இடுகைகள்

தேர்தல் -2019 -III

படம்
தமிழ் அடையாளங்களென நமது உறுப்பினர்கள்  மக்களாட்சி என்னும் அரசமைப்பு அடிப்படையில் புறநிலை யதார்த்தத்திற்கேற்பத் தன்னிலையை மாற்றிக்கொண்டு ஒவ்வொரு மனிதனும் பொது மனிதனாக ஆவது என்ற உயரிய சிந்தனையை முன்வைக்கும் ஒரு கோட்பாடு. நான், எனது, என்ற அகம் சார்ந்த தன்னிலை உருவாக்கக் கூறுகளை ஒரு மனிதனிடமிருந்தால் அதைக் குறைத்துப் பொதுநிலைப்பட்ட மனிதனாக ஆக்கும் நோக்கம் கொண்டது. அதன் மூலம் அம்மனித ஆன்மாவை விடுதலை அடையச் செய்யும் பாதையே மக்களாட்சியின் பாதை.

அதிகாரங்களின் முரணியக்கம்

பழைய பஞ்சாங்கங்கள் பயன்பாட்டில் இருக்கும் கலைச்சொற்களுக்கு எதிர்நிலைப்பாட்டைக் குறிக்கும் கலைச் சொல்லாக்கம் எளிமையானது. இருக்கும் கலைச்சொல்லின் முன்னால் - எதிர்/ Anti - என்பதைச் சேர்த்துப் பயன்படுத்திவிடலாம். ஆனால் அப்படியே பயன்படுத்தாமல் சிலவகையான வேறுபாடுகளோடு பயன்படுத்தும்போது எப்படிப் பயன்படுத்துவது என்பதில் சிக்கலும் குழப்பமும் ஏற்படுவதுண்டு. சிலவேளைகளில் - நவ(Neo)- என்ற முன்னொட்டும் சில வேளைகளில், - புது( New)- என்ற முன்னொட்டும் சேர்க்கப்படுகிறது

தடயம்:தமிழ் மாற்றுச் சினிமாவில் ஒரு மைல்கல்.

படம்
நிறைவேறாத காதல் - தமயந்தியின் தடயம் சினிமாவின் விவாதப் பொருள் என்பதைப் படம் பார்ப்பதற்கு முன்பே அறிவேன். தடயத்தை எழுத்தில் வாசித்திருக்கிறேன். அப்போது இப்படி எழுதியிருக்கிறேன்

தேர்தல் 2019 -II

05-04-19/எதிரிகளாகவும் சீர்திருத்தம் வேண்டுபவர்களாகவும் இன்றைய இந்தியாவில் தேசிய கட்சிகள் என்னும் அடையாளம் தாங்கிய அணிகளாக மூன்றைக் காட்டலாம். மைய அரசின் அதிகாரத்திலிருக்கும் பாரதிய ஜனதாகட்சியின் தலைமையை ஏற்றுக்கொண்ட அணி இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் செல்வாக்குடன் இருக்கிறது. அதற்கடுத்த நிலையில் இந்திய தேசியக் காங்கிரஸ் தலைமையில் இயங்கும் அணி இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் சமமாக இல்லையென்றாலும் பெரும்பாலான மாநிலங்களில் அரசியல் சொல்லாடல்களை உருவாக்கும் இடத்தில் இடதுசாரிகளாக அறியப்படும் இந்தியக் கம்யூனிஸ்டும் அதிலிருந்து உருவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் நட்புமுரணோடு ஒரே அணியாக இருக்கின்றன. இந்தப்பின்னணியில் இந்தப் பொதுத்தேர்தலில் மும்முனைப் போட்டி உருவாகியிருக்க வேண்டும். ஆனால் நிகழ்கால நெருக்கடிகள் இரட்டை எதிர்வை - இருமுனைப் போட்டியை உருவாக்கியிருக்கிறது

திறந்தநிலைப் பொருளாதாரம்: தேசிய/திராவிட இயக்கங்கள்

திறந்த நிலைப் பொருளாதாரம்:  உலகமயமும் தாராளமயமும் தனியார்மயமும் தொடங்கிய காலமாக 1991 ஆம் ஆண்டு குறிக்கப்படுகிறது. இவற்றை ஏற்றுக்கொண்ட இந்தியா பல தளங்களில் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

பாண்டிச்சி: முதல் எழுத்து என்னும் நிலையோடு...

படம்
தமிழ் இலக்கிய மரபில் கவிதைதான் பெண்களின் வெளிப்பாட்டு வடிவமாக இருந்துவருகிறது. கவிதையில் கதைசொல்லும் நெடுங்கவிதை களைக் கூட முயற்சி செய்யவில்லை. நெடும்பாடல்களையும் குறுங் காவியங்களையும் ஆண்களே முயற்சி செய்திருக்கிறார்கள். நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பிலும் கூடப் புனைகதைகள் எழுதும் பெண்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கிறது.