படம் தரும் நினைவுகள் -3
இந்தப்படம் எடுத்த ஆண்டு 2000 அல்லது 2001 ஆக இருக்க வாய்ப்புண்டு. திருநெல்வேலி பாளையங் கோட்டையில் அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு எதிரில் இருக்கும் எம். எல்.பிள்ளை நகரில் குடியிருந்த காலம். தமிழ் இலக்கிய வரலாற்றறிஞர்களில் ஒருவரான கா.சு.பிள்ளையைத் திருநெல்வேலிக்காரர்கள் எம்.எல். பிள்ளையாக நினைவில் வைத்திருக்கிறார்கள். நீண்ட ஆஸ்திரேலிய வாழ்க்கையின் இடையில் தமிழகம் வந்தபோது என்னைப் பார்ப்பதற்காகவே நெல்லைக்கு வந்தார் பத்தண்ணா என்றழைக்கப்பட்ட இளைய பத்மநாதன். அவரது முதல் அறிமுகம் 1987.