மொழி இலக்கியப் பாடத் திட்டங்கள் உருவாக்கலுக்கான பயிலரங்கு
எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி இலக்கியக் கல்விக்கான பாடத்திட்ட உருவாக்கம் என்னும் பொருளில் இருநாள் பயிலரங்கு ஒன்றை நடத்திடத் திட்டமிட்டுள்ளோம். பாடத்திட்டக் குழுக்கள் சார்ந்த பங்கேற்பாளர்கள், மாணவப் பிரதிநிதிகள், மதிப்பீட்டாளர்கள், வல்லுநர்கள், கருத்துரையாளர்கள் என ஐவகைப் பிரிவினர் இடம் பெறுவிதமாகத் திட்டமிடப்பட உள்ளது