இடுகைகள்

புலப்படா அரசியலும் அரங்கியலும்

படம்
வரப்போகும் தமிழகச் சட்டமன்றத்தேர்தலில் முன்னாள் முதல்வர்களான மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் இன்மையைப் பெரிய வெற்றிடமாக ஊடகங்களும், ஊடகங்களில் விவாதிப்பவர்களும் சொல்கின்றனர். இன்னொருவரின் இன்மையைப் பற்றிப் பேசுவதில்லை. அவரது இன்மையும் இந்தத் தேர்தலில் பெரும் வெற்றிடம் என நான் நினைப்பதுண்டு. அவர் தமிழகத்தின் புலப்படா அரசியலின் மையமாக இருந்த திரு ம.நடராசன் . புலப்படா அரசியலை விளக்குவதற்கு முன்னால் புலப்படா அரங்கியலை விளக்க நினைக்கிறேன் 

கமல்ஹாசன்: நடிகரிலிருந்து அரசியல்வாதியாக

படம்
ராஜபார்வை- கமலின் சினிமாவாக அறியப்பெற்ற முதல் படம். அவர் தன்னை நடிக்கத் தெரிந்த நடிகராக உணர்ந்து வெளிப்படுத்திக் கொண்ட படம். அந்தப் படம் பற்றி நினைத்துக் கொள்ளவும் சொல்லவும் பல சங்கதிகள் உண்டு. அது அவரது 100- வது படம். 100- வது படம் தனது பேர்சொல்லும் படமாக -கலைத்துவம் கூடிய வித்தியாசமான படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைய வேண்டும் என்பதற்காகக் கவனமாக எடுத்த படம்.

கபிலன் வைரமுத்துவின் அம்பறாத்தூணி:சொல்கதைகளின் தொகுதி

படம்
  ‘ஒரு ஊரில’ என்று தொடங்கிச் சொன்ன கதைகளைக் கேட்டு – சொல்கதைகளைக் கேட்டு வளரும் சமூகங்கள் இப்போதும் இருக்கின்றன.   அவை சொல்லப்படும் கதைகள். சொல்லப்படும் கதைகளின் முதல் முதலாகச் சொல்லப்படுகின்றன என்பதாக இல்லாமல் ஏற்கெனவே அவை வேறுவிதமாகவும் சொல்லப்பட்டிருக்கும். நடந்த நிகழ்வுகளாகவோ, கேள்விப்பட்ட செய்தியாகவோ, வரலாற்றுக்குறிப்பாகவோ, அறிவியல் உண்மைகளாகவோ- கண்டுபிடிப்பாக – ஆச்சரியமாகவோ சொல்லப்பட்டிருக்கும். அப்படிச் சொல்லப்பட்ட ஒன்றை எழுத்தில் வாசிக்கும்போது எங்கேயோ கேள்விப்பட்டதின் சாயலாக இருக்கிறதே என்று தோன்றும்.

மேலைக்காற்றுக்குப் பதில் கீழைக்காற்று

  பிறமொழி எழுத்துகளைத் தமிழில் அறிமுகம் செய்யும் நோக்கம் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறுவிதமாக நடந்துள்ளன. தழுவல்கள், சுருக்க அறிமுகங்கள், மொழிபெயர்ப்புகள் என வரவு வைக்கப்பட்டதுபோலவே குறிப்பிட்ட மொழி இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்கமும் இருந்துள்ளன.

கரோனா என்னும் உரிப்பொருள்

படம்
நம் காலத்தின் பெரும்பரப்பியல் ஊடகங்களான தொலைக்காட்சிகளும் வானொலிகளும் கரோனாவில் பாதிக்கப்படவில்லை. ஆனால் பாதிப்பைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. செய்திகளாக மட்டுமல்லாமல் விளம்பரங்களாக, காட்சித்துணுக்குகளாக, தொடர் கதைகளின் உரையாடல்களாக, அறிவிப்புகளாக என அதன் ஒவ்வொரு சலனங்களிலும் அலைத் துணுக்குகளிலும் கரரோனாவே முன் நிற்கின்றது. ஊடகங்கள் நிகழ்வாழ்க்கையின் பிரதிபலிப்புகள். நின்றுபோன நிகழ்வாழ்க்கையின் காரணியாக இருக்கும் கரோனா அல்லது கோவிட் 19 என்னும் சொல் இந்தக் காலத்தின் உரிப்பொருள் என்பதை உலகம் மறுக்கப்போவதில்லை; மறக்கப்போவதில்லை.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்

படம்
  ஆன்மீகஅரசியல் என்பது இலக்கணப்படி உம்மைத்தொகை. ஆன்மீகமும் அரசியலும் என விரியும். ஆன்மீகத்தின் இருப்பிடம் கோயில். அதன் மூலம் இறை. அந்த மூலத்தைத் தேடிச் செல்ல வேண்டியவர்கள் தனிமனிதர்கள். அமைதியும் ஓர்மைப்பட்ட மனமுமாகச் செய்யும் பயணமே ஆன்மீகப் பயணம்.