இடுகைகள்

சீர்மலி நகரங்களில் படகுப் பயணங்கள்

படம்
சீர்மலி நகரங்கள் (Smart cities) ஆக்குவதற்கான பட்டியலை இந்திய அரசாங்கம் ஓராண்டுக்கு முன்பே அறிவிக்கத்தொடங்கியது. தமிழ்நாட்டில் முதலில் நான்கு என்றார்கள். நான்கு ஆறு என்றானது. இப்போது சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், திண்டுக்கல், ஈரோடு, கடலூர் எனப் பன்னிரண்டு நகரங்கள் பட்டியலில் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான நகரங்கள் மாநகராட்சி என்ற தகுதியைப்பெற்றவை. திண்டுக்கல், கடலூர், போல ஒன்றிரண்டுதான் மாநகராட்சித் தகுதியை அடையாத நகராட்சிகள்.

கைவிடப்பட வேண்டிய கலைக்கோட்பாடு: கொடிவீரன்

படம்
அண்மையில் வந்த கொடிவீரன் என்ற சினிமாவை இயற்பண்புவாத சினிமாவாக வகைப்படுத்தி விமரிசனம் செய்யலாம். இந்தப் படம் மட்டுமல்ல; இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் கார்த்தி நடித்த கொம்பனும் சசிகுமார் நடித்த குட்டிப்புலியும் கூட இயற்பண்புவாத(Naturalism)க் கலைக்கோட்பாட்டோடு பொருந்தும் சினிமாக்கள்தான். ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தை வெளிப்படையாக அறிவித்துக்கொண்ட வெளியாகக் கொண்டு நிகழ்ச்சிகளைக் காட்சிகளாக உருவாக்கும் இயற்பண்புவாதப் படங்கள் நுட்பமான தரவுகளை அடுக்கிக்காட்டும் இயல்புடையன. திருவிழா, விளையாட்டு, போட்டிகள், கண்மாயழிப்பு போன்ற பொதுவெளி நிகழ்ச்சிகளையும் குடும்பச்சடங்கு நிகழ்வுகளான குழந்தை பிறப்பு, காதுகுத்து, கல்யாணம், தொடங்கிச் சாவுவீடு வரை உள்ளவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அடுக்குவதின் மூலம் பண்பாட்டு ஆவணமாகத் தோற்றத்தை உண்டாக்கும் தன்மையை இத்தகைய படங்களில் காணலாம்.

தேசிய நாடகத்தை உருவாக்குதலின் ஒரு பரிமாணம்

படம்
மாதய்யா தி காப்ளர் நவம்பர் 17,18,19 தேதிகளில் சென்னை அரசுஅருங்காட்சியகத்திற்குள் இருக்கும் ம்யூசியம் அரங்கில் நிகழ்த்தப்பெறும் என்றதகவலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் ப்ரசன்னா ராமஸ்வாமி.அவரது இயக்கத்தில் மேடையேறிய பெரும்பாலான நாடகங்களைப் பார்த்தவன் என்றவகையில் இந்த நாடகத்தைப் பார்க்கவேண்டிய நாள்:18-11-2017  எனக்குறித்துக் கொண்டேன். நான் போன இரண்டாவது நாள் ம்யூசியம் அரங்கு பார்வையாளர்களால்நிரம்பியது. முந்திய நாளும் நிரம்பியது என்றே அறிந்தேன். மூன்றாவது நாளும்நிரம்பியிருக்கும். நான் போன அன்று நாடகத்தைக் கன்னடத்தில் எழுதிய நாடகஆசிரியர் எச். எஸ். சிவப்பிரகாஷும் நாடகம் பார்க்க வந்திருந்தார் என்பது கூடுதல்சிறப்பு. 

அறம்:அரசதிகாரத்தின் குற்றமனம்

படம்
அண்மையில் திரைக்கு வந்து வணிக வெற்றியடைந்துள்ள அறம் என்ற சினிமா கவனிக்கத்தக்க சினிமாவாக ஆகியிருக்கிறது. வணிகரீதியான வெற்றிக்காக மட்டுமல்லாமல் பொறுப்புள்ள சினிமாவின் அடையாளமாகவும் ஆகியிருக்கிறது. அச்சினிமா கவனம் பெற்றதால், அதன் இயக்குநர் கோபிநயினார் முதல் படத்திலேயே கவனம் பெற்ற - வெற்றிப்பட இயக்குநராக ஆகியிருக்கிறார்.

பணமதிப்பிழப்புக்காலக் குறிப்புகள்

படம்
9/11/2016 நெல்லை அதிவிரைவு ரயிலில் பயணம். தொலைக்காட்சி பார்க்கவில்லை. தேசத்தின் வேகமான மாற்றம் எனக்குத் தெரியாது. நேற்றும் முந்தியநாளும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உரையாற்றினேன். ரூ. 8722/- கொடுத்தார்கள். கைவசம் வைத்திருந்த நான்கு ரூ.500/- தாள்களோடு மொத்தம் 10722/_ இருந்தது நேற்று மாலை. 21 ஐந்நூறு ரூபாய்த் தாள்களும் இரண்டு நூறு ரூபாயும் சில்லரையும்.. ரூ.90/- இரவு உணவுக்குக்காலி. ஒரு 500 ரூபாளைத் தாளைக் கொடுத்து மாற்றியிருக்கலாம். மாற்றவில்லை. நள்ளிரவில் நடக்க இருந்த மாற்றத்தை உள்ளுணர்வு சொல்லவில்லை. ரயிலைவிட்டு இறங்கி ரயிலடியிலிருந்து ஆட்டோவில் செல்லமுடியாது. தரவேண்டிய பணம் 170/-  இப்போது இருப்பது 132/-தான். நடைதான் ஒரே வழி. பிறகு பேருந்து. பின்னொரு நடை. ஒரு மணிநேரம் கூடுதலாக ஆகும் வீடு போய்ச்சேர. தேசநலனுக்காகச் சகித்துக் கொள்ளவேண்டும். முதல் சகிப்பு. பாதிப்பில்லை.  கையெழுத்துப்போட்டுச் சம்பளம் வாங்குவதால் வரியும் கட்டியிருக்கிறேன்.  அதனால் பாதிப்பில்லை. சிக்கல்கள் உள்ளன. தொடர்ந்து சில நாட்களுக்குச் சிக்கல்கள் தான். அடுத்தடுத்தும் வரும். கடந்துதான் ஆகவேண்டும். சகிக்க வேண்டும். சகித்

தேடிப்படிக்கவேண்டிய நூல்கள்

படம்
கல்விப்புல வாசிப்பிற்கும் கல்விப்புலத்திற்கு வெளியே இருப்பவர்களின் வாசிப்புக்குமிடையே முதன்மையான வேறுபாடுகள் உண்டு. மொழி, இலக்கியத்துறைகளில் இருக்கும் வேறுபாட்டை என்னால் விரிவாகச் சொல்லமுடியும். ஆனால் இந்த வேறுபாடு எல்லாத்துறைகளிலும் இருக்கிறது என்பதுதான் உண்மை.வாசிக்கவேண்டிய நூல்களின் ஒரு பட்டியல் இங்கே