இடுகைகள்

தமிழ்ச் சினிமாவும் தமிழக வரலாறும்

படம்
ஒரு கதை ======= மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி என்னும் மகாத்மா காந்தியைப் பாடமாகப் படித்ததற்கு முன்பே எனக்குக் காந்தியாரைத் தெரியும் . இத்தனைக்கும் நான் , இந்திய விடுதலைக்குப் பிறகு பத்தாண்டுகள் கழித்துப் பிறந்தவன் . எனக்குத் தெரிந்த காந்தியார் , தச்சபட்டியென்னும் எனது கிராமத்தோடு ஐந்து கிராமங்களை அடக்கிய பஞ்சாயத்தின் தலைவர் .  அவரது உண்மையான பெயரை , எனது மூத்த அண்ணனின் திருமணப்பத்திரிகையில் பார்த்துத் தெரிந்துகொண்டேன் . அதிலும்கூட காந்தியார் என்ற ‘............’, அவர்களது தலைமையில் என்று அச்சிடப்பட்டிருந்தது . அச்சிடப்பட்ட அந்த உண்மைப்பெயரும்   அன்றோடு மறந்துவிட்டது . அதற்கு முன்பும் பின்பும் எனது நினைவில் இருக்கும் பெயர் காந்தியார் தான் .

புதிய கல்விக்கொள்கை: சில குறிப்புகள்- சில சந்தேகங்கள்- சில எதிர்பார்ப்புகள்

படம்
வாழ்க்கைமுறை என்பது ஒவ்வொரு மனிதரையும் பலரையும் சார்ந்து வாழ வேண்டிய நெருக்கடியைத் தருவதாகவே உள்ளது. சார்ந்து வாழ்தலின் முதல்படி, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவேண்டும். தன்னை வெளிக்காட்ட ஒரு கருவி வேண்டும். அதற்காக மனிதன் கண்டுபிடித்த கருவி தான் மொழி. அந்தக் கருவியின் திறனுக்கேற்ப ஒரு மனிதனின் தொடர்புப்பரப்பு அமையும். மொழியென்னும் கருவியின் மூலம் பேச்சு முறையின் மூலம் தன்னையும், தன் குழுவையும் வெளிப்படுத்திய மனிதன், மேலும் கூடுதலாக வெளிப்படுத்த வேண்டிக் கண்டுபிடித்த கருவியே எழுத்து. தனது கருத்தை நிதானமாகவும் செம்மையாகவும் எடுத்துச் சொல்லப் பேச்சை விடவும் எழுத்து முறை கூடுதலாக உதவும். அனைவருக்கும் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என நினைப்பதில் பின்னணியில் இத்தகைய காரணங்களே இருக்கின்றன. இந்தப் பணியைச் செய்வதற்கான திறனைப் பெறுவதையே நிகழ்காலச் சமூகம் கல்வியறிவு பெறுதல் என வரையறுக்கிறது. எழுத்திலிருந்து வேறுபட்ட திறனுடைய வேகமான இன்னொரு கருவியையும் பண்டைய மனிதனே கண்டுபிடித்தான். அவை தான் எண்கள். இவ்விரண்டையும் பயன்படுத்தும் சாத்தியங்களின் விரிவே கல்வி. எண்களை அதிகமாகக் கையாள்வதோடு எழுத்தை

பண்பாட்டு நிலவியலும் திணைக்கோட்பாடும்

படம்
முன்னுரை: தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் பண்பாட்டு நிலவியல் என்னும் புதுவகைக் கோட்பாட்டோடு தொடர்புபடுத்திப் பேசும் இக்கட்டுரையின் முதல்பகுதி பண்பாட்டு நிலவியல் என்னும் மேற்கத்தியப் புதுவகைக் கோட்பாட்டை விளக்குகிறது. தொடர்ந்து தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் புரிந்துகொள்வதற்குப் பயன்படும் அகப்பொருள், புறப்பொருள் இலக்கணங்களை இணைத்து உருவாக்கும் பாவியல் அல்லது கவிதைக் கோட்பாடு விளக்கப்படுகிறது. அதன் வழியாக தமிழின் கவிதையியல் கோட்பாடான திணைக்கோட்பாடும் பண்பாட்டு நிலவியல் என்னும் சிந்தனைமுறையும் எந்தெந்த விதங்களில் ஒத்துப்போகின்றன என்பதை இணைத்துக்காட்டுகிறது; விலகல்களையும் சுட்டிக்காட்டுகிறது. தொடர்ந்து இக்கோட்பாட்டைப் பயன்படுத்தித் தமிழியல் ஆய்வு எந்தெந்தப் பரப்பிற்குள் நுழையமுடியும் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.

