இடுகைகள்

விரித்தலின் அழகியல்: கருணாகரனின் கவிதை மையங்கள்

இலக்கியத்தின் இயக்கமும் வாசிப்பும் எழுத்தின் இயக்கம் எல்லாவகையான பனுவல்களிலும் ஒன்றுபோல் நிகழ்வதில்லை. நாடகம், புனைகதை, கவிதை என அதனதன் வடிவ வேறுபாடுகளுக்கேற்பவே நிகழ்கிறது. வடிவ வேறுபாட்டிற்குள்ளும் ஒவ்வொரு எழுத்தாளரும் கைக்கொள்ளும் முன்வைப்பு முறைகளுக்கேற்பவும் இயக்கம் நிகழும். பனுவல்களுக்குள் நிகழ்த்தப்படும் இயங்குமுறையை, அதன் வடிவப்புரிதலோடு வாசிக்கும் வாசிப்பே முழுமையான வாசிப்பாக அமையும்.

மேற்கின் திறப்புகள்: தேடிப்படித்த நூல்கள்

எனது மாணவப்பருவத்தில் ஐரோப்பிய இலக்கியப் பரப்பையும் கருத்தியல் போக்குகளையும் அறிமுகம் செய்த நூல்களில் இந்த மூன்று நூல்களுக்கும் முக்கியப்பங்குண்டு. இந்த அறிமுகங்களுக்குப் பின்னரே முழு நூல்களைத்தேடிப் படித்திருக்கிறேன். 2000 -க்குப்பின்னர் ஐரோப்பிய இலக்கியத்தில் நடந்த சோதனை முயற்சிகள், ஆக்க இலக்கியங்கள் போன்றவற்றை  அறிமுகம் செய்யும் நூல்கள் தமிழில் வரவில்லை

மேதகு: புனைவும் வரலாறும்

படம்
பார்வையாளத்திரளுக்குத் தேவையான நல்திறக்கட்டமைப்பு, அதில் இருக்க வேண்டிய திருப்பங்களைக் கொண்ட நாடகீயத் தன்மையுமான கதைப்பின்னல், உருவாக்கப்பட்ட பாத்திரங்களை ஏற்று நடித்தவர்களின் உடல் மொழியின் நம்பகத்தன்மை ஆகியன படத்தைத் தொடர்ச்சியாகப் பார்க்கத் தூண்டுன்றன. பின்னணிக்காட்சிகளை உருவாக்கித்தரும் கலை இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் கூட அதிகமும் விலகலைச் செய்யவில்லை. அந்தக் காலகட்டத்து யாழ்நகரம் மற்றும் கிராமப்புறக் காட்சிகளைப் பார்வையாளர்களுக்குத் தர முயன்றிருக்கிறார்கள்.

பெண் மைய விவாதங்கள் கொண்ட இரு குறும்படங்கள்

படம்
பெண்ணின் மனசைச் சொல்லாடலாக விவாதிக்கும் இரண்டு குறும்படங்கள் - யூ ட்யூப் – அலைவரிசைகளில் ஒருவார இடைவெளியில் வெளியாகியிருந்தன. அடுத்தடுத்த நாளில் அவற்றைப் பார்த்தேன். முதலில் பார்த்த படம் பொட்டு. அதன் இயக்குநர் நவயுகா குகராஜா. (வெளியீடு:10/06/2021). இரண்டாவது படம் மனசு.( வெளியீடு: 18-06-2021) இயக்குநர் மு.ராஜ்கமல்.

நாடகப்பட்டறையும் சிறார் நாடகப்பயிற்சிகளும்

படம்
காட்டுமன்னார் குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தமது பொறுப்பில் ஏற்பாடு செய்த அந்தப் பட்டறை தேர்தல் பிரசாரத்தின் போதும் வெற்றி பெற்ற பின்னும் அவரிடம் நான் வைத்த கோரிக்கைகளில் ஒன்று. வழக்கமான சட்டமன்ற உறுப்பினராக வலம் வராமல் கலை இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளிலும் உங்கள் பங்களிப்பு இருக்க வேண்டும். பட்டறைகள், கருத்தரங்கங்கள், கலைவிழாக்கள் என ஏற்பாடு செய்வது மூலம் தொகுதி மக்களுக்கும் மாணவர்களுக்கும் புதிய அனுபவங்களை நீங்கள் நினைத்தால் தர முடியும் என்று சொல்லி வைத்தேன். அந்த கோரிக்கையை அப்போது நான் காலச்சுவடில் எழுதிய கட்டுரையிலும் [காட்சிகள் : கனவுகள்-தேர்தல் 2006] கூடப் பதிவு செய்திருந்தேன்.

கலைச்சொல்லாக்கம் - சில குறிப்புகள்

முன்குறிப்பு: இலக்கணத்தைக் கற்றவனாக இருந்தாலும் அதனைத் தொடர்ச்சியாகக் கற்பித்தவனாக இல்லை. இலக்கணத்தைத் தொடர்ச்சியாகக் கற்பித்தவர்கள் அதனை நிகழ்காலப் பயன்பாட்டோடு கற்பிக்கத் தவறினார்கள் என்பதும் உண்மை. பயன்பாட்டு மொழியியல் பற்றிப்பேசிய மொழியியல்காரர்கள் பயன்பாட்டு இலக்கணம் பற்றிப் பேசாமல் ஒதுங்கினார்கள் என்பது தமிழ்க்கல்விக்குள் நடந்த சோகம்