இடுகைகள்

சூழலில் அர்த்தமாகும் கவிதை:

படம்
இது கவி சமயவேலின் அடையாளம் அல்ல. அவருடைய பெரும்பாலான கவிதைகள் வெளிப்படையான அரசியல் கவிதைகள் அல்ல. சமூகப் போக்கைச் சந்திக்கும் கணத்தில் அதை விளங்கிக் கொள்ள முடியாமலும், விளங்கிக்கொள்ள முடிந்தாலும் அதைச் சந்திப்பது எப்படியெனப் புரியாமலும், கடந்து செல்லும் வழியறியாமலும் தவிக்கும் தனிமனிதர்களின் தன்னிலைகளை அவரது பலகவிதைகளில் வாசிக்க முடியும். அந்தத் தன்னிலைகளை முழுமையாகக் கவி சமயவேலின் தன்னிலை என்றும் புரிந்துகொள்ளலாம். அல்லது அவர் முன்வைக்கும் மனிதர்களின் தன்னிலையாகவும் விளங்கிக் கொள்ளலாம்.

இரண்டு புத்தகங்கள்

படம்

கனவுகள் ; காட்சிகள்

                                                            இந்திய நாட்டின் ஜனநாயக அரசைத் தேர்ந்தெடுப்பதில் மற்றவர்களின் பங்கு எத்தகையதாக இருந்ததோ தெரியாது. ஆனால் என்னுடைய பங்கு எப்பொழுதும் குறிப்பிடத் தகுந்தது என்று சொல்லிக்கொள்ள முடியாது. இதுவரை வாக்களித்தவிதம் பற்றிய உண்மையைப் பேசவேண்டும் என்றால் கூடக்   கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. முந்தைய தேர்தல்களில் நான் பங்கேற்றவிதம் சட்டப்படியான தவறுகளைக் கொண்டதாகவும் இருந்துள்ளன. முதல்தடவை நான் ஓட்டுப்போட்ட போது எனக்கு வயது 18 கூட ஆகியிருக்கவில்லை. அப்பொழுதெல்லாம் ஓட்டுப் போடும் வயது 21. வாக்காளர் பட்டியலில் எனது பெயர் அ. ராமசாமி என்பதற்குப் பதிலாக தீர்க்கவாசகன் என்று எழுதப் பட்டிருந்தது. அப்படியொரு பெயர் எனக்கு எங்கள் ஊரில் உண்டு. என்றாலும் தீர்க்கவாசகனுக்கும்   இருபத்தியோரு வயது ஆகியிருக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ளாமலேயே பதிவு செய்திருந்தார்கள்.

தெறித்து விழும் அடையாளக்குச்சிகள்

படம்
சொல்லப்படுவது அதிகப்பரவல். ஆனால் நடைபெறுவது   அதிகார உருவாக்கம்.   உலகம் முழுவதும் தேர்தல்கள் அதிகார உருவாக்கமுறைகளாகவே இருக்கின்றன. மனிதர்கள் இதுவரை கண்டறிந்ததில் மிகக்குறைவான கெடுதல் கொண்டது என்ற நம்பிக்கை இருப்பதால், தேர்தல் அரசியல் செல்வாக்கோடு இருக்கிறது.   இந்தியத் தேர்தல்கள் இருவழி வழி நடப்புகள். ஒரு வழி கட்சி மற்றும் சின்னம். இன்னொன்று வேட்பாளர்கள். சின்னங்கள் வழிப்பயணம் மையப் படுத்தப்பட்டது. வேட்பாளர்வழிப் பாதை மையமழிப்பது. ஒவ்வொரு தொகுதியிலும் அதிகப்படியாகக் குத்துவாங்கும் சின்னம் வெற்றிச் சின்னம். அதிகமான நபர்களைக் கண்டுபேசி நம்பிக்கைக்குரியவராகும் வேட்பாளர் வெற்றியாளர். தேர்தல்வழி அதிகாரத்தில் இந்த இருவழிகளிலும் ஒருவர் பயணம் செய்தாகவேண்டும்.

கதவு திறக்கட்டும்

” உறவுப்பாலம் -இலங்கைச் சிறுகதைகள்”” இப்படியொரு தொகுப்பைப் படித்துக் கொண்டிருக்கிறேன் மொத்தம் 25 சிறுகதைகள் (சிங்களமொழியிலிருந்து 8; தமிழிலிருந்து 7; ஆங்கிலத்திலிருந்து 10) தொகுக்கப்பட்டிருக்கின்றன. தொகுத்தவர் ராஜீவ் விஜேசின்ஹ. இவருக்கு இத்தொகுப்பை உருவாக்குவதற்குச் சிங்கள மொழிக் கதைகளுக்காக விஜிதா பெர்னாண்டோவும் தமிழ்க் கதைகளுக்காக விமரிசகர் கே.எஸ்.சிவக்குமரனும் உதவியிருக்கிறார்கள்.தமிழின் பிரதிநிதிகளாக டி.எஸ்.வரதராஜன், கே.சட்டநாதன், என். எஸ், எம்.ராமையா, செ.யோகநாதன், தாமரைச்செல்வி, ஐயாதுரை சாந்தன், ரஞ்சகுமார் ஆகியோரின் கதைகள் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் என்னும் திருவிழா

2016 சட்டமன்றத் தேர்தல் இதுவரை இல்லாத விசித்திரமாக மாற்றப்பட்டு விட்டது. முறைப்படி தேர்தலை அறிவிக்கும் தேர்தல் ஆணையமே 90 நாட்களுக்கு முன்பே அறிவித்துவிட்டது. அப்போது முதல் பணப் பரிவர்த்தனையையும் விளம்பர முன்னிறுத்தலையும் கட்டுப்படுத்த காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் களத்தில் இறங்கிவிட்டன.படம்பிடிக்கும் காமிராக்களோடு ஆங்காங்கே நிற்கும் காவல் துறை வாகனங்கள், தேர்தல் வந்து விட்டது என்பதைக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.