இடுகைகள்

வலது கையும் இடது காதும்

தன்னெழுச்சியான போராட்டங்கள் எவை ? மறைமுகத்தூண்டுதல் காரணமாக உண்டாகும் போராட்டங்கள் எவை என்றெல்லாம் இப்போது கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. இதைப் போலவே நிர்வாகங்களை உண்மையிலேயே எதிர்க்கும் வழக்குகள் எவை ? நிர்வாகமே தூண்டி விட்டுப் போடச் செய்யும் வழக்குகள் எவை ?

திருப்பிக் கொடு

வட்டங்களும் சிலுவைகளும் -பத்துக் குறுநாடகங்களின் தொகுப்பு என்னும் எனது நூலில் உள்ள இந்நாடகம் நமது பள்ளிக் கல்வியின் மீதான கோபத்தை  அங்கதமாகச் சொல்ல முயன்ற நாடகம். ஜெர்மனியில் எழுதப்பட்ட இந்நாடகத்தை நான் தழுவல் செய்த ஆண்டு 1996 எனவே அந்தக் காலம் சார்ந்த நிகழ்வுகளும் எண்ணங்களும் இடம் பெற்றுள்ளது .  நான் செயல் பட்ட கூட்டுக்குரல் நாடகக் குழுவிற்காக இந்நாடகத்தைத் தழுவி எழுதினேன் என்றாலும், அதன் பின் தமிழ்நாட்டில் கல்வி மீது அக்கறை கொண்ட பல நாடகக் குழுவினரும் மேடையேற்றிக் கொண்டே இருக்கிறார்கள். எனது மாணவரும் திரைப்பட நடிகருமான சண்முகராஜாவின் நிகழ் நாடகக் குழு முந்நூறு மேடைகளில் நிகழ்த்தியுள்ளது

கிரிஷ் கர்னாட் - இந்திய நாடகங்களின் பரிமாணங்களை விரிவு படுத்தியவர்

படம்
மொழிபெயர்ப்புகள் மூலமாகவே தமிழ்நாட்டில் பரவலான அறிமுகம் பெற்றுள்ள இந்திய நாடகாசிரியர்களில் பாதல்சர்க்காரும் கிரிஷ் கர்னாடும் முக்கியமானவர்கள். மேடையேற்றப் படுவதற்காகவே பாதல்சர்க்கார் மொழிபெயர்க்கப்பட்டார். மொழிபெயர்க்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன பின்பும் கர்னாடின் நாடகங்கள் மேடையேற்றம் பெற்றதில்லை. துக்ளக் , கிரியாவின் வெளியீடாக வந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. அவரது சமீபத்திய நாடகங்களான நாக மண்டலமும் தலதண்டாவும் (பலிபீடம்) பாவண்ணனின் மொழி பெயர்ப்பில் ' வெளி ' யின் வெளியீடாக வெளிவந்தும்  மேடையேற்றத்திற்கு காத்து நிற்கின்றன.   கர்னாட் அவரது  நண்பர் கீர்த்திநாத் குர்த்கோடி அவர்களுக்கு அளித்த பேட்டியின் ஆங்கில வடிவத்திலிருந்து தமிழில் :   அ.ராமசாமி

இனாம்கள் : தருவதும் பெறுவதும்

இந்த வருடத்துத் தீபாவளியை நாம் ஒவ்வொருவரும் எப்படிக் கொண்டாடி முடித்தோம் என்பதை நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம். நிச்சயமாகச் சொல்ல முடியும் எல்லோரும் ஒரே மாதிரியாகக் கொண்டாடி இருக்க மாட்டோம். இந்தியாவில் பலர் கொண்டாடாத பண்டிகையாகக் கூடத் தீபாவளி இருந்திருக்க வாய்ப்புண்டு. தீபாவளி என்றில்லை, ரம்ஜான், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என எல்லாப் பண்டிகைகளையும் எல்லோரும் கொண்டாடுவதும் இல்லை.கொண்டாடினாலும் ஒரேமாதிரியாகக் கொண்டாடுவதில்லை; கொண்டாடுவதும் இயலாது.

• இந்திரா பார்த்தசாரதியோடு ஒரு நேர்காணல்:

படம்
இப்போதும் ஓர் இளைஞனின் துடிப்புடன் எழுதுக் கொண்டிருக்கும் இ.பா ., சமகாலத்தமிழ் இலக்கிய வகைகள் எல்லாவற்றிலும் தன்னுடைய அடையாளத்தைப் பதிக்கும் வகையில் படைப்புகளைத் தந்தவர். மரபான தமிழ் இலக்கியக் கல்வியைக் கற்றிருந்தாலும், இந்திய இலக்கியம் என்னும் எல்லைக்குள் வைத்து அதனைப் புரிந்து கொள்வதும், விளக்குவதும் அவசியம் என்னும் கருத்தோட்டம் அவரது தனி அடையாளம். அதன் வழியாகவே தமிழ் இலக்கியம் உலக இலக்கியப் பரப்பில் தனக்கான இடத்தை அடைய முடியும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.

மணற்கேணி - அறிமுகம்

1989 இல் புதுவைப் பல்கலைக் கழகத்தின் நாடகப் பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றச் சென்ற சில மாதங்களுக்குள் அவருடன் ஏற்பட்ட நட்பு இன்றளவும் தொடரும் ஒன்று. தொண்ணூறுகளில் தமிழ் அறிவுச் சூழலில் ஏற்பட்ட கருத்தியல் முன் வைப்புக்களுக்கும் , செயல்தள மாற்றங்களுக்கும் , விமரிசனத் திசை அறிதலுக்கும் மையமாக இருந்தவர் ரவிக்குமார் என்பதில் எனக்கு எப்போதும் மாற்றுக் கருத்து இருந்ததில்லை.