இடுகைகள்

பிரசந்ந விதனகேயின் இரண்டு சினிமாக்கள் : வித் யூ வித் அவுட் யூ, பூர்ணமை நாளில் ஒரு மரணம்

படம்
மன்னிப்பதிலிருந்து அல்ல; மன்னிப்புக் கேட்பதிலிருந்து தொடங்கலாம். பேரினவாதக் கருத்தியலும் மேட்டிமைவாத- உயர்சாதிக் குறுங்குழுவாதமும்- மோதிக் கொண்ட ஒரு பூமியாக இலங்கையை விரித்துக் காட்டிப் பேசத்தொடங்கும் பிரசன்ன விதனகேயின் சினிமா ஒன்றைப் பார்க்கும் வாய்ப்பு இந்தமுறை சென்னை சென்ற போது கிடைத்தது. படத்தின் ஆங்கிலத் தலைப்பு With You Without You. ஆங்கிலத் தலைப்பை அப்படியே நின்னோடா? நீயின்றியா? என மொழி பெயர்க்காமல் பிறகு எனத் தலைப்பிட்டு இருந்தார் அதன் இயக்குநர். அவரது தாய்மொழியான சிங்களத்தில் வைத்துள்ள தலைப்புக்கு என்ன பொருள் எனத் தெரியவில்லை.

திருமணம் என்னும் நிக்காஹ்: தமிழ்ச் சினிமாவின் பொதுப் போக்கிலிருந்து ஒரு விலகல்

படம்
காதல் பற்றிப் பேசாத ஒரு தமிழ்ச்சினிமா ஆண்டில் ஒன்றிரண்டு கூட வருவதில்லை.  ‘இவர்களின் காதல் எப்படிப்பட்டது தெரியுமா?’ என்றொரு கேள்வியைக் கேட்டுக் கொண்டு கதையை விரிக்கிறார்கள் நமது தமிழ்ப்பட இயக்குநர்கள். அப்படி விரிக்கும் தொண்ணூறு சதவீதக் கதைகள் நமது சங்கக் கவிதைகளின் விரித்தி உரைகள் தான்.

பத்துக்கதைகள்- புனைவின் பத்து முகங்கள்

படம்
கல்லூரிக் காலத்தில் மாதம் தவறாமல் வாசித்துக் கொண்டிருந்த இலக்கியப் பத்திரிகை கணையாழி. “இலக்கியச் சிந்தனையின் மாதச் சிறுகதையாக கணையாழியில் வந்த கதை தேர்வு பெற்றுள்ளது”என்ற குறிப்பை அதில் அடிக்கடி பார்ப்பேன். எனக்குள் பலவிதமான தூண்டுதல்களைச் செய்த குறிப்பு அது என்பதை எப்போதும் மறப்பதில்லை. இந்தக் கட்டுரைக்கும்கூட அந்தக் குறிப்புதான் தூண்டுதல் என்பதைச் சொல்லியே ஆகவேண்டும்.

கற்றது தமிழ் : ஒரு விவாதம்

படம்
அபிலாஷ்: ========= அ.ராமசாமி “கற்றது தமிழ்” பற்றி ஒரு மீள்பதிவு போட்டிருக்கிறார். அதில் தமிழ் படித்ததினால் ஒருவன் கொலைகாரனாய் மாறுவதாய் வருவதாய் கூறி குழப்புகிறார். உதாரணமாய் //அப்படிச் சொல்வதன் மூலம் அவன் செய்த தான்தோன்றித் தனமான வாழ்க்கைப் பயணங்களுக்கும் பொறுப்புணர்வற்ற முடிவுகளுக்கும் தமிழ்க் கல்வி தான் காரணமோ என நினைக்கும்படி படத்தின் கதை அமைப்பும் கட்டமைப்பும் உருவாக்கப் பட்டுள்ளது. // ஆனால் இது தவறான புரிதல். நகரமும் அந்நியமாதலும் தான் அவனை கொலைகாரனாக்குகிறது. இதை அவர் கவனிக்கவில்லை. காம்யுவின் தாக்கம் இப்படத்தில் உண்டு. படத்தை இன்னும் சரியாக கவனித்து - குறிப்பாய் ஐரோப்பிய தத்துவ பின்னணியில் - அவர் எழுத வேண்டும். இது தமிழ் கற்பது பற்றின சினிமா அல்ல. அது படத்தின் புரொமோஷனுக்கான ஒரு தந்திரம். படத்தில் தமிழ் தேசியவாதமும் ஆழமாய் இல்லை. இது அந்நியமாதலுக்கும் நகர்மய வன்மத்துக்கான உறவை பேசுகிற படம்.

