இடுகைகள்

திறந்தநிலைப் பொருளாதாரம்: தேசிய/திராவிட இயக்கங்கள்

திறந்த நிலைப் பொருளாதாரம்:  உலகமயமும் தாராளமயமும் தனியார்மயமும் தொடங்கிய காலமாக 1991 ஆம் ஆண்டு குறிக்கப்படுகிறது. இவற்றை ஏற்றுக்கொண்ட இந்தியா பல தளங்களில் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

பாண்டிச்சி: முதல் எழுத்து என்னும் நிலையோடு...

படம்
தமிழ் இலக்கிய மரபில் கவிதைதான் பெண்களின் வெளிப்பாட்டு வடிவமாக இருந்துவருகிறது. கவிதையில் கதைசொல்லும் நெடுங்கவிதை களைக் கூட முயற்சி செய்யவில்லை. நெடும்பாடல்களையும் குறுங் காவியங்களையும் ஆண்களே முயற்சி செய்திருக்கிறார்கள். நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பிலும் கூடப் புனைகதைகள் எழுதும் பெண்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கிறது.

உயர் கல்வி நிறுவனங்கள்

படம்
தரம் உயர்த்திக்கொள்ளல் ----------------------------------------- நான் பணியாற்றும் திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேசிய தர உறுதி மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் (NAAC) மதிப்பீட்டின்படி நான்கிற்கு 3.13 புள்ளிகள் பெற்று A - தரநிலையை அடைந்துள்ளது. இதற்கு முன்பு அதன் தரம் 'B'. இந்தத் தர உயர்வு ஒற்றைப்புள்ளி உயர்வு அல்ல. ஒரு தாவல். B என்ற தரநிலைக்கு அடுத்து B+, B++ என்று இரண்டு நிலைகள் உண்டு. இந்த இரண்டையும் தாண்டி A -என்ற தரநிலைக்குத் தாவியுள்ளது.

ஒரு அரங்கப்பட்டறை நினைவுகள் - பிரபாகர் வேதமாணிக்கம்

படம்
  1993ஆம் ஆண்டு அமெரிக்கன் கல்லூரியில் முதன் முறையாக ஒரு நாடகப் பயிலரங்கைத் திட்டமிட்டோம். நண்பர்கள் அ.ராமசாமியும் சுந்தர்காளியும் அந்த பயிலரங்கை வடிவமைத்தார்கள். நான் உடனிருந்தேன். நான் அப்போதுதான் ஒரு பயிலரங்கை அருகிருந்து பார்க்கிறேன்.

திலகா அழகு: ஆற்றியிருத்தலும் ஆற்றாதிருத்தலுமான பெண்ணுடல்கள்

படம்
நான் எழுதும்  ஒரு நூலுக்கான முன்னுரையில் அவர்  புதியவராக இருக்கும் நிலையில்  அவர்கள் இயங்க நினைக்கும் இலக்கியப்பரப்புக்குள் அறிமுகப்படுத்த நினைக்கின்றேன். ஏற்கெனவே இயங்குபவர்களாயின் அவர்களின் தனித்துவம் எதுவென அறிந்து வாசகர்களிடத்தில் விவாதிக்கத் தூண்டுகின்றேன். மௌனம் தின்னும் என்னும் தொகுப்போடு வந்திருக்கும் திலகா அழகு புதியவர். அவரது வருகையைக் கவிதைப்பரப்பிற்குள் அறிமுகம் செய்வதே இங்கு நோக்கம்

நவீனத்துவமும் பாரதியும்

ஆங்கிலத்தில் மாடர்ன் (Modern), மாடர்னிட்டி (Modernity), மார்டனிசம்(Modernism) என மூன்று சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. இம்மூன்று சொற்களின் வேர்ச்சொல் மார்டன் (Modern) என்பதே என்றாலும் பயன்பாட்டு நிலையில் வேறுபாடுகள் உள்ளன. இம்மூன்று சொற்களையும் தமிழில் நவீனம், நவீனத்துவநிலை, நவீனத்துவம் என மொழிபெயர்ப்புச் செய்து பயன்படுத்தலாம். தமிழில் ஒவ்வொன்றும் தனித்தனியாகச் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா? என்பது விவாதிக்கப்பட வேண்டியது.  நவீனம் என்பது அன்றாட வாழ்க்கையில் பெரிதும் பயன்பாட்டில் உள்ள சொல். நவீன நிலை என்பது எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் முடிவுகளின் மீது மனிதர்கள் காட்டும் நிலைபாட்டின் பக்கச் சார்பைக் குறிக்கும் சொல்லாக நடைமுறையில் இருக்கிறது. இம்மூன்றிலிருந்தும் விலகிக் குறிப்பிட்ட காலகட்டத்துக் கலை இலக்கிய விவாதங்களைக் குறிக்கும் சொல்லாக நவீனத்துவம் இருக்கிறது. அச்சொல்லின் வருகையும் செல்வாக்கும் மேற்குநாடுகளில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளிலும் கலை இலக்கியப்பரப்புகள் பலவற்றிலும் இருந்தது.