இடுகைகள்

கனவான்களின் பொதுப்புத்தி

படம்
“திறமைகளை மதிக்காத சமூகம் கிரிமினல்களை உருவாக்குகிறது“ – தத்துவார்த்தச் சொல்லாடல்களில் ஒன்று. மாவட்ட அளவில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற மாணவா்கள் விரும்பிய துறையில் ஈடுபட முடியாத நிலையில் (இன்றைய சூழ்நிலையில் மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களுக்கு உரிய இடம் மறுக்கப்படுவதில்லை) ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான். தாய் தன் உயிரைப் பணயம் வைத்து லஞ்சம் கொடுத்தும், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காதபோது இன்னொருவன் கிரிமினலாகிறான். கிரிமினலானது எல்லாருக்குமான கல்விச் சாலையை உருவாக்கத்தான் (திறமையானவா்களுக்கு முன்னுரிமை கொடுக்க அல்ல) இது “ஜென்டில்மேன் படத்தின் கதை”.

சந்திக்கும் கணங்களின் அதிர்ச்சிகள் : புலப்பெயர்வு எழுத்துகளின் ஒரு நகர்வு

இரண்டு மாத இடைவெளிக்குள் இந்த ஆறு சிறுகதைகளும் வாசிக்கக் கிடைத்தன.புலம்பெயர்ந்த எழுத்து அல்லது அலைவுறு மனங்களின் வெளிப்பாடு என்னும் அடையாளத்துக்குள் நிறுத்தத்தக்க இந்த ஆறுகதைகளில் ஆகச்சிறந்த கதை எது எனத் தேர்வு செய்யும் நோக்கம் கொண்டதல்ல இந்தக் கட்டுரை. அதேநேரத்தில் அப்படியொரு தொனி வெளிப்படுவதைத் தவிர்க்கமுடியாது என்பதையும் முதலிலேயே சொல்லி விடலாம். ஆறுகதைகளில் மூன்று கதைகள், காலம் இதழின் 51 -வது இதழில் வாசிக்கக் கிடைத்த கதைகள். அடுத்த மூன்று. அம்ருதா இதழில் வாசிக்கக்கிடைத்த கதைகள். அவை:

மெல்லினமும் வல்லினமும்

“இந்தியப்பொருளாதாரம் நிதானமாக இல்லை; வீழ்ச்சியை நோக்கிப் போகிறது” என்கிறார்கள் இப்போது. அப்படிச் சொல்பவர்கள் சிலவகைப் புள்ளிவிவரங்களை முன்வைக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு ‘இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது’ என்பதை நம்பச் செய்யும்படியான புள்ளி விவரங்கள் காட்டப்பட்டன. இந்தப் புள்ளி விவரங்களைப் பார்க்கும்போதும் கேட்கும்போதும் எனக்குத் தொலைக் காட்சியில் அடிக்கடி பார்க்கும் அந்த விளம்பரம் தான் நினைவுக்கு வரும். ‘’ நான் வளர்கிறேனே மம்மி’’ என்று சொல்லி விட்டு ஒரு சிறுவன் நிமிர்ந்து நிற்பான். அந்த வளர்ச்சியை மனதுக்குள் ரசிக்கும் அவனது தாய் வளர்ச்சிக்குக் காரணமான மென்பானத்தைக் கையில் வைத்தபடி சிரித்துக் கொண்டிருப்பாள். தொடர்ந்து சில ஆண்டுகள் அந்தப் பானத்தைக் கொடுத்து வரும் அன்னைக்குத் தன் மகனின் வேகமான வளர்ச்சிக்குக் காரணம் அந்த பானம்தான் என்ற நம்பிக்கை உண்டாவது இயல்பான ஒன்றுதான். உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அந்தப் பானத்தில் இருப்பது உண்மையாகக் கூட இருக்கலாம். அதனால் மற்றவர்களின் வளர்ச்சியை விட அவனது வளர்ச்சி விகிதம் கூடுதலாக இருப்பதும் சாத்தியம்

ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்- தவமாய் தவமிருந்து, சண்டைக்கோழி

