இடுகைகள்

சமகாலத்தமிழ்ச் சினிமாப் பண்பாடு - ஓர் அலசல்

படம்
ரஜினிகாந்த் நடித்து 1994 இல் வெளிவந்த பாட்ஷா வெற்றிப் படமா ? தோல்விப் படமா ? என்று யாரும் கேள்வி எழுப்பி விடைதேட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டு நகரங்களிலும் வெளியிடப் பட்ட பெரும்பாலான திரையரங்குகளிலும் தொடர்ந்து 100 நாட்களையும் , பெருநகர அரங்குகளில் 200 நாட்களையும் தாண்டி ஓடிய படம்.

அன்பரே! தாங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்.

கோயில்களுக்குப் போவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்பதைத் தெரிந்து கொண்ட எனது உறவினர்கள் பலமுறை என்னை அழைத்திருக்கிறார்கள். அவர்களின் அழைப்பை நிராகரிக்க ஏதாவது ஒரு காரணமும் வேலையும் இருந்து கொண்டே இருந்தது. அவற்றைக் கொஞ்சம் ஒதுக்கி விட்டு ஏற்றுக் கொண்டிருந்தால் அவர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்திருக்கலாம். அந்த வாய்ப்பை நான் அவர்களுக்குத் தரவே இல்லை. உறவினர்களின் அழைப்பை மட்டும் அல்ல; திருவேங்கடவனின் அழைப்பையே இரண்டுமுறை நிராகரித்திருக்கிறேன்.

இன அடையாளங்களைத் தாண்டி..

இலங்கையில் நிகழ்ந்து வந்த யுத்தம்  பேரினவாதக் கருத்தியலை  மெல்லமெல்ல ஏற்றுக் கொள்ளச் செய்வதில்  வெற்றி பெற்றுள்ளது.  முடிவுக்கு வந்த யுத்தத்தின் பிந்திய மௌனங்கள்  அதற்கு முழுச்சாட்சி.  ஆனால் மௌனங்கள் கலையும் ஓசைகளும் கேட்கவே செய்கின்றன  என்பதை அவ்வப்போது வரும் தகவல் குறிப்புகள் சொல்லித்தான் காட்டுகின்றன.  இன்று காலை எனக்கு வந்த  இந்தக் கடிதம் எனக்குச்  சொன்னதை உங்களுக்கும் சொல்கிறேன் அ.ராமசாமி

ஐயா, உங்கள் காலம் முடிந்து போய் விட்டது

படம்
அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்ய முடியாமல் திகைத்து நிற்கும் அவரிடம் அப்படிச் சிரித்துக் கொண்டே பேசியிருக்கக் கூடாது என்பது இப்போது உறைக்கிறது. சிரித்துக் கொண்டே சொன்ன போது அவர் நிச்சயம் கோபம் அடையவே செய்திருப்பார்.

எல்லை கடக்கும் உரிமைகள்

படம்
“ஆ.ராசா மீது குற்றம் சாட்ட எந்த முகாந்திரமும் இல்லை” “ நீதி தேவர்களாகும் ஊடகக்காரர்கள்” ஒன்று குற்றம் சாட்டும் வாக்கியம்;இன்னொன்று தீர்ப்பு வழங்கும் வாக்கியம். ‘பத்ரி சேஷாத்ரி’ எழுதியதை இமையம் வெளியிட்டுள்ளார். பத்ரி சேஷாத்ரியின் இணையமுகவரியின் வழியாகப்பதிவிறக்கம் செய்யப்பட்டு அவரின் அனுமதியுடன் வெளியிடப் பட்டுள்ளது. விலை.ரூ.10/-

சசிகுமாரின் ஈசன் : சமகாலத் தமிழ்வாழ்வின் பெருந்துயரம்

படம்
வெற்றியை மட்டுமே கொண்டாடும் நமது திரைப்பட உலகமும் , பார்வையாளர் மனமும் தோல்விப் படம் எடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வெற்றியாளரின் அடுத்த பாய்ச்சலை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்து நிற்கின்றன. இந்த மனநிலை திரைப்படம் சார்ந்தது மட்டுமல்ல. போட்டிகள் நிரம்பிய மனித வாழ்க்கையின்பல தளங்களின் இயக்கங்களும் இப்படித்தான் இருக்கின்றன.