இடுகைகள்

பெண் மைய விவாதங்கள் கொண்ட இரு குறும்படங்கள்

படம்
பெண்ணின் மனசைச் சொல்லாடலாக விவாதிக்கும் இரண்டு குறும்படங்கள் - யூ ட்யூப் – அலைவரிசைகளில் ஒருவார இடைவெளியில் வெளியாகியிருந்தன. அடுத்தடுத்த நாளில் அவற்றைப் பார்த்தேன். முதலில் பார்த்த படம் பொட்டு. அதன் இயக்குநர் நவயுகா குகராஜா. (வெளியீடு:10/06/2021). இரண்டாவது படம் மனசு.( வெளியீடு: 18-06-2021) இயக்குநர் மு.ராஜ்கமல்.

நாடகப்பட்டறையும் சிறார் நாடகப்பயிற்சிகளும்

படம்
காட்டுமன்னார் குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தமது பொறுப்பில் ஏற்பாடு செய்த அந்தப் பட்டறை தேர்தல் பிரசாரத்தின் போதும் வெற்றி பெற்ற பின்னும் அவரிடம் நான் வைத்த கோரிக்கைகளில் ஒன்று. வழக்கமான சட்டமன்ற உறுப்பினராக வலம் வராமல் கலை இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளிலும் உங்கள் பங்களிப்பு இருக்க வேண்டும். பட்டறைகள், கருத்தரங்கங்கள், கலைவிழாக்கள் என ஏற்பாடு செய்வது மூலம் தொகுதி மக்களுக்கும் மாணவர்களுக்கும் புதிய அனுபவங்களை நீங்கள் நினைத்தால் தர முடியும் என்று சொல்லி வைத்தேன். அந்த கோரிக்கையை அப்போது நான் காலச்சுவடில் எழுதிய கட்டுரையிலும் [காட்சிகள் : கனவுகள்-தேர்தல் 2006] கூடப் பதிவு செய்திருந்தேன்.

கலைச்சொல்லாக்கம் - சில குறிப்புகள்

முன்குறிப்பு: இலக்கணத்தைக் கற்றவனாக இருந்தாலும் அதனைத் தொடர்ச்சியாகக் கற்பித்தவனாக இல்லை. இலக்கணத்தைத் தொடர்ச்சியாகக் கற்பித்தவர்கள் அதனை நிகழ்காலப் பயன்பாட்டோடு கற்பிக்கத் தவறினார்கள் என்பதும் உண்மை. பயன்பாட்டு மொழியியல் பற்றிப்பேசிய மொழியியல்காரர்கள் பயன்பாட்டு இலக்கணம் பற்றிப் பேசாமல் ஒதுங்கினார்கள் என்பது தமிழ்க்கல்விக்குள் நடந்த சோகம்

இருபுனலும் வாய்த்த மலைகள்

படம்
மார்ச் 22 . உலக நன்னீர் நாள் கொண்டாட்டத்திற்காக முதல் நாள் சென்னையிலிருந்து வந்து விட்ட அந்த நண்பரை, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் ஆழ்வார்குறிச்சிக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டும். ஆழ்வார்குறிச்சிக்கும் முக்கூடலுக்கும் இடையில் இருக்கும் கோயில் வளாகத்தில் அவர் பேசும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நாட்டுநலப்பணித்திட்ட அதிகாரி தெரிவித்திருந்தார். குறிப்பிட்ட ஊர் என்பதாக இல்லாமல் தாமிரபரணி நதியையொட்டிய பகுதியில் நடக்கும் சிறப்பு நாட்டுநலப் பணித்திட்ட முகாம். நெல்லையின் மேற்குப்பகுதியில் செயல்படும் அம்பை, ஆழ்வார் திருநகரி, பாபநாசம் கல்லூரிகளின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களின் கூட்டுச் செயல்பாடாக அந்த முகாம் நடந்துகொண்டிருந்தது.

அகத்திணைக்காட்சிகள்

படம்
தமிழ்ச் செவ்வியல் கவிதைக்குள் இடம்பெறும் உரிப்பொருட்கள் புணர்ச்சி, பிரிவு,இருத்தல்,  இரங்கல், ஊடல் ஆகிய அன்புசார்ந்த அகநிலையோடு, ஒருபால் விருப்பமும், பொருந்தாக் காமமும் என்னும் அன்புசாரா அகநிலையாகவும் இருக்கின்றன. இவ்வுரிப்பொருட்கள் அகப்பாடல்களில்  திரும்பத்திரும்ப இடம்பெறுகின்றன. அதனால் கூறியது கூறல் என்னும்  நிலையைக் கொண்டிருக்கின்றன என்ற விமர்சனத்தை எதிர்கொள்கின்றன. ஆனால் அவற்றிற்குள் இடம்பெறும் கருப்பொருட்களும் முதல்பொருளும் உருவாக்கும் உருவகம், உவமை, இறைச்சி, உள்ளுறை  போன்றன  கவிதையியல் நுட்பங்களாக மாறி விடுவதைக் காணமுடிகிறது. ஒரு குறுந்தொகையில் நிலாவும்,  கலித்தொகைப்பாடலில் சொம்பும், அகநானூற்றில் வீடுறைச் சேவலும் பேடும் உருவாக்கும் அர்த்தத்தளங்கள் ரசிக்கத்தக்கனவாக மாறவிடுகின்றன.

வாசிப்புத் தூண்டலுக்கான பனுவல்( A Reader) - ஓர் உரையாடல்

ரீடர்-  A Reader- என்பதை ஓரளவு உள்வாங்கிக் கொண்டு தமிழில் எழுத்தாளர்களுக்கான படைப்புலகங்கள் என்ற பொருண்மையில் கலைஞன் பதிப்பகம் 5 நூல்களை வெளியிட்டது. 2000 இல் வெளிவந்த அவ்வந்து நூல்களும் அந்தந்த எழுத்தாளர்களின்/ எழுத்துகளின் மீது பற்றுக் கொண்ட அல்லது விமரிசனப்பார்வை கொண்டவர்களால் தொகுக்கப்பெற்றன. சுந்தரராமசாமி படைப்புலகம் -ராஜமார்த்தாண்டன் கி.ராஜநாராயணன் படைப்புலகம் - பிரேம் :  ரமேஷ் லா.ச.ராமாமிருதம் படைப்புலகம் -அபி அசோகமித்திரன் படைப்புலகம் - ஞாநி ஜெயகாந்தன் படைப்புலகம் -டாக்டர் கே எஸ் சுப்பிரமணியன்

மெல்லினக்கவிதைகள் - ஒரு குறிப்பு

படம்
  நேர்க்காட்சிகளாகவும், கற்பனையாகவும் காட்சிச்சித்திரங்களை வரைபவர்கள் மென்வண்ணங்களால் தீட்டும்போது வெளிப்படுவது வரையப்படும் ஓவியக்காட்சிகளின் மென்மையியல் மட்டுமல்ல; வரையும் ஓவியரின் மென்மைக்கலையியலும் அழகியலும் தான்.