இடுகைகள்

விவேக்: ஓசைகளின் நேசன்

படம்
வாசி எத்தஸ்து கர்தவ்யஹ் , நாட்ய ஸ்யஸ்யா தனஸ்மிருதா அங்கனே பத்தியஸ்துவானி , வாக்யாரத்னம் ஜயைந்தி ஹீ - பரதரின் நாட்ய சாஸ்திரம்; இதன் பொருளாவது யாதெனில், எண்ணிய கருத்தை எடுத்துரைப்பது மொழி. அடிமனத்தில் உள்ள கருத்தை அவனுடைய பேச்சு வெளிப்படுத்துகிறது. மொழிக்கே அந்த ஆற்றல் இயல்பாக அமைந்திருப்பதால் அந்த நுட்பத்தை குறிப்பால் பொருள் உணர்த்தும் தொனி என்கிறார்கள்

விளையாட்டு - வேட்டை - வியாபாரம்

படம்
புனைகதையின் இருவேறு வடிவங்களையும்-சிறுகதை, நாவல் -வேறுபடுத்தும் அடிப்படைகளில் 'அளவு'க்கு முக்கியமான இடமுண்டு. அளவு என்பது எழுதப்படும் பக்க அளவல்ல. புனைகதை இலக்கியத்தில் விரியும் காலம் மற்றும் வெளியின் விரிவுகளே சிறுகதையிலிருந்து நாவல் இலக்கியத்தை விரிவாக்கிக் காட்டுகின்றன. இவ்விரண்டும் விரியும் நிலையில் அதில் இடம்பெறக்கூடிய பாத்திரங்களின் எண்ணிக்கையும் அதிகமாகிட வாய்ப்புண்டு. 

வெ.சாமிநாதன் : நெருங்கி விலகிய ஆளுமை

படம்
புகுமுக வகுப்பு வரை கணித மாணவனாக நினைத்துக் கொண்டிருந்த என்னை இலக்கியம் பக்கம் திருப்பியது மதுரை அமெரிக்கன் கல்லூரி நூலகம்தான். டேனியல்போர் என்னும் ஆங்கிலேயரின் பெயரில் அமைந்த நூலகத்தின் மாடிப்பகுதியில் தான் செய்தித் தாள்களும் இதழ்களும் அடுக்கப்பட்டிருக்கும். நாள் தவறாமல் தினசரிகளை படிக்கும் அரசியல் உயிரியாக இருந்த என்னைக் கதைகள் படிக்கும் மாணவனாக மாற்றியது   அவற்றின் அருகில் அடுக்கப்பட்டிருக்கும் வாராந்திரிகளும் மாதாந்திரிகளும்.

வரலாற்றைக் கவிதையாக்கி வாசித்தல்

பசித்த பூனைகளின் மென்மையையும், வன்மத்தின் பசித்த ஓநாய்களையும் பற்றிப் பேச நினைத்த அந்தக் கவிதை ஓரிடத்தில், வரலாறு எப்போதும் மாமிசங்களால் மட்டுமே எழுதப்படுகிறது என்ற வரிகளை எழுதிவைத்திருக்கிறது.

தமிழினி: போராட்டக்களத்திலிருந்து எழுத்துக்களத்திற்கு நகர்ந்த பயணம்.

படம்
ஒன்றிரண்டு தடவையே அவர் குரலைக் கேட்டதுண்டு. அவரது முகம் நிழற் படங்களாகப் பார்க்கக் கிடைத்தது இந்த ஜனவரி முதல் தான். முகத்தைக் காட்டியபோதுதான் தனது பெயர் தமிழினி ஜெயக்குமரன் என்றும் தானொரு ஈழப் போராளி என்றும் சொன்னார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் முகநூல்-வழியாகப் பல தடவை உரையாடியிருக்கிறோம். உரையாடல் ஆரம்பித்தால் ஒருமணிநேரத்துக்குமேல் போகாது.  

சுட்டுச்சொற்களின் திசைவழிப்பாதை.

வாசிப்புக்கான பாதையைக் காட்டும் எழுத்தே கவனிக்கப் படுகிறது. கிராமங்களில் அந்த விளையாட்டை இப்போதும் விளையாடுகிறார்கள். நெட்டுவாக்கில் குவிக்கப்பட்ட மணலுக்குள் மறைத்து வைக்கப்படும் திரியைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு. ஒருவர் மறைத்துவைத்து விட்டுக் கையால் மூடிக் கொள்வார். இன்னொருவர் அந்தத் திரியைக் கண்டுபிடிக்கவேண்டும். மறைத்துவைப்பவர் தனது கைக்குள்தான் வைக்கவேண்டும் என்பதில்லை. மணல் கவிப்பில் கூட எங்காவது வைக்கலாம். அதைச் சரியாக யூகித்து எடுத்துவிட்டால் வெற்றிதான். கைக்குள் இருப்பதாக நினைத்தால் மூன்று தடவை ஆள்காட்டிவிரலால் மணலைக்கோரி எடுக்கும்போது திரி வெளியே வந்துவிட்டாலும் வெற்றிதான். அப்படி வராவிட்டால் தேடியவருக்குத் தோல்வி. வைத்தவருக்கு வெற்றி. அப்படி விளையாடும்போது எங்கள் ஊரில் “தில்லி தில்லி பொம்மக்கா” சொல்லிக்கொண்டே வைப்பார்கள்; எடுப்பார்கள். பெண்கள் இருவர் விளையாடும் இந்த விளையாட்டைச் சில நேரங்களில் பெண்களும் ஆண்களும் சேர்ந்தே விளையாடுவார்கள். மூடியிருக்கும் எதிர்பாலினரின் கையை நோண்டிவதற்கான வாய்ப்பாகப் பயன்படும் விளையாட்டு அது. திரியைக் கண்டுபிடிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியோடு