இடுகைகள்

எழுத்துகள் - எழுத்தாளர்கள்

படம்
அபிலாஷின் பத்தி எழுத்துகள் உயிர்மை.காம் இணைய இதழில் அபிலாஷ் இன்னொரு பத்தித் தொடரை எழுதப் போகிறார் என்றொரு விளம்பரத்தை மனுஷ்யபுத்திரன் பகிர்ந்துள்ளார். உயிர்மை கண்டுபிடித்து வளர்த்தெடுத்த எழுத்தாளர் அபிலாஷ் சந்திரன். அவரது புனைவுகளில் -சிறுகதைகளிலும் நாவலிலும் - அதிகப்படியான விவரணைப் பகுதிகளும், தர்க்கம் சார்ந்த விவரிப்புகளும் இடம்பெற்று புனைவெழுத்தின் அடையாளங்களைக் குறைத்துவிடும் விபத்துகளைச் சந்தித்திருப்பதாகக் கருதியிருக்கிறேன்; ஆனால் அவரது கட்டுரைகள் - அவை தனிக்கட்டுரைகள் ஆனாலும் சரி, பத்தித்தொடர்களாக எழுதப்படும் கட்டுரைகளும் முன்மாதிரி இல்லாத வகைமை கொண்டவை.

தேய்புரிப் பழங்கயிறென நெளியும் நவீனக் கவிதைகள்- லறீனாவின் ஷேக்ஸ்பியரின் காதலி

எழுதவிரும்பும் ஒருவர் முதலில் தொடங்குவது கவிதையாக இருக்கிறது. ஒன்றைப் பார்த்தவுடன் - ஒன்றில் பங்கேற்றவுடன் -ஒன்றால் பாதிக்கப்பட்டவுடன் அதைக் குறித்துச் சொல்வதற்கேற்ற இலக்கியவடிவம் கவிதை. அக்கவிதை வடிவத்திலேயே தொடர்ந்து செயல்படுகிறவர்கள் உணர்வை எழுதுவதிலிருந்து மெல்லமெல்ல நகர்ந்து அறிவையும் கருத்தியலையும் சிந்திப்பு முறைமைகளையும் கவிதையாக்கும் முயற்சிக்கு நகர்கிறார்கள். அப்படி நகரும்போது அந்தக் கவிஞர்கள் அந்த மொழியில் இயங்கும் காலத்தின் கவியாக அடையாளப் படுகிறார்கள். நவீனத்துவத்தை உள்வாங்கிய பாரதியின் தொடக்கக் காலக் கவிதைக்கும் பிந்தியக் காலக்  கவிதைகளுக்குமான வேறுபாட்டைக் கவனிப்பவர்களுக்கு இது புரியும் . 

கவிமனம் உருவாக்குதல்

தனது மனத்திற்குள் உருவாகும் சொற்களும், சொற்களின் வழி உருவாகும் உருவகங்களும் படிமங்களும் எல்லோரும் பேசுவதுபோல இல்லை. வித்தியாசங்கள் இருக்கின்றன என உணரும்போது ஒரு மனித உயிரி இலக்கிய உருவாக்க மனநிலைக்குள் நுழைகிறது. வெளிப்படும் வித்தியாசநிலை நிலையானதாகவும் நீண்டகாலத்திற்கு அந்த மனித உயிரியைத் தக்க வைக்கும் வாய்ப்பிருப்பதாக உணரும் நிலையில் கதைகளையோ, நாடகங்களையோ எழுதும் முயற்சியில் இறங்குகிறது. ஆனால் சொல்லி முடித்தவுடன் உருவாகும் உணர்ச்சிநிலையை ரசிக்கும் மனித உயிரி கவிதையில் செயல்படும் வாய்ப்பையே விரும்புகிறது.

பார்வையாளர்களாகிய நாமும் நமது பாவனை எதிர்ப்புகளும்

படம்
தகவல்கள்……. மேலும் மேலும் தகவல்கள்….. அா்த்தங்கள் ……. காணாமல் போகும் அா்த்தங்கள்……. நமது காலம் ஊடகங்களின் காலம்; நிலமானிய சமூகம், முதலாளிய சமூகம் எனப் பொருளாதார அடித்தளத்தின் பேரால் சமூகக் கட்டமைப்பை வரையறை செய்பவா்கள் கூட இன்றைய சமூகக் கட்டமைப்பைத் தகவல் சமூகம் (Information Society) என்றே வரையறை செய்கின்றனா். நகரம் மற்றும் பெருநகரவாசிகள் ஊடக வலைப்பின்னலுக்குள் வந்து சோ்ந்தாகிவிட்டனா். கிராமம் மற்றும் சிறுநகரவாசிகள் அதன் பரப்பை நோக்கி இழுக்கப்பட்டு வருகின்றனா். ஊடகங்கள் தரும் அனுகூலங்கள் அனைத்தையும் மனித உயிர்கள் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த வலைப்பின்னல் விரிக்கப்பட்டுள்ளதா….? ஆட்சியதிகார நடைமுறைகளைச் செயல்படுத்துவதற்காக நடந்ததா…..? மனிதச் செயல்பாடுகள் அனைத்தையும் நுகா்வியச் செயல்பாட்டின் பகுதிகளாக மாற்றிவிடத் தயாராகி விட்ட உலக ஓழுங்கின் இலக்குகள் ஈடேற வசதி செய்யப்படுகிறதா….? என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனால் ஒற்றைப் பதில் கிடைப்பதற்கு மாறாகப் பலவிதப் பதில்களே கிடைக்கும்.

தமிழியல் ஆய்வு:தமிழக வெகுசன இசையின் அரசியலும் அரசியலற்ற இசையும்

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் நடந்துள்ள ஆய்வுகளில் - குறிப்பாகச் சமூக அறிவியல் மற்றும் மொழிப்புல ஆய்வுகளின் வளர்ச்சியில் தமிழ்த் துறைகளின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க ஒன்று. ஒப்பீட்டளவில் இந்த வளர்ச்சி, சமூகவியல் துறைகள் சாதிக்காத சாதனைகள் கொண்ட வளர்ச்சி. இந்தியப் பல்கலைக்கழகங்களின் சமூக அறிவியல் துறைகள், காலனிய காலத்துச் சட்டகங்களை விட்டு விலகாமல் நடைபோட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழியல் துறைகள் அவற்றிற்கு மாறாகப் பலதளங்களில் விரிவடைந்திருக்கின்றன.

குற்றமே தண்டனை : நம்பிக்கை தரும் சினிமா

படம்
  வெகுமக்கள் ரசனைக்கான ஒரு சினிமாவில் இருக்கவேண்டியன · பலவிதத்தொனியில் பேச வாய்ப்பளிக்கும் உச்சநிலை (Climax) · பாடல்களும் ஆட்டங்களும் (Songs and dances) · சண்டைக்காட்சிகள் (Fights) · நகைச்சுவைக் கோர்வைகள் (Comedy Sequences) · அறிமுகமான நடிக முகங்கள் (Popular Artists)