மூன்று அசல் கதைகளும் ஆறு மொழி பெயர்ப்புக் கதைகளும்

அளவில் பெரியதாக மாறி வரத் தொடங்கிய தலித் இதழின் அடுத்தடுத்த இதழில் இமையத்தின் இரண்டு கதைகள் வந்துள்ளன. பசிக்குப்பின்.. மாடுகள்.. இரண்டு கதைகளும் வெவ்வேறு வெளிகளில், வெவ்வேறு வயது மனிதர்களை உலவ விட்டுள்ள கதைகள். பசிக்குப்பின் கதையின் உலகம் ஒரு சிறுவனின் ஒரு நேரத்து உணவு சார்ந்த உலகம்.. தானியத்தைக் குத்தி அதிலிருந்து கிடைக்கும் தவிட்டைத் தின்பதற்குத் தயாராக இருக்கும் ஒரு சிறுவனின் மனசைத் திசை திருப்பி விடும் ‘ஐஸ் வண்டி’ ஏற்படுத்தும் சலனத்தை விரிவாகப் பதிவு செய்கிறார். ஒரு சிறுகதைக்கு அதுவே கூடப் போதுமானதுதான்.

தொலைந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிய கதைகள்

படம்
            சுஜாதாவை நினைவுகூரும் விதமாக உயிர்மை பதிப்பகம் சுஜாதா அறக்கட்டளையுடன் இணைந்து ஒவ்வொரு வருடமும் நவீன இலக்கியப் போக்குகளை அடையாளப்படுத்தும் படைப்பாளிகளுக்கு விருதுகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. 2014 இல் அதன் ஆறாவது ஆண்டு நிகழ்வில் சிறுகதைக்கான விருதைப் பெற்றுள்ளது என் ஸ்ரீராமின் மீதமிருக்கும் வாழ்வு என்ற சிறுகதைத் தொகுப்பு. கதைகள் எழுதப் பெற்ற முறையிலும் சரி, அளவிலும் சரி ஒரு சிறுகதைத் தொகுப்பின் வரையறைகளைத் தவிர்த்துள்ள தொகுப்பு இது.

திரள் மக்கள் பண்பாடு: வெகுமக்கள் சினிமா

படம்
திரைப்படங்களைத் திறனாய்வு செய்தலின் பிரச்சினைகள் தமிழக அரசுக்கு அதிகமாக வரி கட்டுகிற துறை திரைப்படத் துறையே.எனவே , அரசு அதற்கான சலுகைகளை வழங்கிட வேண்டும் என ப் பெருங்குரலில் கோருகின்றனர். திரைப்படத் தயாரிப்புக்கு ஆகும் செலவைக் கட்டுப்படுத்தாவிட்டால் அந்தக் கலையை யாராலும் காப்பாற்றமுடியாது. இது இன்னொரு கூட்டத்தின் குரல். திருட்டு விசிடி-க்களின் அச்சுறுத்தல்களினால் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது திரைப்பட உலகம். இது மற்றொரு கூட்டத்தின் குரல் இந்தக் குரல்களோடு சேர்ந்து சினிமாவைப்பார்க்கலாமா ? ரசிக்கலாமா.. ?