இடுகைகள்

கறுப்பி சுமதியின் முகில்கள் பேசட்டும்: உடலின் வேட்கை

படம்
“வாழ்வில் இனிமேல் ஒருபோதும் கிடைக்காத சந்தர்ப்பம் என்று எதுவோ இயக்கிக் கொண்டிருந்தது. ஆடி அடங்கி நித்திரையில் மூழ்கி நான் கண் விழித்துக் கொண்டபோது அதிகாலையாகியிருந்தது. பக்கத்தில் சயன் சீரான மூச்சோடு நித்திரையாயிருந்தான். நிர்வாணமாய் இரு உடல்கள். நான் எழுந்து உடுப்பை போட்டுக்கொண்டு அவன் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு எனது அறையை நோக்கி ஓடிப் போனேன். நண்பிகள் விழித்துக் கொள்ளு முன்னர் போய்விட வேண்டும் அவர்களுக்கு இரவு நான் எங்கு தங்கினேன் என்று சொல்லப் போகிறேன் ? தெரியவில்லை. ஆனால் உண்மை சொல்லப் போவதில்லை என்பது மட்டும் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.”

பேய்கள் பிசாசுகள் பெண்கள்: லறீனாவின் புளியமரத்துப் பேய்கள்

படம்
  ‘உள்ளூர்க்காரங்களுக்குப் பேய நெனச்சு பயம்; வெளியூர்க்காரங்களுக்கு தண்ணியப் பாத்தா பயம்’ என்றொரு சொலவடையை நான் கேட்டிருக்கிறேன்; நீங்களும் கேட்டிருக்கக்கூடும்.  மழை பெய்து பாதைகளில் ஆங்காங்கே நீர்க்குட்டைகளாகத் தேங்கியிருந்தால், வெளியூரிலிருந்து வருபவர்கள் எவ்வளவு ஆழம் இருக்குமோ என்ற அச்சத்தில் நீருக்குள் இறங்குவதற்குப் பகல் நேரத்திலேயே பயப்படுவார்கள். ஆனால் எந்த இருட்டிலும் அச்சமில்லாமல் நடந்து போவார்கள். ஆனால் உள்ளூர்க்காரர்களுக்கு நீரின் தேக்கமும் ஆழமும் தெரியுமென்பதால் பயப்பட மாட்டார்கள்.

சிநேகா- லட்சியவாதத்தின் குறியீடு

சிநேகாவின் பெயருக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாறு ஒரு காலகட்டத்து லட்சியவாத அடையாளத்தின் வரலாறு. அடக்குமுறையை எதிர்த்த ஒரு பெண்ணின் வரலாறு. அவசர நிலையை இந்திராகாந்தி அறிமுகம் செய்தபோது பதின்ம வயதுகளைக் கடந்து இருபதுகளில் நுழையக் காத்திருந்தவர்களின் லட்சியக் கனவின் ஒரு தெறிப்பு அந்தப் பெயர்.எனது 17 வயதில் அந்தப் பெயர் எனக்கு அறிமுகம். இந்திராவின் அவசரநிலைக் கால அறிவிப்புக் (1975, ஜூன் 25 -1977மார்ச்,21) கெதிராகக் கவிதையெழுதி வாசிக்கத் திட்டமிட்டவர்கள் என்னைப் போன்ற பதின்ம வயதுக்காரர்கள். அதே நேரம் வெடிகுண்டு வைக்கத் திட்டமிட்டவர்களில் ஒருத்தி எனக் கைதாகிச் சிறைக்குப் போன பெண்ணின் பெயராக சிநேகலதா ரெட்டி என்ற பெயர் அறிமுகமானது. 

காண்டாமிருகமாக்கப்படும் யானை

ஊடகங்கள் - எல்லாவகை ஊடகங்களும் அந்த யானையின் உருவத்தைக் காட்டிவிட்டன. தன்னை அறிந்துகொள்ளாத வெகுளித்தனத்தின் பெயராக முன்வைக்கப்பட்ட ஒரு சினிமாவின் பெயரை - சின்னத்தம்பி - யார்? ஏன் சூட்டினார்கள் என்ற வினாக்களுக்கு யாரும் விடை சொல்லப் போவதில்லை. நிரந்தரமான வாழிடத்திலிருந்து பிரிக்கப்பட்டுத் தூரப்படுத்தப்பட்டதை ஏற்க மறுத்துத் திரும்பிவிடும் தவிப்பில் நடந்துநடந்து கடந்த தூரத்தைக் கணக்கிடுகிறோம்.

சென்னைப் புத்தகக் காட்சி -2019: சில குறிப்புகள்

படம்
எப்போதும்போல இந்த ஆண்டும் சென்னைப் புத்தக காட்சியில் சில நாட்களைச் செலவழிக்க முடிந்தது. வாங்குபவர்களின் வருகை, விற்பனையின் போக்கு, புதிய நூல்களின் வருகையும் எதிர்கொள்ளப்படும் போக்கும் போன்றனவற்றை மனதில் இருத்திகொண்டு புத்தகக் காட்சியைச் சுற்றிவருபவன் நான். அப்படிச் சுற்றுவதன் பின்னணியில் நான் பணியாற்றும் பல்கலைக்கழக நூலகங்களுக்குப் புத்தகங்களைப் பரிந்துரைசெய்யும் வேலை எப்போதும் இருந்து வந்துள்ளது. இந்த ஆண்டு அந்த வேலை இல்லை. அடுத்த ஆண்டுமுதல் இருக்கப்போவதில்லை.

கணவன் – நட்பு – துணை ஹேமாவின் இரண்டாமவன் எழுப்பும் விவாதங்கள்

படம்
வளர்ச்சி – பங்களிப்பு- உரிமை – கடமை போன்ற சொற்களும் சொல்லாடல்களும் நமது காலத்தில் திரும்பத்திரும்பக் காதில் விழும் சொற்களாக இருக்கின்றன. நிலத்தை மையமாகக் கொண்ட நிலவுடைமை சமூகத்து வாழ்க்கையிலும் பேச்சு மொழியிலும் இலக்கியப் பனுவல்களிலும் இச்சொற்களுக்கிணையான சொற்கள் புழக்கத்தில் இருந்தன. ஆனால் முதலாளிய சமூகத்தில் புதிய பொருண்மைகளைத் தனதாக்கிக் கொண்டுள்ளன. காரணம் எல்லாவிதமான வளர்ச்சியிலும் எல்லோரும் பங்கெடுக்க வேண்டும்; அதற்கான உரிமைகள் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதை உணர்ந்து கடமையாற்றி உரிமைகளைப் பெற்றுக் வேண்டும். இப்படிப்பட்ட எண்ணத்தின் விளைவுகளே இந்தச் சொற்கள் நம் காலத்தில் திரும்பத் திரும்ப ஒலிக்கக் காரணங்களாகும்.