இடுகைகள்

பெண்மொழியின் மீறல்கள்: தமிழ்க்கவியின் பாடுபட்ட சிலுவையள்

படம்
  உலகில் மொழியின் தோற்றம் பற்றிய ஆய்வு, நீண்டகாலமாக நடக்கும் ஒன்று. மனிதத் தோற்றம் பற்றிய தேடலோடு மொழியின் தோற்றம் பற்றிய தேடலும் இரட்டை மாட்டு வண்டியின் சக்கரப்பதிவுகள். உலகப்பரப்பில் மனிதர்களின் தோற்றம் எங்கு நிகழ்ந்ததோ அங்குதான் மொழியின் தோற்றமும் நிகழ்ந்திருக்கும் என்பது மொழியியலாளரின் கருத்து. 

கடந்த காலத்தின் பெண்கள்:எம்.ஏ.சுசிலாவின் ஊர்மிளை

படம்
மனித வாழ்க்கை என்பது ஒற்றை நிலை கொண்டதல்ல. அதற்குள் முதன்மையாக இரட்டைநிலை உருவாக்கப்படுகிறது. இரட்டைநிலை உருவாக்கம் என்பது மனித உயிரியின் பெருக்கமும் விரிவாக்கமும் மட்டுமல்ல. அனைத்துவகை உயிரினங்களும் பெண் -ஆண் என்னும் பாலியல் இரட்டை வழியாகவே நிகழ்கின்றன. உயிரியல் அறிவாக நாம் விளங்கியிருக்கும் இவ்விரட்டையின் ஒவ்வொரு பக்கமும் இன்னும் இன்னுமாய் இரட்டைகளை உருவாக்கிப் பலநிலைகளை உருவாக்குவதன் மூலம் எண்ணிக்கையில் விரிகிறது.  

தொடர்ச்சியான பேச்சுகள்....

காலம் இதழின் வாசகர்களுக்கு உங்களை அறிமுகம் செய்யவேண்டியதில்லை இருந்தபோதிலும் காலம் படிக்கப்படும் -விவாதிக்கப்படும் தமிழ்ச்சிந்தனை வெளிக்கு உங்களை எப்படிக் காட்டிக்கொள்ள விரும்புகிறீர்கள். முன்பெல்லாம் என்னையொரு எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதில் ஆர்வத்தோடு இருந்தேன். அதற்காக வாதாடியிருக்கிறேன். இப்போது அப்படி நினைக்கவில்லை. என்னையொரு கல்வியாளனாக - பொறுப்பான பேராசிரியராக முன்னிறுத்துக்கொள்வதிலேயே கவனம் செலுத்துகிறேன். பொறுப்புள்ள பேராசிரியராக இருப்பதில் எழுத்தாளராக இருப்பதும் அடங்கும் என்றும் நம்புகிறேன். இருந்தபோதிலும் கலை இலக்கியவெளிக்குள் எனது நகர்வுகளைக் குறித்துச் சொல்வது தற்புகழ்ச்சியாகாது என்பதால் இதைச் சொல்லவிரும்புகிறேன்.எப்போதும் நான் இரண்டு குதிரைகள் மீது சவாரி செய்பவனாக இருந்து வந்துள்ளேன். ஒரு தன்னிலையை அல்லது அடையாளத்தை உருவாக்கியபின் அதை நானே அழித்தும் இருக்கிறேன். தன்னுணர்வோடு விலகுவதாகக் கருதித் திரும்பவும் அதற்குள் பயணித்திருக்கிறேன். எப்போதும் உள்ளேயும் வெளியேயுமான பயணங்கள் சாத்தியமாகிக் கொண்டே இருந்தன. தொடர்ந்து ஏனிப்படி நடக்கிறது என்றுகூடப்பல நேரங்களில் நினைத்துக் க

மொழிபெயர்ப்பும் புதுச்சந்தையும்

சரவணன் சந்திரன் நாவலொன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவது தொடர்பாகப் போகன் சங்கர் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். ஹரன் பிரசன்னாவும் கலந்துகொண்டு விவாதம் செய்கிறார்கள். அதில் எதிர்வினை செய்யாமல் இங்கே தனிப்பதிவாகப் போடுகிறேன்.

தி.சு.நடராசன் என்னும் எங்கள் ஆசிரியர்

படம்
நான் அவரது மாணவன். தமிழ்த் திறனாய்வு வரலாற்றில் மார்க்சியத் திறனாய்வுப் பள்ளியாக அறியப்பட்ட நா.வா.வின் ஆராய்ச்சி ஆய்வுப் பள்ளியின் முதன்மை அணியிலிருந்த தி.சு.நடராசனின் மாணவன் நான். அவர் கற்றுத்தந்த மார்க்சிய முறையியலைக் கைக்கொண்டு தமிழகத்தின் பின்னிடைக்காலமான நாயக்கர்காலத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவன் நான். அந்த அடிப்படையை வைத்துக்கொண்டு தமிழ்ச் சிறுபத்திரிகைப்பரப்பில் தொடர்ந்து பண்பாட்டுப் போக்குகள், அதனைத் தீர்மானிக்கும் சினிமா, தொலைக்காட்சி வெகுமக்கள் ஊடகங்கள், அரங்கவியல் நிகழ்வுகள் ஆகியவற்றைப் பற்றிக் கட்டுரைகள் எழுதும் ஆய்வாளனாக அறியப்படுபவன். அவரைப் போலவே இக்காலத் தமிழ் இலக்கியப் பரப்பான புனைகதைகள், கவிதைகள், நாடகங்கள் முதலான பிரதிகளின் உள்கட்டமைப்பையும் எழுதப்படும் சூழல்களையும் பேசும் விமரிசனச் சொல்லாடல்களை உருவாக்குபவன். 

இடம்பெயர்த்து அழைத்துச் செல்லும் கவிதைச் சொற்கள்

தொடர்ச்சியாக வேலைகள் இருக்கும்போது வாசிக்கவே முடியாமல் போய்விடும். கடந்த 10 நாட்களாகத் தினசரித்தாள்களைக் கூடப் புரட்டிவிட்டு வைத்துவிடும் அளவுக்குப் பல்கலைக்கழக வேலைகள்.தொடர்ச்சியாக நிகழ்வுகள் ஏற்பாடுசெய்து முடிக்கும்போது ஏற்படும் அலுப்பு தீரவேண்டுமென்றால் நான் காணாமல் போகவேண்டும். இருக்கும் இடத்திலேயே நான் தொலைந்து போக வேண்டுமென்றால் இன்னொரு வெளியை உருவாக்கி அதற்குள் நுழைந்துகொள்ளவேண்டும். அதைச் செய்வதில் கவிதைகள் எப்போதும் உதவியாக வந்து நிற்கின்றன- வேலைகளிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும்போது வாசிப்பதற்குக் கவிதையே ஏற்ற ஒன்று. அப்படியான கவிதைகளைத் தமிழில் எல்லாரும் எழுதிவிடுவதில்லை.  குறிப்பான மனிதர்களை -அவர்களின் சிடுக்குகளையும் அழுத்தப்படும் நிலைகளையும் சொல்லும் கவிதைகள் வாசிப்பவர்களை இன்னொரு மனிதர்களாக மாற்றி அவர்களின் வலியையும் நம்மீது சுமத்தித் தத்தளிக்கச் செய்துவிடும்.அதற்கு மாறான கவிதைகளும் அவற்றை எழுதும் கவிகளும் தமிழில் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக எனது வாசிப்பிலிருக்கும் அனார் அப்படியொரு கவி.