இடுகைகள்

செல்லக்குட்டிகளும் சுட்டிப் பையன்களும்

படம்
சாத்தான்குளம் இடைத்தோ்தலுக்காக நான்கு நாட்கள் தங்கித் தீவிரப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார் ஜெயலலிதா. கிராமம் கிராமமாகச் சென்று வாக்குறுதிகளையும் உடனடிப் பயன்களையும் வழங்கிக் கொண்டிருந்தார். அவரது அமைச்சரவை சகாக்களும் இரவு பகல் பாராது அயராது உழைத்துக்கொண்டிருந்தனா். அம்மா ஆறுமுகனேரியில் தனியார் விருந்தில்லத்தில் தங்கியிருக்க, தொண்டா்களும் பிரமுகா்களும் திருநெல்வேலி - பாளையங்கோட்டை எனப் பக்கத்தது நகரங்களில் தங்கிப் பணியாற்றிக் கொண்டிருந்தனா். நான் குடியிருக்கும் வீடு திருநெல்வேலி - சாத்தான்குளம் போகும் பாதையில் தான் இருக்கிறது. அந்தப் பத்து நாள் பரபரப்பு எங்கள் சாலையிலேயே இருந்தது.

நியோகா: பழைய தர்மத்திற்குள் புதிய விடியல்

படம்
ஈழவிடுதலை , தனி நாடு போன்றவற்றிற்கான போராட்ட ம் மற்றும் போர் நிகழ்வுகளையும், அதன் விளைவான புலப்பெயர் வுகளை யும் பின்னணியா க க்கொண்ட புனைகதைகள் நிறைய வாசிக்கக் கிடைக்கின்றன. அவ்வப்போது திரைப்படங்களாகவும் வந்து கொண்டுள்ளன. கனடாவில் வாழும் சிறுகதை ஆசிரியர், அரங்கவியலாளர் கறுப்புசுமதி யின் இயக்கத்தில் உருவான நியோகா என்ற சினிமா அப்படியானதொரு படம்.   2016 இல் கனடாவில் வெளியான அந்தப் படத்தின் திறப்பு பொதுப்பார்வையாளர்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை சுமதியின் முகநூல் வழியாகப் படித்த தால் இணையத்தில் அந்தப் படத்தைப் பார்த்தேன்.

மரத்தில் மறைந்த மாமத யானை

படம்
முதல் நேர்காணலிலேயே நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. அதனைத் தவறு விட்டதன் பின்னணியில் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்ற எனது லட்சியம் இருந்தது. இப்படி நான் நினைத்துக் கொண்டிருப்பதை ’நிறைவேறாத செயலுக்கான கற்பனை வடிவம்’ என்பது போல அண்ணன் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்த அந்த வார்த்தைகள் உறுதி செய்து கொண்டிருந்தன.   “ அன்னைக்கி ஒரு 20 ஆயிரம் பொரட்ட முடியாமப் போச்சேப்பா.. பொரட்டிக் கட்டியிருந்தா க லெ க்டரா ஆயிருப்பே..இல்ல” இந்த வார்த்தைகளை எனக்கு ஆறுதலாகச் சொல்வதாக அவர் நினைத்தாலும் அவரது இயலாமையும் அதில் இருப்பதாக நினைத்தார். 1983 இல் அரசாங்க வேலையைத் தவற விட்டது தொடங்கி 1989 இல் இன்னொரு அரசாங்க வேலையைக் கைப்பற்றுவது வரை-நூறு தடவையாவது- சொல்லி இருப்பார். பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் அரசாங்கச் சம்பளம் வாங்கும் வேலையில் சேர்ந்த பின்புதான் அந்த  புலம்பலை நிறுத்தினார்.  

மிதந்த கனவு - முதல் விமானப்பயணம்

முதல் விமானப்பயணத்திற்கான வாய்ப்பொன்றைப் பல்கலைக்கழகம் 2000 ஆம் ஆண்டிலேயே உருவாக்கிந்தது. எனது பெரும் ஆய்வுத்திட்டத்தின் நேரடி அளிப்பிற்காகப் பல்கலைக்கழக மானியக்குழுவின் தேர்வுக்குழுவின் முன்னால் இருக்க வேண்டும். அதற்கு விமானத்தில் போகலாம். குறிப்பிட்ட வகையினச் செலவு முறையில் செலவழித்துவிட்டு, ரசீதுகளைச் சேர்த்துப் பல்கலைக்கழகத்திற்கு அளித்தால் அச்செலவுத்தொகையைப்  பல்கலைக்கழகம்  திட்ட நிதி யிலிருந்து வழங்கும். விமானத்தில் செல்லும் வகையில் செலவழிக்க அந்த நேரத்தில் பணம் இல்லாத தால் ஆகாயவழிப்பயணத்தைத் தவிர்த்து தரைவழிப்பயணத்தையே விரும்பினேன். அத்தோடு ரயிலில் போய்வரும் பயண அனுபவங்கள் சில நாட்களைக் கொண்டது என்பதும் ஒரு காரணம்.

கற்றல், கற்பித்தல், திட்டமிடுதல்

ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் எழுத்து, செயல்பாடு, திட்டமிடல், முன்னெடுப்பு எனப் பல நிலைகளில் கல்விப்புலத்திற்குள் செயல்பட்டவன் என்ற நிலையில் நான் பணியாற்றிய பல்கலைக்கழகங்களைத் தாண்டிப் பிற பல்கலைக்கழகங்களிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் தமிழியல் சார்ந்து மலேசியா, இலங்கை போன்ற நாடுகளின் கல்விப்புலத் திட்டமிடல்களில் கருத்துரைப்பவனாகவும் இருந்துள்ளேன். அதன் காரணமாகப் பல நேரங்களில் கல்வியுலகச் சிக்கல்களைப் பற்றிய கருத்துரைகளை எழுதியுள்ளேன். அப்படியெழுதிய சில குறிப்புகளின் தொகுப்பு கல்வியில் கொள்கையின்மை நவம்பர் 30, 2011 நிகழ்கால வாழ்க்கைமுறை ஒவ்வொரு மனிதரையும் பலரையும் சார்ந்து வாழ வேண்டிய நெருக்கடியைத் தந்துள்ளது. சார்ந்து வாழ்தலின் முதல்படி, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளுதல். தன்னை வெளிக்காட்ட -தனது கருத்தை நிதானமாகவும் செம்மையாகவும் எடுத்துச் சொல்லப் பேச்சை விடவும் எழுத்து முறை கூடுதலாக உதவும். அனைவருக்கும் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என நினைப்பதில் பின்னணியில் இத்தகைய காரணங்களே இருக்கின்றன. அனைவருக்கும் கல்வி; வயது வந்தோர் அனைவருக்கும் கல்வி, 14 வயதுவரை உள்ள ஆண் பெண் இ

பாலாஜியைப் பார்த்தநாள்

படம்
கோயில்களுக்குப் போவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்பதைத் தெரிந்து கொண்ட எனது உறவினர்கள் பலமுறை என்னை அழைத்திருக்கிறார்கள். அவர்களின் அழைப்பை நிராகரிக்க ஏதாவது ஒரு காரணமும் வேலையும் இருந்துகொண்டே இருந்தது. அவற்றைக் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு ஏற்றுக் கொண்டிருந்தால் அவர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்திருக்கலாம். அந்த வாய்ப்பை நான் அவர்களுக்குத் தரவே இல்லை. உறவினர்களின் அழைப்பை மட்டும் அல்ல; திருவேங்கடவனின் அழைப்பையே இரண்டுமுறை நிராகரித்திருக்கிறேன்.