இடுகைகள்

மாஜீதா பாத்திமாவின் உம்மாவின் திருக்கை மீன்வால் : தந்தைமையைத் தாக்குதல்

படம்
வாசிக்கப்படும் இலக்கியப் பிரதியொன்றை ஆண்மையப் பிரதியா? பெண் மையப் பிரதியா? என அடையாளப்படுத்திக் கொண்டு விவாதங்களை முன்வைப்பது பெண்ணிய அணுகுமுறை. ஒரு பிரதியை அடையாளப்படுத்தும் கூறுகள் அதன் தலைப்பு தொடங்கி, சொல்லும் பாத்திரம், விசாரிக்கப்படும் பாத்திரங்கள், உண்டாக்கப்படும் உணர்வுகள், வாசிப்பவர்களுக்குக் கிடைக்கும் சிந்தனை மாற்றம் எனப் பலவற்றில் தங்கியிருக்கக் கூடும். மாஜிதா பாத்திமா எழுதிய உம்மாவின் திருக்கை மீன் வால் என்ற கதையை (அம்ருதா, மே, 2019) பெண்மையக் கதையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் பல கூறுகள் கதைக்குள் இருக்கின்றன. 

ஞாநியென்னும் அக்கினிக்குஞ்சு

படம்
புதியதொரு இடத்தில் – நெருக்கடியான இடத்தில் படுத்திருப்பதுபோலக் கனவு. திரும்பிப்படுக்கும்போது, இடது கைபட்டு ஜன்னலில் இருந்த சின்னஞ்சிறு முகம் பார்க்கும் கண்ணாடி கீழே விழுந்து கலீரென்று உடைகிற சத்தம். தட்டியெழுப்பியபோல விழிப்பு. கழிப்பறைக்குப் போய்வந்து படுத்தால் தூக்கம் வரவில்லை. அரைமணி நேரமாகியும் கண்சொருகவில்லை. கணினியின் திரையைத் திறந்து முகநூலுக்குள் நுழைந்தபோது கல்கி ஆசிரியர் வெங்கடேஷ் ஞாநியின் மரணச்செய்தியை அறிவுப்புச் செய்திருந்தார். சரியாக 38 நிமிடங்கள் ஆகியிருந்தன. இவ்வளவு துல்லியமாகச் சொல்லக்காரணம் உள்ளுணர்வின் முன்னறிவிப்புதான். உள்ளுணர்வு பற்றி இப்போது கேட்டாலும் தர்க்க அறிவு நம்பிக்கை இல்லை என்றுதான் சொல்கிறது. ஆனால் அந்த உள்ளுணர்வு தனது முன்னறிவிப்பைச் செய்துகொண்டேதான் இருக்கிறது. வழக்கமாக 5 மணிநேர இடைவெளியில்தான் விழிப்பு வரும். இரவு 11 மணிக்குப் படுத்தால் காலையில் 4 மணி. 12 என்றால் காலை 5. எப்போது படுத்தாலும் ஐந்தரை மணிக்கு எழுந்து விடவேண்டுமென பழக்கமாக்கப்பட்ட உடல். அன்று தடம்புரண்டு மூன்றரை மணிநேரத்தில் விழித்துக்கொண்டது. படுத்திருந்த அறை புதிய இடம்தான். ஆனால் குறுகல

27 யாழ்தேவி- குறிப்புகள் வழி அலைவுநிலை பேசும் கதைகள்

முன்  –  பின் என்ற எதிரும் புதிருமான சொற்கள் கலை இலக்கியச் சொல்லாடலில் விளக்கங்களைச் சொல்வதற்கும் ,  விளங்கிக்கொள்வதற்கும் பயன்படும் சொற்கள் .   தமிழ் இலக்கியப்பரப்பில் பாரதிக்குமுன்  –  பாரதிக்குப் பின் எனப்பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம் .  உலக இலக்கியத்தில்  காலனியம் அப்படியொரு எல்லையாக இருக்கிறது .  காலனித்துவத்தின் பிடியிலிருந்த நாடுகளும் காலனியாதிக்க நாடுகளும் தங்கள் தேசத்துப் பொருளாதார ,  அரசியல் ,  கருத்தியல் சிந்தனைகளை அந்தச் சொல்லை மையமாக்கி விளங்கிக் கொள்கின்றன .