தாய்மையென்னும் புனிதம்

படம்
' ஆர்வமூட்டும் தொடக்கமொன்றைக் கதைகொண்டிருக்க வேண்டும் ' என்ற இலக்கணப்படியான மரபான தொடக்கம்தான். ' கதவு தட்டப்படுவதான உணர்வு. ஆனால் யார் தட்டியது என்று தெரியவில்லை ' என்பதுபோன்ற திகில் தன்மையைக் கொண்ட தொடக்கம். சிக்கலான மனிதர்களை முன்னிறுத்தும் கதை என்பதான குறிப்புகள்கூட இல்லை. காலச்சுவடு 200 ஆம் இதழில் வந்துள்ள  உமா மகேஸ்வரியின் குளவி என்ற தலைப்பிட்ட அந்தக் கதையை வாசிப்பதை நிறுத்திவிடலா ம் என்று தோன்றியது . ஆனால் இடையிடையே ஓவியங்களோடு மூன்று பக்கத்தில் முடியும் கதை தான்  என்ற நிலையில் தொடர்ந்து வாசிக்க லாம் என்று தோன்றியது.  

கதைகளில் அலைந்துகொண்டிருக்கும் ஜி.நாகராஜனின் அந்திமக்காலம்

படம்
கபாடபுரம் இணைய இதழில் சி.மோகன் எழுதிய “ விலகிய கால்கள் ” என்ற கதையைப் படித்ததும் அக்கதையின் மையமாக இருக்கும் ராஜன் , எழுத்தாளர் ஜி.நாகராஜன் என்பது தெரிந்தது. சிறுபத்திரிகை வாசித்து வளர்ந்த பலருக்கும் ஜி.நாகராஜன் பற்றிய செய்திகள் மேகமூட்டம்போலத் தெரிந்த ஒன்றுதான். 50 வயதைத் தாண்டிய 20 வயதிலேயே இலக்கிய வாசிப்பில் ஈடுபாடு காட்டிய மதுரைக்காரர்கள் அவரைச் சந்தித்திருக்கவும் கூடும். நான் அவரோடு நேரடியாகப் பேசியவனில்லை. ஆனால் பார்த்திருக்கிறேன். இந்தக் கதையில் விவரிக்கப்படும் நிலையிலேயே அவரைப் பார்த்திருக்கிறேன். விலகி நின்றிருக்கிறேன்.

இருப்பைக் கலையாக்குதல்: கருணா வின்செண்டின் காமிரா.

படம்
கலைகளைப்பற்றிய பேச்சுகளில் ஓவியத்தையும் சிற்பத்தையும் நுண்கலை என்ற வகைப்பாட்டில் வைத்துப் பேசுவதையே கேட்டிருக்கிறேன். அப்படிப் பேசுபவர்கள் நுண்கலைப்பொருட்களை ஒரு விரிவான தளத்திற்கு அறிமுகப்படுத்தும்போது “காண்பியக்கலை(VISUAL ART)” என்ற விரித்துப் பேசுவதை விரும்புகிறார்கள். ஒரு புகைப்படம் அல்லது நிழல்படம் அதன் தயாரிப்பு சார்ந்து எப்போதும் ஒரு தொழிலாகவே இருக்கிறது; இருந்தது என்பது எனது எண்ணமாக இருந்தது. அந்த எண்ணத்தை எப்போதாவது ஓரிருவர் அசைத்துப் பார்ப்பார்கள். அப்படி அசைத்துப் பார்த்ததின் பின்னணியில் இருந்தது என்ன என்று நினைத்துப்பார்த்தால், அவர்கள் தேடிப் பிடித்துக் காட்டிய பொருளாக அல்லது இயற்கைக்காட்சியாக, அல்லது அலையும் கூந்தலோடு சிரிப்பை மறைக்க முயலும் ஒரு பெண்ணாக இருக்கும்.

வெடிக்கும் துப்பாக்கிகளிலிருந்து கிளம்பும் இனவாதம்

படம்
எனது அமெரிக்கப் பயணம் ஜூலை 21 இல் நிறைவடைந்தது. ஒருவாரத்திற்கு முன் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. பாஸ்டனில் பார்க்க வேண்டிய இடங்கள் எனக் குறித்து வைத்திருந்த பட்டியலில் எம்.ஐ.டி(MIT) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற மாசுசெசட்ஸ் தொழில்நுட்பக் கல்விநிறுவனம் விடுபட்டுப் போயிருந்தது. ஜூலை,19 இல் அதன் வளாகத்தில் இறங்கிய போது தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறந்தது. அங்குமட்டுமல்ல, கடைசிச் சுற்றாகப் பாஸ்டன் நகரை ஒருமுறை வலம் வரலாம் என்று சுற்றிவந்தபோது, எல்லா இடங்களிலும் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்தன. காரணம் அந்தப் படுகொலை நிகழ்வு.