இடுகைகள்

இன்று களப்பலி நாள்:தேசிய தரமதிப்பீட்டு நுழைவுத் தேர்வு

மருத்துவராகிச் சமூகத்திற்குப் பணியாற்றியே தீர்வது என்ற விடாப்பிடியான கொள்கையைப் பதின்வயதுப் பிள்ளைகளிடம் பாலோடும் பால்ச்சோறோடும் சேர்த்து ஊட்டி வளர்க்கும் தமிழ்ப் பெற்றோர்களின் கனவுகள் 2017 இல் சிதைக்கப்பட்டது. சிதைத்தது தேசிய தரமதிப்பீட்டு நுழைவுத் தேர்வு (NEET) என்னும் குயுக்தியான ஆயுதம்.

பாரதியென்னும் சி. சுப்ரமணிய பாரதி

படம்
31.08.2000 இல் திரையரங்கிற்கு வந்து விட்ட பாரதியை 12.09.2000 இல் பார்த்ததற்கு ஒரு காரணம் இருந்தது. 11.09.2000 அன்று அம்ஷன்குமார் இயக்கத்தில் வந்திருந்த சி. சுப்ரமணிய பாரதியைப் பார்த்து விடும் வாய்ப்பொன்றிருந்தது. நான் பணி செய்யும் பல்கலைக்கழகம் எட்டையபுரம் பாரதி மணி மண்டபத்தைத தத்தெடுக்கவும், எட்டையபுரத்தில் “பாரதி ஆவணக்காப்பகம்“ ஒன்றை நிறுவவும் திட்டமிட்டு, பாரதி நினைவு நாளில் (11, செப்டம்பா்) விழாவொன்றை நடத்தியது. அந்த விழாவின் ஒரு பகுதியாக அம்ஷன் குமாரின் சி. சுப்ரமணிய பாரதி காட்டப்பட்டது. அன்றும் அதற்கடுத்த நாளும் எனது மாணவிகள் மாணவா்களுடன் சி. சுப்ரமணிய பாரதியையும், ஞான. ராஜசேகரன் இயக்கிய “பாரதி“ யையம் பார்த்துவிடுவதாகத் திட்டம்.

ஊடகப்பேச்சுகளும் ஊடகத்தைப் பற்றிய பேச்சுகளும்

படம்
ஒவ்வொரு தேர்தலும் அதற்கு முந்திய தேர்தலைவிட - அதுவரை இல்லாத மாதிரி- விசித்திரமாக மாற்றப்பட்டு வருகின்றன . முறைப்படி தேர்தலை அறிவிக்கும் தேர்தல் ஆணையம் 90 நாட்களுக்கு முன்பே அறிவிக்கிறது. அப்போது முதல் பணப் பரிவர்த்தனையையும் விளம்பர முன்னிறுத்தலையும் கட்டுப்படுத்த காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் களத்தில் இறங்கி விடுகின்றன. படம்பிடிக்கும் காமிராக்களோடு ஆங்காங்கே நிற்கும் காவல் துறை வாகனங்கள், தேர்தல் வந்து விட்டது என்பதைக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. தேர்தலைக் காட்சிப்பொருளாக்கும் தேர்தல் ஆணையம் இன்னும் பல நிகழ்வுகளைக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறது. எல்லோரையும் வாக்களிக்கச் செய்வோம்; வாக்காளர் அடையாள அட்டை வாங்குவதை எளிமையாக்கிவிட்டோம்; வாக்காளர் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துகிறோம்; ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் வரும்; ஒவ்வொரு வாக்காளரையும் தேர்தல் ஆணையம் சந்தித்துப் பேசிவிடும்; நேர்மையான தேர்தலை நடத்திக் காட்டுவோம்; நெருக்கடியில்லாமல் நீங்கள் வாக்களிக்கலாம் என உத்தரவாதங்களைத் தந்துகொண்டிருக்கிறது. சரியாகச் சொன்னால், அரசியல் கட்சிகள்  தேர்தலுக்குத்

கண்ணப்பத்தம்பிரான் என்னும் கலை ஆளுமை

படம்
  இந்த ப் படத்தில் முக்கியமான மனிதர்களின் முகங்களை மறைத்து எனது முகம் பெரிதாக இருக்கிறது. கறுப்புவெள்ளைப் படங்களின் காலம்.

அந்தக் கடலோரக் கிராமங்கள் எப்படி இருக்கின்றன

படம்
இருபது ஆண்டுகளுக்கு முன்பு. பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவியைக் கூடுதல் பொறுப்பாக கவனித்த காலகட்டம்.கல்லூரிகளில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் போவதில்லை என்றாலும் வருட த்தில் ஒரு தடவை நடக்கும் பத்துநாள் பயிற்சி முகாமிற்குச் செல்வதுண்டு. கல்லூரியில் செயல்படும் திட்டப்பணியாளர் தொடக்கவிழா அல்லது நிறைவுவிழாவிற்கு வரும்படி அழைப்பார். நான் அப்படியெல்லாம் செல்வதில்லை. ஏதாவதொரு எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது வருகிறேன் என்று சொல்லிவிடுவேன்.

ஊர்கள் - பயணங்கள் -நினைவுகள் -அனுபவங்கள்

படம்
ஒருவாரமாக வீட்டில் அடைந்து கிடக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒரு பாதையில் நடக்கும் காலை மாலை நடை வீட்டு மாடியின் செவ்வகத்திற்குள் வட்டமடிக்கின்றன. அரியகுளம் கண்மாயில் குளிக்கச் சென்ற வெள்ளைக் கொக்குகள் திரும்பிப் போகின்றன.. கூந்தங்குளத்திற்கும் வேய்ந்தான்குளத்திற்கும் நயினார்குளத்திற்கும் கோடைக்ளியலுக்கு வரும் ஆப்பிரிக்கக் கருங்கழுத்துக் கழுகுகளும் ருஷ்யாவின் செம்பழுப்பு நாரைகளும் மாலைச் சூரியனை நோக்கிப் பறக்கின்றன. மார்த்தாண்டம் வரை போய்வர நினைத்த அந்தச் சின்னப்பயணமும் தட்டிப் போய்விட்டது.