படம்
தமிழ் சினிமாவில் தமிழின் அடையாளங்கள் வெளிப்படுவதில்லை என்பது பொதுவாக வைக்கப்படும் குற்றச் சாட்டு அல்லது நிலவும் விமரிசனம். விமரிசனம் செய்பவா்களிடம் பலநேரம் வெளிப்படுவது கோபமாக இருக்கிறது. இல்லையென்றால் கவலையாக இருக்கிறது. கோபப் படுகிறவா்களுக்குத் தேவை சாந்தப்படுத்துதல்; கவலைப் படுகிறவா்களுக்குத் தேவை ஆறுதல். தேவையானவா்களுக்கு தேவையானவற்றைத் தருவது நமது தமிழ் சினிமா இயக்கநா்களின் பணியும் கடமையும். அடுத்தடுத்து இரண்டு இயக்குநா்கள் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனா். இயக்குநா் சேரன் தனது ’தவமாய் தவமிருந்து’ மூலம் தருவது சாந்தம்; லிங்கு சாமியின் ’சண்டைக்கோழி’ தர நினைப்பதோ ஆறுதல். ஆனால் ஆபத்துக்களுடன்.

துறையும் பல்கலைக்கழகமும் - சில நினைவுகள்

படம்
  தமிழியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்:  பல்கலைக்கழகங்களின் தகுதிமதிப்பீட்டைப் பரிசீலனை செய்து தரமதிப்பீட்டை உருவாக்கும்- NAAC- நோக்கத்தோடு தேசியத் தரமதிப்பீட்டுக்குழு பல்கலைக்கழகத்திற்கு வருகைதர உள்ளது. ஒவ்வொரு துறைக்கும் வருவார்கள். அவர்கள் வரும்போது ஒவ்வொரு துறையும் தங்களின் சிறப்புக்கூறுகளையும் செயல்பாடுகளையும் ஆதாரங்களோடு முன்வைக்க வேண்டும்.

இருத்தலையும் இருத்தல் நிமித்தங்களின் வண்ணங்களையும் வரைதல்..தேன்மொழி தாஸின் கவிதைகள்-

படம்
பத்து ஆண்டுகளுக்கு முன்பே அந்தப் பெயர்- தேன்மொழிதாஸ்- என்ற பெயர் ஒரு கவியின் பெயராகப் பதிந்திருந்தது என்றாலும், பலராலும் சொல்லப்பட்டு உருவான தமிழ்க்கவிதைப்போக்கு ஒன்றிற்குள் இருக்கும் அடையாள வெளிப்பாடாகவோ, நானே வாசித்து உருவாக்கிக்கொண்ட தனித்துவமான கவியின் அடையாளமாகவோ அந்தப் பெயர் பதிந்திருக்கவில்லை. என்றாலும் பதிந்திருந்தது.  வாசகப்பரப்பில் ஒரு கவியின்/எழுத்தாளரின் பெயர் பதிந்துவிடப் பல காரணங்கள் இருக்கின்றன. போகிற போக்கில் விமரிசகன் குறிப்பிடும் ஒரு பெயரின் பின்னால் இருக்கும் எழுத்துகள், வாசிப்பவர்களிடம் தன்னை வாசிக்கும்படி முறையிடுகின்றன. ஆனால் அந்தப்பெயரும் அவரது எழுத்துகளும் தொடர்ச்சியாக நினைவுக்குள் ஆழமாய் நின்றுவிட, விமரிசகனின் அந்தக் குறிப்புமட்டும் போதாது. தீவிரமான வாசகராகத் தன்னைக் கருதிக்கொள்பவர் அந்தப் பெயரோடு வரும் எழுத்துகளைப் படிக்கும்போது விமரிசகன் சொன்ன காரணங்களோடு உரசிப்பார்க்கவே செய்வார்கள். முழுமையும் பொருந்துவதோடு, புதிய திறப்புகளையும், பரப்புகளையும் காட்டும் நிலையில் இருப்பதாக நினைத்தால், அந்தக் கவியை அல்லது எழுத்தாளரைத் தேடி வாசிக்கும் பட்டியலில் சேர்த்துக்க