இடுகைகள்

பள்ளிப்பருவமும் பயணங்களும்

படம்
எனது பள்ளிக்கூட நினைவுகள் எப்போதும் பயணங்களோடு சேர்ந்தே மனதிற்குள் அலையடிக்கக் கூடியன. பள்ளிக்கூடமே போகாமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்த நான் பள்ளிக்கூடம் போகத் தொடங்கியதற்கு  மறுக்கப்பட்ட ஒரு பயணமே காரணமே.

முகுந்த் நாகராஜனின் K – அலைவரிசை: நவீனக் கவிதைகளின் ஒரு முகம்

இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கப் பத்தாண்டுகள் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வர உள்ள ன . இந்தப் பத்தாண்டுக ளைத் தீவிரமான இலக்கிய விவாதங்களின் காலம் என்பதை விடத் தீவிரமாக இயங்குவதாகப் பாவனை செய்யும் இடைநிலைப் பத்திரிகைகளின் காலம் எனச் சொல்லலாம்.

உதிர்வது உத்தமம்

அற்றைத்திங்கள் வலியின் துயரம் சுமந்த கருவறை வாசனை முகர்ந்து சொல்ல முடிந்தது. புன்னகை கசியும் எளிமையும் தோற்றம் இவளெனச் சொன்ன முன்னோன் நாவை ரசிக்க முடிந்தது. மாற்றுக் கருத்தின் களம் ஒன்று கண்டு விரித்துப் பரப்பி விசும்ப முடிந்தது. விலக்கி வைக்கப்பட்ட கனிகள் ருசிக்கும் நாவின் ருசியை உணர முடிந்தது. இற்றைத்திங்கள் ரகசியக்குறிகள் விரைக்கும் வேகம் அறிய முடிகிறது. அதிகாரத்தின் வேர்கள் பரவும் வழிகள் சொல்லத்தெரிகிறது பணத்தின் மதிப்பும் உறையும் வெளியும் ஆழ்கடல் எனினும் துடுப்புகள் உண்டு. துரத்திச் செல்லும் வலிமையும் உண்டு. எதிரிகள் கூட்டம் எழுந்து வந்தால் வலிமை காட்டிட இனமென்னும் துருப்பு என் வசம் உண்டு, அவ்வெண்ணிலவில் கவியுணர் கனவும் கலைக்கும் ஆற்றலும் இருந்தன அறிவேன். இவ்வெண்ணிலவில் உருவேற்றிய பிம்பம் இனியுமெதற்கு? உதிர்வது உத்தமம். 

காண்டாமிருகமென்னும் அபத்த நாடக நிகழ்வெளி

படம்
சில பனுவல்கள் வாசிக்கும் போது புரியாமல் போய்விடும். ஆனால் அதன் அர்த்தம் விளங்கும்படியான நிகழ்வொன்றை நாம் சந்தித்து விட்டால் அந்தப் படைப்பு புரியத்தொடங்கி விடும். அரசியல் அதிகாரம் குறித்த விமரிசனத்திற்கு அபத்த நாடக வகையைத் திறமையாகப் பயன்படுத்திய அயனெஸ்கோவின் காண்டாமிருகம் (RHINOCEROS) அப்படிப் பட்ட நாடகம் என்பது எனது சொந்த அனுபவம். முதல் வாசிப்பில் கடைசி வரை காண்டாமிருகம் வரவே இல்லையே எனக் கேட்டுப் பதில் தெரியாமல் மூடி வைத்து விட்டு மறந்திருந்தேன். ஆனால் அந்தப் பிரதி வெவ்வேறு நிகழ்வுகள் நடக்கும் போது ஒவ்வொரு விதமாக அர்த்தம் தரும் பிரதியாக இருந்திருக்கிறது.  ஒரு நிகழ்வு நடந்த போது கிடைத்த அர்த்தத்தைச் சொல்வதற்கு முன்னால், முதல் தடவை அதன் அர்த்தத்தைப் புரிய வைத்த நிகழ்வைப் பார்க்கலாம். அப்போது நான் பாண்டிச்சேரியில் நாடகப்பள்ளியில் பணியாற்றினேன். முக்கியமான நாடகப் பிரதிகளைப் படிப்பதைக் கடமையாகவும் விருப்பமாகவும் செய்து கொண்டிருந்த நேரம். அயனெஸ்கோவின் காண்டாமிருகம் நாடகத்தை வாசித்து ஒரு வாரம் இருக்கும். நாங்கள் வசித்த புறநகரின் நலச்சங்கம் ஏற்பாடு செய்த ஒருநாள் சுற்றுலாவில் நானும் எனது க

எனது இந்தியா.. எந்த இந்தியா?

இரண்டும் நடந்தது ஒரே ஊரில் அல்ல ; ஒரே நாளிலும் அல்ல ; ஆனால் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள். முந்திய நிகழ்வு சிங்காரச் சென்னையில் ; சென்ற வருடம் 2009 கிறிஸ்துமஸ் விடுமுறையில். இரண்டாவது நிகழ்வு மாநகர் மதுரையில் போனவாரம் ; 2010டிசம்பர்1.

வலது கையும் இடது காதும்

தன்னெழுச்சியான போராட்டங்கள் எவை ? மறைமுகத்தூண்டுதல் காரணமாக உண்டாகும் போராட்டங்கள் எவை என்றெல்லாம் இப்போது கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. இதைப் போலவே நிர்வாகங்களை உண்மையிலேயே எதிர்க்கும் வழக்குகள் எவை ? நிர்வாகமே தூண்டி விட்டுப் போடச் செய்யும் வழக்குகள் எவை ?

திருப்பிக் கொடு

வட்டங்களும் சிலுவைகளும் -பத்துக் குறுநாடகங்களின் தொகுப்பு என்னும் எனது நூலில் உள்ள இந்நாடகம் நமது பள்ளிக் கல்வியின் மீதான கோபத்தை  அங்கதமாகச் சொல்ல முயன்ற நாடகம். ஜெர்மனியில் எழுதப்பட்ட இந்நாடகத்தை நான் தழுவல் செய்த ஆண்டு 1996 எனவே அந்தக் காலம் சார்ந்த நிகழ்வுகளும் எண்ணங்களும் இடம் பெற்றுள்ளது .  நான் செயல் பட்ட கூட்டுக்குரல் நாடகக் குழுவிற்காக இந்நாடகத்தைத் தழுவி எழுதினேன் என்றாலும், அதன் பின் தமிழ்நாட்டில் கல்வி மீது அக்கறை கொண்ட பல நாடகக் குழுவினரும் மேடையேற்றிக் கொண்டே இருக்கிறார்கள். எனது மாணவரும் திரைப்பட நடிகருமான சண்முகராஜாவின் நிகழ் நாடகக் குழு முந்நூறு மேடைகளில் நிகழ்த்தியுள்ளது