இடுகைகள்

சந்தேகங்களின் தொகுதி

எழுத்து மட்டுமல்ல எல்லாவிதமான கலைச்செயல்பாடுகளும் ஒருவிதத்தில் மனிதர்களின் அனுபவங்களாகவும், அனுபவங்களின்மேல் எழும் நம்பிக்கைகளாகவும் உள்ளன. அதேபோல் விமரிசனங்கள், அவற்றின்மேல் எழுப்பப்படும் சந்தேகங்களாகவும் சந்தேகங்களுக்கான காரணங்களைத் தொடுப்பதுமாகத்தான் இருக்கின்றன. விமரிசனங்களின் மேல் சந்தேகங்கொள்ளக் கூடுதலாகவே சாத்தியங்கள் இருக்கின்றன.

ஒருவிதத்தில் சமூகப் பொறுப்பு என்பதும், அரசியல் நோக்கம் என்பதும் பெருங்கதையாடலின் வடிவங்களே .. அ.ராமசாமியுடன் நேர்காணல்

படம்
உங்களுடைய இளமைக்காலம் குறித்து, குறிப்பாக இலக்கிய நாடகத்துறைக்கு நீங்கள் வருவதற்குக் காரணமாக அமைந்த சம்பவங்கள் .... எனது இளமைப் பருவத்தைப் பற்றிச் சொல்ல சிறப்பாக எதுவும் இல்லை. நான் வெளிப்படுத்துகின்ற கலை , இலக்கிய ஆர்வம் என்பது தானாக வந்ததில்லை. எனது கல்வியின் பகுதியாக நானே உருவாக்கிக் கொண்ட ஒன்றுதான். பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கிற காலத்திலேயே கதை படித்தல், நாடகம் பார்த்தல், சினிமாவுக்குப் போதல் என்பதைச் செய்யும் ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவனாகவே நானும் இருந்தேன். ஆனால் நான் அவற்றையே எனது படிப்புக்கான துறையாகவும் வேலைக்கான ஒன்றாகவும், என்னை வெளிப்படுத்திக் கொள்ளும் துறையாகவும் ஆக்கிக் கொண்டேன் என்பதுதான் எனக்கு வாய்த்த ஒன்று.

நம்பிக்கை அளித்த மூன்று திரைப்படங்கள்

படம்
தமிழ் சினிமாவில் ஆச்சரியங்கள் நிகழப் போவதாகப் பேச்சுக்களும் விவாதங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய பேச்சுக்களுக்கும் விவாதங்களுக்கும் பின்னணியில் சமீபத்தில் வந்த சில திரைப்படங்கள் காரணங்களாக இருந்துள்ளன. குறிப்பாக வசந்த பாலன் இயக்கத்தில் வந்த வெயில், அமீர் இயக்கத்தில் வந்த பருத்தி வீரன் என்ற இரண்டு படங்கள் உருவாக்கி விட்ட அந்தப் பேச்சுக்களை ராமின் கற்றது தமிழ் அதிகமாக்கியது. தங்கர் பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு இந்த நம்பிக்கையை இன்னும் கூடுதலாக்கக் கூடும்.

தமிழில் திருப்புமுனை நாடகங்கள்

தமிழை இயல், இசை நாடகம் எனப் பிரித்துப் பேசிய பண்டைய வரையறைகளை விளக்கிக் காட்டும் ஒரு மொழி இ¤லக்கிய ஆசிரியர், நிகழ்காலத் தமிழிலிருந்து இவை ஒவ்வொன்றுக்கும் எடுத்துக் காட்டுகள் தந்து விளக்கம் சொல்ல முயலும் போது எதிர்கொள்ளும் சிக்கல்கள் பலவாறாக உள்ளன. ஏனென்றால் இன்று நம்முன்னே இருப்பனவெல்லாம் திரைப்படங்களின் தமிழும் அலைவரிசைகளின் தமிழும் தான். தமிழ்¢ அலை வரிசைகளின் பெருக்கத்தினால் இயலும் இசையும் நாடகமும் ஆகிய முத்தமிழும் ஒன்றோடொன்று கலந்து குழம்பி நிற்கின்றன. இந்தக் குழப்பம் பின் நவீனத்துவக் குழப்பம் என்று நினைத்து விட வேண்டாம்.

