இடுகைகள்

தொலைநெறிக் கல்வி என்னும் மாய யதார்த்தம்

இந்தப் பயணம் 2010 டிசம்பரிலேயே போய் வந்திருக்க வேண்டிய பயணம். நிர்வாகக் காரணங்களாலும் சொந்தக் காரணங்களாலும் ஆறு மாதத்திற்குப் பின் இப்போதுதான் வாய்த்தது. மே 7 இல் விமானம் ஏறி, மே 11 இல் திரும்பி வந்து விட்டேன். அங்கே இருந்த நாட்கள் சரியாக நான்கு நாட்கள் தான். நான்கு நாட்களும் பணி சார்ந்த பயணம் தான்.

மதிப்புக் கூட்டப்படும் உள்ளூர்ச் சரக்குகள்

ஆங்கிலத்தில் ஓரியண்டல்(Oriental),ஆக்சிடெண்டல்(Occidental) என இரண்டு சொற்கள் உள்ளன. அவ்விரு சொற்களையும் எதிர்ச்சொற்களாகப் பயன்படுத்தும் போக்கு 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் என நினைக்கிறேன். ஐரோப்பிய நாடுகளின் வணிகக் குழுமங்கள் வியாபாரத்திற்காக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை நோக்கி வந்த போது அவர்கள் சந்தித்த மனிதர்களின் இயங்குநிலையை விளக்கும் சொல்லாக ஓரியண்டல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சின்னத்திரைகளின் வண்ணக்கோலங்கள்

படம்
வாசிப்பதற்கு முன் ஒரு குறிப்பு இந்தக் கட்டுரை 2006 இல் எழுதப்பட்டது. ஆனால் இப்போதும் இக்கட்டுரை விவாதிக்கும் எதுவும் மாறிவிடவில்லை. நிகழ்ச்சிகளின் பெயர்கள் மட்டும் மாறியிருக்கின்றன. இப்போது தொலைக்காட்சிகளில் இடம் பெறும் நிகழ்ச்சிகளின் பெயர்களை அந்த இடத்தில் மாற்றிப் போட்டு நீங்கள் வாசித்துக் கொள்ளலாம். இனிக் கட்டுரைக்குப் போகலாம்...

மறதியின் புதை சேற்றில் :பொதுத்தேர்தல்கள் குறித்த ஒரு பரிசீலனை

படம்
2011,மார்ச்,19 – நடக்கப்போகும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகாரபூர்வமான பணிகள் தொடங்கும் நாள். “தமிழகத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அதிகாரம் செலுத்தப் போகும் அரசமைப்பின் அடித்தள உறுப்பினருள் ஒருவராக இருக்க நான் விரும்புகிறேன்” எனத் தன்னை முன் மொழிந்து வேட்பு மனுத் தாக்கல் செய்யும் முதல் நாள். அன்று தொடங்கும் இந்த முன் மொழிதல்கள் ஒருவார காலத்திற்குத் தொடரும். பின்னர் விண்ணப்பித்த மனுக்கள் பரிசீலிக்கப்படும்; தகுதியுடைய மனுக்கள் ஏற்கப்படும்; தகுதியற்றவை தள்ளுபடி செய்யப்படும். தகுதியான மனுக்களையும் கடைசி நேர மனமாற்றத்தின் அடிப்படையில்- வேட்பாளரின் விருப்பத்தின் பேரில்- திருப்பி வாங்கிக் கொள்வதற்கு வாய்ப்புகளும் தரப்படும். இந்த நடைமுறைகள் எல்லாம் வெகுசுலபமாக, எந்தவிதத் தடையுமின்றி நடந்து கொண்டிருக்கும்போது இந்திய மக்களாட்சியின் அடித்தள கட்டமைப்பும் செயல்படுத்துதலின் சீர்மையும் ஒவ்வொரு இந்திய மனதிற்குள்ளும் கொஞ்சம் புளகாங்கிதத்தை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.

ஞானபீடத்துக்கான பாதை

இந்த வருடம் தமிழுக்கு ஞானபீட விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என அதன் பரிந்துரைக் குழுவில் இருக்கும் அந்தப் பேராசிரியர் சொன்னார். 1977 இல் அகிலனுக்குக் கிடைத்தபின்னர் 23 ஆண்டுகள் காத்திருந்து ஜெயகாந்தனுக்கு வழங்கப் பட்டது. இனியும் அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதில்லை. நமது அண்டை மாநில மொழிகளான மலையாளத்துக்கும் கன்னடத்துக்கும் ஐந்து தடவை ஞானபீடம் வழங்கப்பட்டு விட்டதைச் சுட்டிக் காட்டியே தமிழுக்கான வாய்ப்பைப் பெற்று விட முடியும்; அதற்கு முன்னால் நாம் செய்ய வேண்டியது பரிந்துரைக்கத் தக்க எழுத்தாளர் யார் என்பதை முடிவு செய்வதும், அவரைப் பற்றி ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தின் வழியாகவோ அல்லது நேரடியாகவோ பிற இந்திய மொழிகளிலும் அறிமுகம் செய்ய வேண்டியதும் தான் முதல் பணி என்றார்.

தமிழில் உங்களுக்குப் பிடித்த நாவல் எது?

பட்டப்படிப்பை அமெரிக்கன் கல்லூரியில் முடித்து விட்டு மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் பட்டமேற்படிப்பில் சேர்ந்திருந்தேன். வகுப்புகள் தொடங்கி இரண்டு வாரம் கூட ஆகியிருக்கவில்லை. எனக்கொரு கடிதம் வந்திருப்பதாக வகுப்புத் தோழி சொன்னவுடன் அதை எடுப்பதற்காகத் துறைக்கு வரும் கடிதங்கள் போடப்படும் பெட்டிக்கு அருகில் போய்க் கடிதங்களைப் புரட்டினேன்.  எனக்கு வந்த கடிதத்தைத் தேடிக் கொண்டிருந்த போது எனது பெயரைச் சொல்லி அவர் அழைத்தார். அவருடன் இன்னும் நான்கு பேர் இருந்தார்கள். அருகில் போன போது எனது பெயருக்கு வந்த தபால் அட்டை அவர் கையில் இருந்தது. அழைத்தவர் மற்றவர்களை விட நல்ல உயரம்.  தயங்கித் தயங்கி அவரருகில் சென்றேன். காரணம் ’ராகிங்’ செய்யப்போகிறார்கள் என்ற பயம்.