இற்றைப் படுத்தும் சொற்கள்: ரவிக்குமாரின் விமரிசனப்பார்வை

ரோம் நகரில் வாழும்போது ரோம் நகரத்தவனாக இருக்கவேண்டும் என்றொரு சொற்கோவையைப் பலரும் சொல்லக்கேட்டிருக்கலாம். இந்தச் சொற்கோவைக்குப் பின்னிருப்பது வாழிடத்தோடு பொருந்திப் போகிறவர்கள் தாக்குப் பிடிப்பார்கள்; வாழித்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் தூக்கியெறியப்படுவார்கள் என்பதுதான். நாம் வாழும் வெளியை உணர்தலை வலியுறுத்தும் இச்சொற்கோவை, பொதுவான வாழ்தலுக்குச் சொல்லப்பட்ட ஒரு மரபுத்தொடர். இம்மரபுத்தொடரை ஆய்வு அல்லது திறனாய்வு போன்ற சிறப்புத்துறைக்குள் இயங்குபவர்களுக்குப் பொருத்தும்பொழுது அப்படியே ஏற்கவேண்டியதில்லை. இங்கே வெளிக்குப் பதிலாகக் காலத்தை மையப்படுத்த வேண்டும். காலத்தை மையப்படுத்தும்போது நிகழ்ந்த காலமும் நிகழ்த்தப்படும் காலமும் முதன்மைப்படுத்தப்பட வேண்டும்

முகம் மாறிய அரசியல் கவிதைகள் :ஜெயதேவனின் முச்சூலம்

பொதுநல அமைப்பாகப் பாவனை செய்த அரசு அமைப்பைக் கைவிட்ட இந்தியாவைக் கவிதைகள்- தமிழ்க் கவிதைகள் முன்வைக்கத்தவறியுள்ளன. தாராளமயம், உலகமயம், தனியார் மயம் உருவாக்கிவைத்திருக்கும் நுண் அமைப்புகளிலிருந்து பேரமைப்புகள் வரை ஒற்றைத் தன்மையுடன் இயங்குவன அல்ல. முதலாளித்துவத்தைத் தாண்டிய பொருளியல் கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும், பண்பாட்டு நடவடிக்கைகளுக்காக நுண் அலகுகளையும் குடும்பம், சாதி, கோயில், சடங்குகள் போன்றவற்றை அப்படியே நிலவுடைமைக்காலச் சட்டகங்களுடன் பேண நினைக்கிறது.

கமல்ஹாசன்: அடையாளங்களுடன் தமிழ் சினிமா

படம்
தேவா்மகனும் மகாநதியும் விருமாண்டியும் கமல்ஹாசன் – பல்வேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் திறமை கொண்ட நடிகா். நல்ல சினிமா மீது பற்றும், தமிழ் சினிமாவின் சரியான வளா்ச்சியில் அக்கறையும் கொண்டவா். சினிமாவுக்கு வெறும் வியாபார நோக்கம் மட்டுமே இருக்க முடியாது; சமூகப் பொறுப்பும் உண்டு என நம்புகிறவா்.

அருவி : விமரிசன நடப்பியலின் வகைமாதிரி

படம்
தனது முதல் படத்தைக் கவனிக்கத்தக்க படமாக இயக்குவதில் தீவிரம் கவனம் செலுத்துவதில் வெற்றியடைந்த இயக்குநர்களின் வரிசையில் இணைந்திருக்கிறார் அருவி படத்தின் இயக்குநர் அருண் புருசோத்தமன். அருவி படம் பார்த்துமுடித்தவுடன் நினைவுக்கு வந்த படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். அதுவரை தான் இயக்கிய படங்களுக்குத் தனது பெயரை ரா. பார்த்திபன் என எழுதிக்காட்டி வந்தவர், ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என நீண்ட பெயரை வைத்திருந்தார். அவர் எப்போதும் புதுமைவிரும்பி என்றாலும், அந்தப் படத்தில் காட்டிய புதுமை, காரணமற்ற புதுமைகளாக இல்லாமல், படத்தின் தேவைக்கேற்ற புதுமையாக இருந்தது.பிரெக்டின் காவியபாணிக் கதைகூற்றுமுறையைத் (Epic Narration) தேடிப் பயன்படுத்தியிருந்த பார்த்திபன், படம் முழுவதும் அதன் அடிப்படைத் தன்மையான விலக்கிவைத்தலும்(Alienation) ஒன்றிணைத்தலும் (Involvement) என்பதைக் கச்சிதமாகக் கையாண்டு படத்தைப் பார்வையாளர்களின் முடிவுக்கு விட்டுவைத்தார். இத்தன்மை காரணமாகப் படத்தின் மையக் கதையோடு தொடர்ந்து பார்வையாளர்கள் விசாரணை நிலையிலேயே ஒன்றிணைந்து விலகினார்கள்.