இடுகைகள்

அலைதலும் தனிதலும் -1

அலைந்து திரிதலின் பல நிலைகளைக் கடந்திருப்பதுபோலவே தனித்திருத்தலின் அனுபவங்களும் இருக்கவே செய்கின்றன. முதல் தனித்திருத்தல் பத்து வயதில். நான்காம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடுமுறை.கமலை வடத்தில் தாவி ஏறிச்சாடித் தடுமாறாமல் இருக்க இரண்டு பக்கத்திலும் கைகளை நீட்டி மாடுகளின் பின்முதுகில் கை வைத்தபோது விழுந்தது ஒரு அடி. இடது பக்க மயிலைக்காளை அடித்தால் முதுகில் விழும். வலதுபக்கச் செவலையின் அடி கன்னத்தில் விழுந்தது.கன்னம் வீங்கியது. கண்ணுக்கு வந்தது கன்னத்தோடு போனது என்று நினைத்திருந்த நேரத்தில் மாட்டு வாலில் கட்டியாக இருந்த சாணித்துகளொன்று கண்ணுக்குள் இறங்கி ஒருவாரத்திற்குப் பின் ரத்தச் சிவப்பில் கொப்பளம் காட்டியது. முலைக்கட்டியிருக்குன்னு பெரியம்மா அத்திபட்டி மாரியம்மனுக்கு விளக்குப் போடுவதாக நேர்ந்தார். வெங்கலத்தாம்பாளத்தில் வெண்சங்குரசி ஒத்தடம் கொடுத்துப் பார்த்தார்கள். வெளிமருத்துவம் தாண்டி அமுதப்பால், நந்தியாவட்டைச் சாறு என்ற கைமருத்துவத்தில் இறங்கி உள்மருத்துவத்திற்கு நகர்ந்தது. ஒருமாதம் பள்ளிக்கூடம் போகவில்லை. சுத்திப்பட்டிக்கெல்லாம் தாய்க்கிராமம் எழுமலை. அங்கிருந்தவர் அரை வைத்திய

சொல்லித்தீராத சுமைகள்

படம்
எல்லாவகையான வாசிப்பும், வாசிக்கப்படும் பனுவலைப் புரிந்து கொள்ள முதலில் தேடுவது பனுவலுக்குள் இருக்கும் ஆட்களைத்தான். நம்மிடம் சொல்லப் போகும் -காட்ட நினைக்கும் வெளி ஒன்றின் ஒரு பகுதியையும் காலத்தின் வெட்டுப்பட்ட துண்டையுமே எழுத்தாளர்கள் நம்மிடம் எழுதிக்காட்டுகிறார்கள்.

அரங்கியல் அறிவோம் :மார்ச் 27. உலக அரங்காற்று தினம்

படம்
சர்வதேச அரங்காற்று நிறுவனம்(International Theatre Institute) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 - ஆம் தேதியை உலக அரங்காற்று தினமாக (world Theatre day ) கொண்டாடி வருகிறது.

ஆவணப்படங்கள்-நோக்கங்கள், அழகியல், திசைவிலகல்கள்

படம்
ஆவணப்படங்கள் என்பன பிரச்சினையை முன்வைத்து தீர்வை வேண்டி நிற்பன. பிரச்சினைகளின் தன்மைகளைப் போலவே தீர்வுகளும் விதம்விதமானவை. பிரச்சினைகள் ஒவ்வொருவர் முன்னாலும் நிகழ்வனதான். நீண்ட காலமாக நடந்துகொண்டே இருப்பனவற்றைப் பார்க்கும் கண்கள் இல்லாலமல் வெகுமக்கள் தங்கள் பாடுகளுக்குள் தங்களைக் கரைத்துக்கொண்டு நகர்ந்து கொண்டிருக்கும்போது அதன் வரலாற்றையும் இருப்பையும் ஆவணப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் ஒரு ஆவணப்பட இயக்குநர் அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு, தரவுகளைத் திரட்டித் தரும் வேலையைச் செய்கிறார். அத்தகைய ஆவணப்படங்களில் இயக்குநரின் பார்வைக்கோணம் தொடங்கி, அழுத்தம் கொடுப்பது, விவரிப்பது எனப் பலவற்றில் தீவிரத்தைக் கொண்டுவரமுடியும். அதற்கு மாறானவை தற்காலிகப் பிரச்சினைகள். திடீரென்று தோன்றும் விபத்து, பேரிடர், போன்றவற்றை ஆவணப்படுத்தும்போது காட்சிப்படுத்துவதில் குறைகள் இருக்கலாம். விவரிப்பதில் போதாமைகள் இருக்கும். தீர்வு கோருவதில் கூட முடிவான ஒன்றைச் சொல்லமுடியாமல் போகலாம். இந்த வேறுபாட்டைப் புரிந்துகொண்ட மனநிலையோடுதான் ஆவணப்படங்களைப் பார்க்கவேண்டும். இங்கே நான் பார்த்த சில தமிழ் ஆவணப்படங்களைப் பற்றிய அ

நானும் எனது இயக்கங்களும் :ஜீவநதி – மாத சஞ்சிகையில் நேர்காணல்

தை /13 வது ஆண்டுமலர்/ 136-137  நேர்காணல்:அ.ராமசாமி  சந்திப்பு:இ.சு.முரளிதரன்  இலக்கியம், நாடகம், சினிமா, வரலாறு எனப் பன்முக அடையாளங்களுக்கு உரித்தானவர்அ.ராமசாமி. மதுரை மாவட்டத்திலுள்ள தச்சபட்டியில் 1959இல் பிறந்தவர். ஒளிநிழல் உலகம், மாறும் காட்சிகள், சங்கரதாஸ் சுவாமிகள், வட்டங்களும் சிலுவைகளும், ஒத்திகை, நாடகங்கள் விவாதங்கள், அலையும் விழித்திரை, நாவல் என்னும் பெருங்களம் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறையில் பேராசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார். 

நெல்லையோடு சில ஆளுமைகள்

படம்
  சுந்தரராமசாமி நிகழ்வதற்கு முன்பாகவே அந்த மரணம் தகவலாகத் தெரிவிக்கப்பட்டது. காலச்சுவடு அலுவலகத்திலிருந்து இணையம் வழியாக அதனைச் சொன்னவர் அதன் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அரவிந்தன். அரவிந்தனின் தகவல் எடுத்த எடுப்பிலேயே சு.ரா. இறந்துவிட்டார் எனச் சொல்ல வில்லை.

அறிந்த உண்மையிலிருந்து விடுதலை-சுனில் கிருஷ்ணனின் இயல்வாகை:

ஜெயமோகனை ஆசானாகக் கருதும் சிஷ்யர்களின் கதைகளால் நிரம்பியிருக்கிறது ம.நவீனின் வல்லினம். மார்ச்,1,2020 இதழில் சுனில் கிருஷ்ணன் எழுதியுள்ள கதைத் தலைப்பு : இயல் வாகை.  சுனில் கிருஷ்ணனின் கதையைப் பற்றிப் பேசுவதற்கு முன் சில குறிப்புகள்:  இயல்வாகை ஒரு மரத்தின் பெயர். அதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் மின்னலாக தோற்றம் தரும். மஞ்சள் அடிப்படை வண்ணங்களில் ஒன்று. மற்ற இரண்டு அடிப்படை வண்ணங்கள் பச்சை, நீலம்.