இடுகைகள்

சரஸ்வதி சம்மான் விருது பெற்ற பேரா.அ.அ. மணவாளன் அவர்களை முன் வைத்து சில கேள்விகள்

படம்
விமரிசனமும் விருதும் கவனிக்கப்படுதலின் அடையாளங்கள். கவனிக்கப்படுதலை எதிர்பார்த்து உயிரினங்கள் ஏங்கி நிற்கின்றன. முள் கொடுக்கு களில் உரசி விலகிச் சென்ற வண்டுகளுக்காகவே பூக்கின்றன ரோஜாச்செடிகள் என்பது ஒரு கவிதை வரி.பச்சை இலைகளோடு இருக்கும் தாவரங்கள் பூப்பதன் மூலம் கவனம் பெறுகின்றன. காய்ப்பதும் பழுப்பதும் தன்னைப் பிறவற்றிற்குத் தருதலின் வெளிப்பாடுகள். இயற்கையின் எல்லா இருப்புகளும் இச்சுழற்சியிலிருந்து விலகி விடுவதில்லை. மனித உயிரிகள் உள்பட . 

தமிழச்சியின் கவி உலகம்

படம்
அவரவர்க்கான மழைத்துளிகளும்  அவரவர்க்கான கவிதைகளும் .                                                                                                               முன்னுரை கல்லூரி ஒன்றில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியராகவும் , அரங்கவியல் செயல் பாட்டாளருமாக அறியப் பட்டிருந்த கவி தமிழச்சியின் முதல் தொகுதியான    எஞ்சோட்டுப் பெண் பெறாத கவனத்தை அவரது இரண்டாவது தொகுதியான வனப்பேச்சி பெற்றுள்ளது. மித்ர ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸின்   தயாரிப்பான எஞ்சோட்டுப் பெண் மிகுந்த கவனத்துடன் அதிகப் பணச் செலவிலும் தயாரித்து வெளியிடப் பட்ட  கவிதைத் தொகுப்புகளுள் ஒன்று. நூலாக்கத்தில் முதல் தொகுப்பிற்குச் செலுத்திய கவனத்தில் பாதி தான் வனப்பேச்சிக்கு இருந்திருக்கும். என்றாலும் முதல் தொகுதியை விடவும் இரண்டாவது தொகுதி கூடுதலான விமரிசன மேடைகளையும் வாசகக் கவனத்தையும் மதிப்புரைகளையும் பெற்றது.

ஜெயமோகனின் கொற்றவை திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து

படம்
ஜெயமோகன் தனது 25 ஆவது   வயதில் முகிழ்த்த கருவை 43 ஆவது வயதில் எழுதி முடித்த பிரதி கொற்றவை. 600 பக்கங்களில் டெம்மி அளவில் , அச்சுத் தொழிலின் நுட்பங்கள் கைவரப் பெற்ற தொழிலாளர்கள்-பதிப்பாசிரியரின் கூட்டுத் தயாரிப்பில் அச்சிடப் பட்டு 2005 இன் வெளியீடாக வந்தது.கொற்றவைக்கு முன்பு ஜெயமோகனின் எழுத்துகள் பல வடிவங்களில்,சில வகைப்பாடுகளுடன் அடையாளப்படுத்தத் தக்கனவாய் அச்சிடப்பட்டிருந்தாலும், அவர் அதிகம் அறியப்பட்டது புனைகதை ஆசிரியராகத் தான். சிறுகதை ஆசிரியராக முதலில் வெளிப்பட்ட போதிலும் விரிவான காலம் மற்றும் வெளி சார்ந்த எல்லைகளுக்குள் கதாபாத்திரங்களை அலையவிடும் நாவல் வடிவமே அவருக்கு லாவகமான வடிவமாக இருக்கிறது.

தினமணியில் நேர்காணல்

படம்
போலந்தின் தலைநகர் வார்சாவிற்கு வந்து ஆறுமாதங்கள் முடிந்து விட்டன இந்த மாத அனுபவங்களுடன் வழங்கிய நேர்காணல் இது. இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இங்கு இருக்கப்போகிறேன். முடியும்போது கூடுதல் அனுபவங்களுக்கு வாய்ப்பிருக்கிறது

ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே : எழுத்ததிகாரம் தொலைக்கும் எழுத்து

படம்
எல்லாச் சிக்கல்களுக்கும் காரணமாக இருப்பது அதிகாரத்தின் மீதான பற்றும், அதை அடைவதற்கான முயற்சிகளும்   என்பது அரசியல் சொல்லாடல் என்பதாகக் குறுக்கப்பட்டிருக்கிறது. அதிகாரம் செலுத்துதல் என்பது மற்றவர்களைத் தன்பால் ஈர்த்தலில் தொடங்குகிறது. அடுத்தகட்டம் அவர்களின் நிலையைக் குலைத்துத் தன் நிலையை நிறுவி அதன்படி செயல் படத் தூண்டுதலில் முடிகிறது.

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்: பண்டங்களாக்கப்படும் பண்டிகைகள்

படம்
 வெற்றி பெற்ற திரைப்படத்தின் நாயகி ஆங்கிலத்தில் சொல்லும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை பன்னாட்டு கைபேசி வியாபார நிறுவனமோ, சொகுசுக்கார் தயாரிப்பு நிறுவனமோ சொல்ல வைக்கின்றன. அதனைக் கேட்பதற்காகக் காலை எட்டு மணி முதல்  மொத்தக் குடும்பமும் தயாராகத் தொலைக்காட்சி முன்னால் அமைதியாக இருக்கிறது.  ஏழு மணிக்கு வழங்கிய சமயச் சான்றோரின் உரையை வழங்கியவர்கள் தங்க ஆபரணங்களை மீன்கடை வியாபாரம் போல் பரப்பி விற்கும் நிறுவனமாக இருக்கிறது.

வசந்தபாலனின் அரவான்: படைப்பாளுமை அற்ற வெளிப்பாடு

படம்
திரைப்பிம்பங்கள் பேசும்மொழி, அம்பிங்கள் உலவும் வெளி, பிம்பங்களின் தன்னிலையையும் பிறநிலையையும் கட்டமைக்கும் வாழ்நிலை ஆகிய மூன்றுமே ஒரு திரைப்படத்திற்கான அடையாளத்தை உருவாக்கக் கூடியன. இம்மூன்றும் ஓர்மை கெடாமல் அமையும் சினிமாவே தனித்த அடையாளமுள்ள சினிமாவாக வகைப்படுத்தத்தக்கது. நமது சினிமாக்காரர்கள், அவர்கள் உருவாக்கும் திரைப்படங்களைப் பார்வையாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க நினைத்து அதன் விளம்பரங்களில் ‘தமிழ், தமிழர்கள்’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் போதெல்லாம்   ”தமிழ்ச் சினிமா”   என்பதின் அடையாளத்தை எதனைக் கொண்டு இயக்குநர் உருவாக்கியிருப்பார் என்ற கேள்வியோடு தான் படம் பார்க்கச் செல்வேன்; கவனமாகச் சினிமாவைப் பார்த்துப் பேசும் ஒவ்வொருவரும் அப்படித்தான் செல்ல வேண்டும்.