இடுகைகள்

பழமலையும் சந்ருவும்-சந்திப்பும் நினைவுகளும்

படம்
முகநூலின் வருகைக்குப் பின்னர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் திருப்பும் பக்கங்களெல்லாம் பார்க்கக் கிடைக்கின்றன. நண்பர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லிக்கொள்ளும் வாழ்த்துகளும் கேட்கின்றன. அதேபோல் நண்பர்களின் சந்திப்புகளும் படங்களாக விரிகின்றன. அண்மையில் கவி. பழமலய்யைச் சந்திக்க நேர்ந்தது. ஓவியர் சந்ருவிற்குப் பார்க்காமலேயே வாழ்த்துச் சொல்ல முடிந்தது.

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

தமிழ் அழகியல்: மரபும் கோட்பாடும்  பேரா. தி.சு. நடராசனின் எழுத்துகளின் மீது ஒட்டுமொத்தப் பார்வையைக் கவனப்படுத்தும் நோக்கத்தோடு திட்டமிடப்பட்ட இக்கருத்தரங்கில் அவரது தமிழ் அழகியல்: மரபும் கோட்பாடும் என்ற நூலின் நோக்கத்தையும் அந்நோக்கத்தை வாசிப்பவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்குப் பின்பற்றியுள்ள எழுத்து முறைமையையும் தமிழ்ச் சிந்தனை மற்றும் ஆய்வுப்பரப்பில் இந்நூலின் இடம் எத்தகையது என்பதையும் முன்வைக்கிறது இந்தக் கட்டுரை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்றொரு சொற்றொடர் நீண்ட காலம் பயன்பாட்டில் இருக்கிறது. இலக்கணம் என்ற சொல்லோடு அழகியல், கலையியல், இலக்கியவியல் போன்ற கலைச்சொற்களையும் சேர்த்துக்கொள்ளலாம். நீண்ட இலக்கியமரபு கொண்ட தமிழ் மொழிக்கு அதன் தொடக்க நிலையிலேயே எழுதப் பெற்ற இலக்கணம் – தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் வெற்று இலக்கண நூல் அல்ல; அது ஒரு இலக்கியவியல் கோட்பாட்டை – நவீனத்திறனாய்வு சொல்லாடல்களாகப் பயன்படுத்தும் அழகியல் கோட்பாட்டைப் போன்றது என்பதை விவரிக்கிறது இந்த நூல்.   

திறனாய்வு அணுகுமுறைகள் என்ன செய்கின்றன

பனுவல், வாசிப்பு,  திறனாய்வுப்பார்வை, திறன்கள், உள்ளடக்கக் கூறுகள், வடிவக்கூறுகள், வெளிப்பாட்டுநிலை, விளக்கங்கள், விவாதங்கள், முடிவுகள், வழிகாட்டல்கள், கலைஞர்களை உருவாக்குதல், மனிதத்தன்னிலைகளை மாற்றுதல் எனத் திறனாய்வு அணுகுமுறைகளுக்கு ஒரு சங்கிலித்தொடர் வினைகள் இருக்கின்றன. இத்தொடர் வினைகளைப் பின்வரும் திறனாய்வு அணுகுமுறைகள்:  மார்க்சியத்திறனாய்வு அமைப்பியல் திறனாய்வு பெண்ணியத்திறனாய்வு தலித்தியத்திறனாய்வு பின் காலனியத்திறனாய்வு எவ்வாறு கையாளுகின்றன என்பதை மட்டும் இங்கே விளக்கலாம்.

திலீப்குமாருக்கு விருது

படம்
இதழியலாளர், நாடகவியலாளர், அரசியல் விமரிசகர் மற்றும் செயல்பாட்டாளர் நண்பர் ஞாநியின் பெயரில் விருதொன்றை நிறுவியுள்ளது மாற்று நாடக இயக்கம்.. பரிக்‌ஷா ஞாநி நினைவு விருதினைப் பெற்ற முதல் ஆளுமை நாடக எழுத்தாளர் எஸ்.எம்.ஏ. ராம். அந்த விழா மேடையில் நானும் இருந்தேன். விருதினை வழங்கும் நிகழ்வாகத் திருப்பத்தூர் மாற்று நாடக இயக்கத்தின் வருடாந்திர நாடகவிழா தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டுக்குரிய விருதாளராக சிறுகதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர் திலீப்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நான் அவரது இரண்டு கதைகளை நாடகமாக்கியவன் என்ற வகையில் அவருக்கு வாழ்த்துகள் சொல்கிறேன்.

இரண்டு தொடர் ஓட்டக்காரர்கள் - ஜெயமோகனும் அபிலாஷும்

ஜெயமோகனின் கட்டண உரை திருநெல்வேலியில் கட்டண உரைக்கூட்ட அறிவிப்பு வெளியான நாளிலேயே முடிவுசெய்திருந்தேன். ஜெயமோகனின் உரையைக் கேட்க வேண்டும் அதற்காக அந்த நாளில் நெல்லையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும் என நினைத்திருந்தேன்.அது நடந்தது.

பெண்ணெழுத்து: கனலியில் மூன்று பெண்கள்

படம்
எழுதும் ஒரு பெண், பெண்களின் சொல்லாடலைத் தவிர்த்துவிட்டு ஆணை எழுத முடியும். ஆண் உயிரியும் பெண்ணை எழுத முடியும். இந்த நிலைப்பாட்டைச் சிலவகைப் பெண்ணியலாளர்கள் ஒத்துக்கொள்வதில்லை; மறுதலிக்கிறார்கள். அப்படியான பால்மாறாட்டத்தில் சிறப்பான பெண் வெளிப்பாடுகள் இருப்பதில்லை என்பது அவர்களின் வாதங்கள் .அந்த வாதங்களில் ஓரளவு உண்மை இருந்தபோதிலும் முழுமையும் ஏற்கத்தக்கன அல்ல. எல்லா வகையான எழுத்தும் அனுபவங்களின் வெளிப்பாடாக மட்டுமே என்ற நம்பிக்கையின் அடிப்படை இதற்குள் இருக்கிறது.  இந்த நம்பிக்கை, நடப்பியல் சாராத எழுத்துகளுக்கும் பொருந்தாமல் போய்விடும். பாதிக்கப்பட்ட மனிதர்களின் துயரத்தை - ஏக்கத்தின் வலியை எழுதி, அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதலைக் காட்டும் எழுத்துகள் தீவிரமான தாக்கம் செலுத்தக்கூடியனதான். மனிதர்களின் மனதிற்குள் அலைவுகளை உருவாக்கித் திசைமாற்றம் செய்யும். இது ஒருவகையில் மனிதநேய எழுத்துக் கோட்பாட்டின் வெளிப்பாடுகள். அண்மை விமரிசனங்கள் மனித நேய எழுத்துகளின் காலம் முடிந்துவிட்டதாகச் சொல்கின்றன. ஆனாலும் இப்போதும் அவையே அதிகம் வந்து கொண்டிருக்கின்றன.