மும்முனைத் தாக்குதல் சச்சின், சந்திரமுகி, மும்பை எக்ஸ்பரஸ்

படம்
மொழி, இனம், சமயம் என ஏதாவது ஒன்றால் தம்மையொரு தனித்த குழுவாகக் கருதும் கூட்டம், பண்பாட்டு அடையாளங்களை விழா நாட்களிலும் அதன் நிகழ்வுகளிலும்தான் தேடுகிறது. தமிழா்களின் முக்கிய விழா நிகழ்வுகளாகப் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்றன விளங்குகின்றன என்றாலும் தமிழா்களின் தனி அடையாளங்கள் பற்றிப் பேசுகிறவா்கள் பொங்கல் திருநாளை மட்டுமே தமிழா்களின் விழா நாளாகக் கருதுகின்றனர். தமிழ் சினிமாக்காரா்களுக்கு இந்த வேறுபாடுகளெல்லாம் முக்கியமல்ல. அவா்களுக்குப் புதுப்படங்கள் வெளியிட விழா நாட்கள் வேண்டும் அவ்வளவுதான். இந்த ஆண்டு சித்திரை முதல் நாள் மூன்று படங்கள் வெளிவந்தன. ’சச்சின்’, ’சந்திரமுகி’, ’மும்கை எக்ஸ்பிரஸ்’. இந்த மூன்று படங்களும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

எல்லை தாண்டும் ஆசைகள்

ஒரு நிலப்பரப்பின் ஆட்சித்தலைவனைக் குறிக்கும் பலசொற்களுள் ஒன்று வேந்தன் என்பது .தன் ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்பில் வாழும் மனிதர்களையும் பிற உயிரினங்களையும் தன் விருப்பம்போல வாழும்படியான உத்தரவுகளைச் சட்டங்களாக்கி ஆண்ட நிர்வாகிகளைக் குறிக்கப் பயன்பட்ட நிலமானிய காலப் பெயர்ச்சொல் அது. மன்னன், அரசன், போன்றன அதே அதிகாரங்களை எடுத்துக் கொண்ட நபர்களைக் குறிக்கப் பயன்பட்ட வேறு சொற்கள்.

நம் காலத்து நாயகா்கள் : பொது உளவியலும் ஊடக உளவியலும்

படம்
19.10.2004 அன்று நான் வகுப்பிற்குள் நுழைந்தபோது வழக்கத்தை விடக் கூடுதலான அமைதியுடன் இருந்தது வகுப்பறை. காலையில் தினசரியைப் பார்த்ததில் இருந்து தொற்றிக்கொண்ட அமைதி வகுப்பிலும் இருப்பதாக நான் நினைத்துக் கொண்டேன். 18.10.2004 இரவு வீரப்பன் கொல்லப்பட்ட தகவலைச் செய்தித்தாளைப் பாரத்துத் தான் நான் தெரிந்திருந்தேன். ஆனால் மாணவிகளில் பலரும் அத்தகவலைத் தொலைக்காட்சிகள் மூலமாக அறிந்திருந்தனா். அந்தச் செய்தி அவா்களிடம் ஒற்றைத் தன்மையான தாக்கத்திற்குப் பதிலாகப் பலவிதமான கேள்விகளை எழுப்பியிருந்தது என்பதை அன்றைய விவாதம் எனக்கு உணா்த்தியது. வகுப்பில் நடத்த வேண்டிய பாடங்களுக்குப் பின் நான் எழுப்பும் பொதுவான கேள்விகளுக்கு எந்த விதப் பதிலும் தராத மாணவிகளும் மாணவா்களும் என்னையே முந்திக்கொண்டு வீரப்பனின் கொலை குறித்து விவாதிக்கத் தொடங்கியது எனக்கு இன்னொரு உண்மையையும் உணா்த்தியது. வீரப்பன் காவிய நாயகனாக ஆகித் தமிழ் உள்ளங்களுக்குள் வாசம் செய்திருந்திருக்கிறான் என்பதுதான் அந்த உண்மை.