இடுகைகள்

தூரத்துப் பச்சைகளும் கானல் நீரும்

படம்
தூரத்துப்பச்சை என்ற உருவகத்தை கானல் நீர் என்ற உருவகத்தொடரின் நேர்நிலையாகவும் புரிந்து கொள்ளலாம்; எதிர்நிலையாகவும் புரிந்து கொள்ளலாம். அப்படியான புரிதல் வெளியில் இருப்பதில்லை. புரிந்து கொள்ள நினைப்பவரின் உள்ளே இருக்கிறது.  எல்லோரும் விரும்பி முழுமனத்தோடு தூரத்துப் பள்ளிக்கூடத்துக்குப் போகிறார்கள் என்பதில்லை. ஒரு பள்ளிக்கூடத்தின்/ கல்வி நிலையத்தின் அடிப்படை வசதிகள் பக்கத்தில் இருந்தால் தூரத்துப்பள்ளியைத் தெரிவுசெய்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். பக்கத்தில் இருக்கும் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க விருப்பம் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்காததால் தூரம் தூரமாய்ப் பயணம் செய்யும் மாணவிகளை நான் எனது பணிக் காலத்தில் சந்தித்திருக்கிறேன்.  குறிப்பாகத் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு வந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் பெண்பிள்ளைகளின் அலைச்சல் கதைகளைக் கேட்டுச் சகித்துக்கொள்ள முடியாமல் கொஞ்சம் ஆறுதல் மட்டுமே சொல்வேன். 

உலக அரங்கியல் நாள் வாழ்த்துகள் -2021

படம்
உலக அரங்கியல் நாள் கொண்டாட்டத்தைத் தொடங்கிய நிறுவனம் ஹெல்சிங்கி உலக அரங்கியல் நிறுவனம்(1962). அந்நிறுவனம் மட்டுமல்லாமல் அரங்கியல் பள்ளிகள், கல்லூரிகள், குழுக்கள் என ஒவ்வொன்றும் மேடைநிகழ்வு, கருத்தரங்கம், உரை, மதிப்பளித்தல் எனக் கொண்டாடித் தீர்க்கும் ஒரு கொண்டாட்ட நாள். கடந்த ஆண்டிலேயே கோவிட் 19 தாக்கத்தால் அதன் பொலிவிழந்து விட்டது. சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் இணையவழி நிகழ்வுகளே ஒருங்கிணைக்கப்படுகின்றன. உலக அரங்கியல் நாள் நிகழ்வின் உச்சம் அந்த நாளில் தரப்படும் செய்தியும் அதனை வழங்கும் அரங்க ஆளுமைத் தேர்வும் தான். இந்த ஆண்டுக்கான அரங்கியல் ஆளுமையாகத் தேர்வு பெற்றுள்ளவர் ஹெலன் மிர்ரன்

தொலைநோக்கில் ஒரு நோக்கு

படம்
2003 -இல் ஜெ.ஜெயலலிதா அவர்களின் தலைமை யிலான அரசாங்கம் உயிர்பலித் தடைச்சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. பண்பாட்டாய்வாளர்கள் மற்றும் செயல் பாட்டாளர்களின் கண்டனத்திற்கும் ஆளானது. ஆனால் வெகுமக்கள் அச்சட்டத்தை எதிர்க்கும் மாற்றுவடிவங்களைக் கண்டுபிடித்து நிறைவேற்றினார்கள். எதிர்த்தார்கள். அதனால் திரும்பப் பெற்றுக்கொண்டார். இந்த வரலாறு தெரிந்திருந்தாலும் இப்போது பாரதீய ஜனதாவின் தொலை நோக்குப் பத்திரம் அதனைத் திரும்பக் கொண்டுவருவோம் என்கிறது. அப்போது ஞாநியின் தீம்தரிகிடவில் எழுதிய கட்டுரை இது: அதன் தலைப்பு: அந்தமுறை நானும்....

கவிதை தினத்தில்...

படம்
கவிதைகள் தினத்தையொட்டி நேற்று மனுஷ்யபுத்திரன் தனது வருத்தமான பதிவை எழுதியிருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் -2018 ,உலகக் கவிதை நாளையொட்டி 30 கவிதைகளை முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தேன் என்பதை முகநூல் நினைவூட்டியது. அதல்லாமல் வெவ்வேறு ஆண்டுகளில் கவிதை தினத்தில் கவிதைகளைப் பதிவேற்ற்றம் செய்துள்ளேன். நாற்பது கவிகள் இக்கவிதைகள் பெரும்பாலும் நேரடியாகப் பேசும் கவிதைகள்.

திராவிடக் கலையியல்: சில குறிப்புகள்

”தமிழர்களை வளர்ச்சி அடையச் செய்து தமிழ் வளர்ப்போம்” - இந்த வழிமுறையை தி.மு.க. நீண்ட காலமாகப் பின்பற்றி வருகிறது. அதன் ஆட்சியில் திராவிட/ தமிழ் முதலாளிகள் உருவாக்கப்பட்டார்கள். கல்வித்தந்தைகளாகக்கூட ஆகியிருக்கிறார்கள். சேவைப்பிரிவு, தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு போன்ற உற்பத்தி சாரா தொழில் முனைவோர்களாக வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். பன்னாட்டு மூலதனக்குழுமங்களோடு போட்டிப் போடவும் தயாராக உள்ளனர். இந்த நகர்வு ஒவ்வொன்றிலும் தமிழ் மொழியாகவும், கலையாகவும் பயன்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் இந்த வளர்ச்சியின் போக்கில் தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் பண்பாட்டு நிறுவனங்களை உருவாக்குவதற்கும் செய்துள்ள பங்களிப்பு மிகக் குறைவு. தமிழ்த்தேசிய தனியார் நிறுவனங்களின் பண்பாட்டுப் பங்களிப்பு எனக் குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இல்லை.

ஒளி ஓவியர் செ.ரவீந்திரன்

படம்
  பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் இரண்டாவது துணை வேந்தர் பேரா. ஆ.ஞானம் சந்தன மாலை அணிவித்து மரியாதை செய்பவர் பேரா.செ.ரவீந்திரன். இடம் புதுச்சேரி கடற்கரைச் சாலைக்கு அடுத்துள்ள லே ப்ரான்சே திறந்த வெளி அரங்கம். அந்தப் படத்தில் நாடகாசிரியர் இந்திரா பார்த்தசாரதிக்கு முகம் காட்டிப் பார்வையாளர்களுக்கு முகம் தெரியாமல் நிற்பது நான். தேதி நினைவில் இல்லை. ஆண்டு 1991 ஆண்டாக இருக்கலாம்.