இடுகைகள்

பாதல் சர்க்கார் : மாற்று அரங்கின் இந்திய அடையாளம்

படம்
2011, மே 13 தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த போது இந்தியாவின் பெருநகரங்களில் வீசிக் கொண்டிருந்த அனல் காற்று திசைமாறிக் கொண்டிருப்பதாக வானிலை அறிக்கை சொல்லவில்லை. ஆனால் தொலைக் காட்சி ஊடகங்கள் அரசியல் சூறாவளிகளைக் கொண்டு வந்த இரண்டு பெண்களைப் பற்றி சூடாகப் பேசிக் கொண்டிருந்தன. தமிழ்நாட்டில் வீசிய ஜெ.ஜெயலலிதா என்னும் அசுரக் காற்று ஐந்தாண்டுக்கொரு முறை வந்து போகும் பெருங்காற்று என்பதைத் தமிழ் ஊடகங்கள் அறிந்திருந்ததால் பெரிய ஆரவாரம் எதையும் செய்து விடவில்லை. ஆனால் தேசிய அலைவரிசைத் தொலைக்காட்சிகள் மேற்கு வங்கத்தில் வீசிய மம்தா பானர்ஜி என்னும் புதிய சூறாவளியின் வேக ம் பற்றியும் ஜெ . ஜெயலலிதா என்னும் பெண் சக்தி பற்றியும் பேசிய பேச்சுகள் ஊடகங்க ள் பெருமறதிக்குள் சட்டெனக் குதித்து விடுவதை உணர்த்தின .

அரசியல் குடும்பங்களின் இருண்ட காலம்

படம்
சுதந்திர இந்தியாவில் ஐந்தாண்டுக்கொரு முறை தேர்தல் என்பது நடைமுறைக்கு வந்தது தொடங்கித் தமிழ் நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் 1967 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியிடம் தோல்வியைச் சந்தித்தது. கூட்டணி வெற்றி பெற்றது என்றாலும் திராவிட முன்னேற்றக் கழகம் தனியாகவே ஆட்சியை அமைத்தது என்பது வரலாறு. அந்த வரலாறு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அழகர்சாமியின் குதிரை:வட்டார சினிமாவிலிருந்து இந்திய சினிமாவை நோக்கி:

படம்
புதுவகை சினிமாக்களைத் தமிழ்ப் பார்வையாளர்களுக்குத் தரும் முயற்சியில் திரைப்படப் படைப்பாளிகள் ஆர்வமோடு இருக்கிறார்கள் என்பதற்கு இன்னுமொரு அடையாளம் அழகர்சாமியின்  குதிரை என்று சொல்லி இந்தக்  கட்டுரையை ஆரம்பிக்க விரும்புகிறேன். தமிழின் பெருவாரியான சினிமா , திரும்பத் திரும்பச் சுற்றிச் சுழலும் ஒரு வகைச் சூத்திரக் கட்டமைப்பு சினிமா என்பதைத் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை... எல்லாக் காலங்களிலும் காதல் தான் தமிழ்ச் சினிமாவின் கச்சாப்பொருள். அதிலிருந்து யாராவது ஓரிருவர் எப்போதாவது அத்திபூத்தாற்போல

கி.ரா.வின் கோபல்ல கிராமம்: நான் அறிந்த மனிதர்களும் எனக்குத் தெரிந்த கதைகளும்

படம்
நான் அறிந்த மனிதர்களும்  எனக்குத் தெரிந்த கதைகளும் நீங்கள் வாசித்த நாவல்களில் உங்களுக்குப் பிடித்த நாவல் எது ? என்ற கேள்விக்கு எந்தவிதத் தயக்கமும்  இல்லாமல் ” கி.ராஜநாராயணனின்  கோபல்ல கிராமம் ”  என நான் சொன்ன போது எனக்கு வயது 21. நிகழ்கால அரசியல் , பொருளாதாரச் சமூகச் சிக்கல்களைப் பேசும் விதமாகப் பாத்திரங்களை உருவாக்கி , அவற்றின் உளவியல் ஆழங்களுக்குள் செல்வதன் மூலம் வாசகர்களையும் உடன் அழைத்துச் செல்லும் தன்மையிலான எழுத்தே சிறந்த எழுத்து எனவும் , நாவல் என்னும் விரிந்த பரப்பில் தான் அதற்கான சாத்தியங்கள் அதிகம் எனவும் எனக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்களும் , நான் படித்திருந்த இலக்கியத் திறனாய்வு நூல்களும் சொல்லியிருந்தன.

தொலைநெறிக் கல்வி என்னும் மாய யதார்த்தம்

இந்தப் பயணம் 2010 டிசம்பரிலேயே போய் வந்திருக்க வேண்டிய பயணம். நிர்வாகக் காரணங்களாலும் சொந்தக் காரணங்களாலும் ஆறு மாதத்திற்குப் பின் இப்போதுதான் வாய்த்தது. மே 7 இல் விமானம் ஏறி, மே 11 இல் திரும்பி வந்து விட்டேன். அங்கே இருந்த நாட்கள் சரியாக நான்கு நாட்கள் தான். நான்கு நாட்களும் பணி சார்ந்த பயணம் தான்.

மதிப்புக் கூட்டப்படும் உள்ளூர்ச் சரக்குகள்

ஆங்கிலத்தில் ஓரியண்டல்(Oriental),ஆக்சிடெண்டல்(Occidental) என இரண்டு சொற்கள் உள்ளன. அவ்விரு சொற்களையும் எதிர்ச்சொற்களாகப் பயன்படுத்தும் போக்கு 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் என நினைக்கிறேன். ஐரோப்பிய நாடுகளின் வணிகக் குழுமங்கள் வியாபாரத்திற்காக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை நோக்கி வந்த போது அவர்கள் சந்தித்த மனிதர்களின் இயங்குநிலையை விளக்கும் சொல்லாக ஓரியண்டல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.