இடுகைகள்

வடிவமைத்துக் கொண்ட வடிவேலு

படம்
நகையென்பது சிரிப்பு   அது முறுவலித்து நகுதலும் , அளவே சிரித்தலும் , பெருகச் சிரித்தலுமென மூன்றென்ப.     -  தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியல் சூத்திரத்திற்கு ( 3)  பேராசிரியர்  உரை ===========================   

துணைவேந்தர்கள் என்னும் தோட்டத்து மேஸ்திரிகள்

நமது நாட்டின் உயர்கல்விக்குப் பொறுப்பு வகிப்பன பல்கலைக்கழகங்கள். ஒரு பாடத்தில் பட்டம்பெறவேண்டும் எனக் கல்லூரியில் நுழையும் மாணாக்கர்களுக்குக் கற்பிக்க வேண்டிய பாடத்திட்டங்களை உருவாக்குவது, கற்பிக்கின்ற முறைகளை வகுப்பது, பாடங்களை முறையாகக் கற்றுள்ளனரா? என அறியத் தேர்வுகள் நடத்துவது என மூன்று முக்கியமான பணிகளைச் செய்கின்றன. அத்துடன் பட்டமேல் படிப்பு படிக்க விரும்பும் மாணாக்கர்களுக்குத் தனது வளாகத்திலுள்ள சிறப்புத் துறைகளின் வழியே முதுநிலைப் படிப்புகளையும், அவற்றின் தொடர்ச்சியாக ஆய்வுப்படிப்பு களையும் தருகின்றன. 

வில்பூட்டுச் சிறுகதை

“நவீனச் சிறுகதைகளில் வடிவ ஒழுங்கைத் தேட வேண்டியதில்லை” என்பதை மனம் ஏற்றுக் கொண்டுவிட்டது என்றாலும், வடிவ ஒழுங்கில் இருக்கும் கதைகளை வாசிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியையும் மறுப்பதற்கில்லை. தான் எழுதும் சிறுகதையை வடிவ ஒழுங்குடன் எழுதவேண்டுமென நினைக்கும் கதாசிரியர், வடிவ ஒழுங்கிற்காக மட்டும் மெனக்கெடுகிறார் என்பதில்லை.

வாழ்தலின் ரகசியத்தைத் தேடுவது?

நகுலன் பற்றியும் நகுலன் கவிதைகள் பற்றியும் நடக்கும் பல விவாதங்களைப் பலநேரங்கள் வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு வாசிப்பின்போதும் அவை ‘நான்’ அல்லது ‘தன்’ னின் இருப்பு பற்றிய கேள்வியாகவும், விடை தெரியாத நிலையில் ஏற்படும் குழப்பமாகவும் புரியும். அப்புரிதல் பெரும்பாலும் பிழையானதல்ல என்ற நம்பிக்கையும் எனக்குண்டு.

ஆலயமு மண்டபமு மன்னசத்ர சாலையும்

[முன்குறிப்பு: முனைவர் பட்டத்திற்குச் சேர்ந்தபின் எழுதிய முதல் கட்டுரை. அப்போதுதான் சத்துணவுத் திட்டம் அறிமுகமான நேரம். விலையில்லா..., குறைந்த விலைத் திட்டங்களின் காலத்திலும் கொஞ்சம் பொருத்தம் உண்டுதான்] நாட்டில் வறட்சி ஏற்படுகின்றபொழுது கஞ்சித்தொட்டி வைத்தல், அன்னதான மண்டபம் அமைத்தல் போன்ற நிகழ்வுகள் ஏற்படுவது அண்மைக்காலங்களில் கண்கூடு. இதே தன்மையொத்த ‘ சத்திரம்- அதன் மூலம் உணவு வழங்கல்’ என்றொரு நிலையைக் கி.பி. 15 ஆம் நூற்றாண்டிற்குப் பிந்திய தமிழ் இலக்கியங்களில் காண முடிகிறது. கி.பி. 15 தொடங்கி 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தமிழகத்தில் ஆட்சிபுரிந்த விசயநகர, நாயக்க அரசர்களின் சமூகநலத்திட்டங்களில் ஒன்றாகவே இவை கூறப்படுகின்றன. (அ.கி. பரந்தாமனார், மதுரை நாயக்கர் வரலாறு, ப.266) இக்கட்டுரை அத்தகைய சத்திரங்களின் நிறுவன வடிவையும், சமூகத்தேவையையும், மக்கள் எதிர்கொண்ட நிலைகளையும் காண முயல்கிறது. சத்திரத்தின் நிறுவன வடிவம். சத்திரம் என்ற அமைப்பு விசயநகர, நாயக்க அரசர்கள் காலத்தில் காணப்பட்டாலும், அது வேறொரு வடிவில் பிற்காலச் சோழர்கள் காலத்திலேயே இருந்துள்ளது. தர்மகாரியமாக அன்னதான ம

அடிப்படைவாதத்திற்கெதிரான அரசியல்

படம்
அந்த நிறுவனங்களெல்லாம் பெருங்கனவொன்றின் தொகுதிகள். பிரிட்டானியர்களிடமிருந்து விடுதலைபெற்ற இந்தியாவின் எதிர்காலம் எவ்வாறு அமையவேண்டும்; எதிர்கால இந்தியர்கள் இவ்வுலகத்தோடு எவ்வாறெல்லாம் உறவு கொள்ளவேண்டும் என்பதற்கான வரையறைகளை உருவாக்கித் தந்த திட்டக்குழுவின் பரிந்துரைகளின்பேரில் முதல் ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் புள்ளியிடப்பட்டு ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டகாலத்திலும் பெருங்கோலங்களாக - வண்ணவண்ணக் கோலங்களாக ஆன நிறுவனங்கள் அவை.