இடுகைகள்

பொதுப்போக்கிலிருந்து விலகுதல்

படம்
முனைவர் பட்டத்தை ஒருவர் எப்படி நினைக்கிறார் என்பதிலிருந்தே அவர் செய்யப்போகும் ஆய்வும் அமையும் . ஆய்வுப்பட்டத்தை இன்று பலரும் வேலைவாய்ப்புக்கான அடிப்படைத்தகுதியாகக் கருதுகின்றனர் . அந்த அங்கீகாரம் கையிலிருந்தால் , அதை வைத்து எப்படியாவது ஒரு கல்லூரியிலோ , பல்கலைக்கழகத்திலோ வேலை வாங்கிவிடலாம் என்பது அவர்களது கணிப்பு . அந்தக் கணிப்பு பிழையானதன்று . அப்படிச் செய்பவர்கள் பெரும்பாலும் போலச்செய்தல் முறையில் ஆய்வேடுகளைத் தருகிறார்கள் . மதிப்பீட்டாளர்கள் குறைந்த அளவுத் தேர்ச்சி மதிப்பெண்ணை வழங்கும் மனநிலையில் ஆய்வேட்டை மதிப்பிட்டு முனைவர் பட்டம் வழங்கப் பரிந்துரை செய்கின்றனர் .

இடையீட்டுப் பிரதிகளின் சாத்தியங்கள் : காண்டவ வனத்தை முன்வைத்து

படம்
மார்ச் 18, சனிக்கிழமை, கூத்துப்பட்டறையின் தயாரிப்பரங்கில் ப்ரசன்னா ராமஸ்வாமி நெறியாள்கையில் மேடையேறிய காண்டவ வனம் என்னும் நாடகப்பிரதியை ந.முத்துசாமி நாடகங்கள் என்ற தொகுப்பில் வாசித்திருக்கிறேன். முழுமையாக இல்லாமல் சில காட்சிகளாக மேடையேறியதையும் பார்த்திருக்கிறேன். அம்மேடையேற்றம் நாடகம் எழுதப்பெற்ற 1991 ஆம் ஆண்டிலா? அதற்கடுத்த ஆண்டிலா? என்பது நினைவில் இல்லை. அப்போது அப்பிரதியின் பெயர் காண்டவ வன தகனம். இப்போது காண்டவவனம். காண்டவ வன தகனம் என்பது மகாபாரத்தில் ஒரு பகுதி.

எழுத்துக்காரர்களின் புலம்பல்கள்

இலக்கியப்பட்டறைகளில் கலந்துகொள்ளத் தெரிவுசெய்யப்படும் பட்டியலில் இடம்பிடிக்க எப்படி எழுதவேண்டும் நண்பர்களே? 

சென்னைக்கு வரலாம் நாடகம் பார்க்கலாம்

படம்
கலை, இலக்கியத் தளங்களின் நிகழ்காலப் போக்கு எவ்வாறிருக்கிறது என்பதையறியக் கூட்டங்களில் கலந்துகொண்டே ஆகவேண்டும் என்ற நிலை 1990 களுக்குப் பின் இல்லை. அதுவும் முகநூலின் வருகை ஒவ்வொருவரையும் ஆகக் கூடிய தனியர்களாக வாழும்படி ஆக்கிவிட்டது. உலகத்தின் எந்தமூலையிலும் வாழ்ந்துகொண்டு, தமிழ்நாட்டில் இருப்பதுபோல உணரமுடியும் என்ற நிலையைக் கொண்டுவந்துவிட்டது.

நிவேதா உதயன்: நினைவுகளில் அலைதல்

படம்
  புதியவர்களாக இருக்கும் நிலையில்  ஒரு நூலுக்கான   முன்னுரை   அவர்கள் இயங்க நினைக்கும் இலக்கியப்பரப்புக்குள் அறிமுகப்படுத்த நினைக்கவேண்டும் . ஏற்கெனவே இயங்குபவர்களாயின் அவர்களின் தனித்துவம் எதுவென அறிந்து வாசகர்களிடத்தில் விவாதிக்கத் தூண்டலாம் . நிவேதா உதயன் புதியவர் கவிதைக்கு. இது அவரது முதல் தொகுதி

சல்லிக்கட்டு: சில குறிப்புகள்

ஒழிக ! வாழ்க!! குரல்களின் ஒலியளவு ======================================== ஒவ்வொருமொழியிலும் சொற்கள் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன. அவை பெயர்(Noun) வினை(Verb). இவ்விரண்டையும் கூடுதல் அர்த்தப்படுத்தப்படுவனவே இடைச்சொற்களும் உரிச்சொற்களும். தமிழில் மட்டுமே இடை, உரி என்பன தனிப்பட்ட வகையாக இருக்கின்றன. இவைகளைப் பெரும்பாலான மொழிகள் முன்னொட்டுகளாகவும் சில மொழிமொழிகளில் பின்னொட்டுகளாகச் சொல்லப்படுகின்றன. வாழ்க!, ஒழிக! இவை வினைமுற்றுகள். வேண்டும்! வேண்டாம் ! இவையும் வினைமுற்றுகளே  முன்னிரண்டும் வியங்கோள் வினைமுற்றுகள் பின்னிரண்டும் ஏவல் வினைமுற்றுகள்