இடுகைகள்

தி.க.சண்முகத்தின் நாடகவாழ்க்கை

படம்
வரலாற்றை எழுதிவைக்கவும், வரலாற்றை எழுதுவதற்கான தரவுகளைத் தொகுத்து வைக்கவும் தவறிய சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்துவந்துள்ளது. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நிலப்பரப்பான தமிழ்நாட்டின் வரலாற்றை எழுதுவதற்கான போதிய அடிப்படைச் சான்றுகளைத் தேடும் பணிகளே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நாட்டு வரலாற்றைத் தாண்டி கலை இலக்கிய வரலாறுகளை உருவாக்குவதற்கான தரவுகளைத் தேடுவதோடு ஓர்மையுடன் எழுதவேண்டும் என்ற அக்கறைகளும் குறைவாகவே உள்ளன. எழுத்துக்கலைகளான கவிதை, கதை, கட்டுரை போன்றவற்றின் வரலாற்றை உருவாக்குவதற்கு அந்தந்த வடிவங்களில் எழுதப்பெற்ற பனுவல்கள் நூலகங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தேர்ந்த வரலாற்றாய்வாளர்கள் முறையான இலக்கியவரலாறுகளை எழுதிவிடமுடியும்.

உலகின் தலைசிறந்த தேநீர்

படம்
தேநீர் குடிக்கத் தொடங்கிய காலத்திலேயே தேயிலைக் காடுகளைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கியது எங்களூரின் மலைக்காரர் குடும்பம். ஒரு பஞ்ச காலத்தில் பிழைப்புத் தேடி மூணாறு மலைத் தேயிலைத் தோட்டத்தில் வேலைக்குப் போனவரின் அடுத்த தலைமுறையினர் திரும்பவும் ஊரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர். அப்போது நேரடித் தேயிலையை ஊருக்கு அறிமுகம் செய்தார்கள். அவர்கள் வீட்டுத் திருமணம் ஒன்றிற்கு மூணாறுக்கும் மேல் விரியும் தேயிலைக் காடுகளில் ஒருவாரம் தங்கியிருந்த நாட்கள் தேயிலைச் செடிகளைப் பார்க்கும் ஆர்வத்தை எப்போதும் தூண்டக்கூடியன. திருநெல்வேலியில் இருந்த காலத்தில் ஊத்துக்குச் செல்லும் அரசு பேருந்தில் ஏறி மாஞ்சோலைக்குச் சென்று திரும்பி விடலாம். அதைவிட்டால் செங்கோட்டை வழியாகக் கேரளத்திற்குள் நுழையும் பாதையில் தேயிலைக் காடுகளைப் பார்க்கலாம்.

போர்க்காலச் சுமைகள்

படம்
பிரான்சிலிருந்து பதிவேற்றப்படும் நடு இணைய இதழின் 40 வது இதழில்( பங்குனி 2021 ) கறுப்பு சுமதி எழுதிய அந்தக் கதையைப் படித்தவுடன் ஈழவாணி தொகுத்த காப்பு தொகுதியில் இடம்பெற்ற ஒரு கதை நினைவில் வந்தது. இலங்கைப் பெண் படைப்பாளர்களின் சிறுகதைகள் எனத் துணைத்தலைப்பிட்ட அந்தத் தொகை நூலில் யோகேஸ்வரி சிவப்பிரகாசம் தொடங்கி, ஜெயசுதா பாபியன் வரையிலான 41 தமிழ்ப் பெண் படைப்பாளிகளின் கதைகளும் ஐந்து சிங்களப் பெண் எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புக் கதைகளும் உண்டு.

தமிழ் ஆர்வலன் அல்ல.

படம்
 இந்த விவாதம் ஒரு முகநூல் பின்னூட்ட விவாதம் தான். ஆனால் அதனைப் பலரும் விரும்பியிருந்தார்கள். இதனைச் சமூக ஆர்வலர், சினிமா ஆர்வலர், கலை ஆர்வலர் என ஒருவருக்கான அடையாளமாகச் சொல்லும்போதும் கவனிக்கவேண்டிய எச்சரிக்கை என்றே நினைக்கிறேன். இனி விவாதத்திற்குள் செல்லலாம தமிழில் வழிபாடு (அர்ச்சனையோ, பூஜையோ அல்ல) ***** தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தை நீங்கள் வரவேற்கிறீர்களா? ஒரு தமிழ் ஆர்வலராக உங்கள் பதில் என்ன? - தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றின் செய்தி சேகரிப்பாளர் தொலைபேசியில் கேட்டார்.

