின் இடத்தைப் பிடித்த அறிவுவாதம், தர்க்கம் என்னும் அளவையியல் வழியாக ஒவ்வொன்றையும் விளக்கிக் காட்டியது. மனிதனின் மனச் செயல்களை விளக்கமுடியாத ஒன்றாகவும், காரணகாரியங்களுக்கு உட்படாத ஒன்றாகவும் இருந்த போக்குக்கு மாறாக அதனைச் சமூக உளவியலின் ஒரு பகுதியாகப் பேசி விளக்கிக் காட்டியது.

பட்டினப்பாலையில் புழங்குபொருட் பண்பாடு

முன்னுரை ஒரு மனித உயிரி தனது வாழ்தலுக்காக அளிக்கப்பெற்றதாக நம்பும் காலத்தின் ஒரு பகுதியை தன்னை வந்தடையும் ஒரு பிரதியை வாசிப்பதற்காக ஒப்புக் கொடுத்து வாசிக்கும்போது வாசகராக ஆகிறார். பிரதி வாசிக்கப்படும் நோக்கத்திலிருந்து வாசிப்பவர்களின் அடையாளம் உருவாகிறது. நோக்கம் அற்ற வாசிப்பும் கூட வாசிப்பு தான்.

கையறு நிலையின் கணங்கள்

படம்
 இந்த ஆண்டு( 2021) இல் வெளிவந்த   கவிதைத் தொகுதிகள் இரண்டு அடுத்தடுத்து வாசிக்க க் கிடைத்தன. முதலில் வாசித்தது ரூபன் சிவராஜா வின் எழுதிக் கடக்கின்ற தூரம். இரண்டாவதாக வாசித்தது சுகன்யா ஞானசூரி யின் நாடிலி. எழுதியவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாமலேயே கூட இந்தக் கவிதைத் தொகுதிகளின் தலைப்பை   வைத்துக் கொண்டு கவிதைகள் எழுப்பப் போகும் சாராம்சத்தைப் பேசிவிடலாம்.