இடுகைகள்

கொரோனாவோடு வாழ்ந்தது -ஜூலை

போதும் அடங்கல்கள் நோய்களுக்கு மருந்தே தீர்வளிக்கும். தொற்று நோய்களுக்கும் உடனடி மருந்துகளும் தடுப்பு மருந்துகளும் தீர்வளிக்கும் என்பதோடு, ஒதுங்கியிருத்தலும் ஒதுக்கி வைத்தலும் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பரவலைத் தடுக்கும் என்பது அனுபவங்கள். 

குறிப்பான வகை மாதிரி (Case study)ஆய்வுகளின் சிக்கல்கள்

  ராஜன்குறை உள்ளிட்டவர்கள் மேற்கொண்டதாக ஜெயமோகன் மேற்கோள் காட்டும் அந்த ஆய்வு குறிப்பான வகை மாதிரி ஆய்வு. இவ்வகை ஆய்வுகள் எப்போதும் ஒற்றைப்பரப்பை அல்லது குழுவை அல்லது நிகழ்வை ஆய்வுப் பொருண்மையாக எடுத்துக்கொண்டு அனைத்துத் தரவுகளையும் திரட்டி அந்த எல்லைக்குள்ளேயே நின்று முடிவுகளைத் தந்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளக் கூடியன. அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வந்து இந்தியாவிலும்/ தமிழகத்திலும் ஏதாவதொரு கிராமத்தில் தங்கி ஆய்வுசெய்த அனைவரும் இவ்வகை ஆய்வுகளையே செய்து வழிகாட்டினர். அப்படிச் செய்யப்பட்ட ஆய்வுகள் இங்கே கொண்டாடப்பட்டன என்பதைக் கல்வியுலகம் அறியும்.

ஊடகங்களைக் கண்காணித்தல்

படம்
ஊடகங்களைக் கண்காணித்தல் என்பது அண்மைக் காலத்தில் வெளிப்படையாகி இருக்கிறது. மக்களாட்சியில் எதிர்த்தரப்புக் குரல்களுக்கு இடமுண்டு என நம்பும் அரசியல் கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும் கண்காணிப்பு நடக்கவே செய்யும். கண்காணிப்பவர்களுக்கு இரண்டு நோக்கங்கள் உண்டு. கண்காணிப்பின் வழியாக எதிர்த்தரப்பை எதிர்கொள்ளும் மாற்றுக் கருத்தை உருவாக்கிக் கொள்ளும் விதமான கண்காணிப்பு முதல் வகை. இரண்டாம் வகைக் கண்காணிப்பு மாற்றுக்கருத்தே வரக்கூடாது; அப்படி எழுப்புபவர்களை மிரட்டித் தன்வசப்படுத்துவது அல்லது வாயடைக்கச் செய்து காணாமல் ஆக்குவது என்பது இரண்டாவது வகை.

அன்பின் அலைகளால் நிரப்புபவர் எஸ்.எல்.எம்.ஹனீபா :

படம்
இலங்கைக்கான முதல் பயணத்தில் (2016 செப்டம்பர்,16-29) சந்தித்த அனைவரையும் இரண்டாவது பயணத்திலும் சந்திக்க வாய்ப்பில்லை என்பது எனக்குத் தெரியும்.   ஆனால் திரு எஸ்.எல். எம். ஹனீபா அவர்களை எனது இரண்டாவது பயணத்திலும்     பார்த்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை நான் உருவாக்கிக் கொண்டேன்.அதற்குக் காரணம் எனது முதல் பயணத்தில் அவர்காட்டிய நெருக்கமும் இயல்பான பேச்சும் என்றுதான் சொல்லவேண்டும்.

காவல் நிலையங்கள் : அரசவன்முறைக்கூடங்கள்

படம்
பாதிக்கப்பட்ட ஒருவர் புகார் அளிப்பதற்காகக் காவல்நிலையம் சென்றால் கிடைக்கும் அவமரியாதையும் விசாரணைகளும் அவரையே குற்றவாளியாக்கும்விதமாகவே அமையும் என்பதற்குப் பலரும் சாட்சியாக இருக்கிறார்கள். நடந்த நிகழ்ச்சியை நமது மொழியில் எழுதிக்கொடுத்தால் எப்போதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் செய்யப்போகும் விசாரணைக்கேற்ற வடிவத்தில்தான் எழுதச் சொல்வார்கள். நாம் படித்த படிப்பும் எழுதிய கட்டுரைகளும் நம்மை முகத்தில் அறைந்து தாக்கும். அப்படியான அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு.

புதிய வருகை: புதிய நகர்வுகள்- தலித் இதழில் மூன்று சிறுகதைகள்

படம்
நிறுத்தப்படுவதும் திரும்பவும் வருவதும் இலக்கியச் சிறுபத்திரிகைகளின் அடையாளங்களில் ஒன்று. 1990 களின் இறுதியில் தொடங்கி , தான் நடத் திய தலித் - இதழைத் திரும்பவும் கொண்டுவருகிறார் பன்முகத்தன்மைகொண்ட எழுத்தாளர்     ரவிக்குமார் (விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர்) . உள்ளடக்க நிலையில் முன்னர் வந்த 12 இதழ்களின் நீட்சி யைக் காணமுடிகிறது. இந்த இதழின்     உள்ளடக்கம்:       ·          கவிதைகள் (எம்.எ.நுஃமான், என்.டி.ராஜ்குமார் ·          சிறுகதைகள் (ரவிக்குமார், அழகிய பெரியவன், ப்ரதீபா ஜெயச்சந்திரன்) ·          மொழிபெயர்ப்புகள் (கெவின் பி.ஆண்டர்சன்: நேர்காணல் தமிழில் சிசுபாலன்,   லீலாதர் மண்டலே கவிதைகள், தமிழில்:கிருஷாங்கினி) ·          கட்டுரைகள் (ஜெ.பாலசுப்பிரமணியம், கோ.ரகுபதி) ·          வெளிவராத நூலின் பகுதி (தேன்மொழியின் சாமி தந்தாள் கதை)