சங்கப் பெண்கவிகளின் கவிதையியல்

  கவிதையியல் என்னும் கலைக்கோட்பாடு : ஓரு படைப்பாளி அல்லது ஓர் இலக்கிய இயக்கம் பின்பற்றும் படைப்பியக்கத்தைக் குறிக்கும் சொல்லாகவே கலைக் கோட்பாடு என்னும் பொதுவரையறை அர்த்தம் பெற்றுள்ளது . பொதுவரையறையின் அர்த்தம் கவிதையியல் என்னும் அதன் கூறுக்கும் பொருந்தும் . நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழில் கவிதையியல் என்பதற்கும்   இலக்கியக் கோட்பாடு என்பதற்கும் பெரிய வேறுபாடுகள் இருந்ததில்லை . ஐரோப்பியர்களின் வருகைக்கும் பின்னால் சில மாற்றங்கள் உள்ளன என்றாலும் கவிதையியலும் இலக்கியக் கோட்பாடும் நேரெதிரானவை அல்ல . இலக்கியக் கோட்பாடு முதன்மையாகக் கருதுவது படைப்பியக்கத்தை ; படைப்பியக்கம் முதன்மையாக முன் வைப்பது படைப்பு சார்ந்த நுட்பங்களை . படைப்புப் பொருள் , படைப்புமுறை , படைப்பு நோக்கம் என படைப்பு நுட்பங்கள் விரியக் கூடியன . படைப்பு சார்ந்த இவையெல்லாம் படைப்பில் வெளிப்படுகின்றன என்று காட்டுவது மட்டுமல்லாமல் , அதன் நுகர்வோராகிய வாசகர்களிடம்   சென்று சேர்வதில் தான் படைப்பியக்கம் முழுமை அடைவதாக அண்மைக்காலத் திறனாய்வுகள் பேசுகின்றன .

எழுதத்தூண்டும் கதைகள் –1

படம்
வாசித்து முடித்தவுடன், இதுபோன்றதொரு பனுவலை இதே வகைப்பாட்டில் வாசித்திருக்கிறோம் என்று தோன்றினால் அதைக் குறித்துக்கூட வைத்துக்கொள்ளத் தோன்றுவதில்லை. அதற்குப் பதிலாக அந்தப் பனுவலின் ஏதோவொரு புனைவாக்கக் கூறு புதியதாகத் தோன்றும்போது, அது என்ன? என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்விக்கான விடையைத் தேடித் திரும்பவும் பனுவலுக்குள் பயணம் செய்யும்போது, பனுவலுக்குள்ளிருக்கும் அந்தப் புத்தாக்கக் கூறும், அதன் வழியாகக் கிடைக்கும் அனுபவங்கள் அந்தப் பனுவலை விவாதிக்க வேண்டிய பனுவலாக மாற்றிவிடுகின்றன. அனுபவங்கள் என்பன விவரிக்கப்பட்ட நிகழ்வுகளோடு, புற வாழ்க்கையின் காட்சிகளும், தொடர்புகளும் ஒத்துப்போகும் தன்மையாக இருக்கலாம். முரண்படும் நிலைகளாகவும் இருக்கலாம். இவ்விரண்டிற்கும் அப்பால், பனுவலில் பயன்படுத்தும் மொழியும், மொழியைக்கொண்டு உருவாக்கப்படும் சொல்முறைகளாகக்கூட இருக்கலாம். இந்த மூன்று கதைகளில் வாசித்தவுடன் எழுதத்தூண்டிய கதை இளங்கோவன் முத்தையாவின்  முன்னை இட்ட தீ. ஹேமாவின் இறுதியாத்திரையும் தீபுஹரியின் தேன்கூடும் உடனடியாக எழுதத் தூண்டியன அல்ல.