இடுகைகள்

கோரக்கனவைக் கலைத்தல் வேண்டி

பத்மினி: “என்னோட குரலையே நாடகத்திலெ பயன்படுத்தி இருக்கிறதாகவும், அந்தப்போலீஸ்காரப்படுபாவிங்க செஞ்ச அக்கிரமத்தெ மேடையிலெ காட்டறதாகவும் கட்டாயம் வந்து பாக்கணும்னு” நீங்க லெட்டர் எழுதியிருந்தீங்க. பாண்டிக்கு பக்கத்திலெ இருவது கல் தூரந்தான் கடலூர்.. ஆனா அப்போ வரமுடியல.. ‘ கமிஷன்’ ‘வக்கீல்’னு அலைஞ்சிக்கிட்டு இருந்தேனா.. எம்பாடே பெரும்பாடா இருந்துச்சு.. அதுக்கும் மேல நாடகம் என்ன வேண்டிக்கிடக்கின்னு வரல. இப்போ (06-02-95) மதுரைக்குக்கூடத் தற்செயலாத்தான் வந்தேன். நாடகத்தெப் பார்த்தேன்.

படைப்பாளுமையின் வெளிப்பாடுகள்: அது ஒரு கனாக்காலம், கஸ்தூரி மான்

படம்
அந்த வருடத் தீபாவளிக்கு வருவதாக இருந்த ஐந்து திரைப்படங்களில் முதலில் பார்த்துவிட வேண்டும் என்று திட்டமிட்ட படங்கள் மூன்று. பாலு மகேந்திராவின் ’அது ஒரு கனாக்காலம்’, லோகித்தாஸின் ’கஸ்தூரிமான்’, சேரனின் ’தவமாய் தவமிருந்து’. இப்படித் திட்டமிடுதலின் பின்னணியில் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், இயக்குநரின் அடையாளத்தைச் சொல்லும் படங்களைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற தீா்மானம். அதன் தொடர்ச்சியாகவே இரண்டாவது காரணமும் அமைகின்றது.  அத்தகைய படங்கள் வந்த அடையாளம் தெரியாமல் திரையரங்குகளிலிருந்து எடுக்கப்பட்டுவிடும் என்ற ஆபத்து. படைப்பாளிகளின் அடையாளத்தோடு வரும் படங்களுக்குத்தான் இந்த ஆபத்து. ஸ்டார்களாகவும் சூப்பர் ஸ்டார்களாகவும் ஆகத் துடிக்கும் நடிகா்களின் அடையாளத்தோடு வரும் படங்களுக்கு அந்த ஆபத்து இல்லை.

நோபல் பரிசு பெற்ற பிண்டர்

படம்
மரபுக்கலைகளிலிருந்து இந்திய நாடகத்தை உருவாக்குதல் என்னும் மோகினிப் பேய் இந்திய நாடகத் துறையைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்த தொண்ணூறுகளின் மத்தியில் - அநேகமாக 1993 ஆக இருக்கக் கூடும்- நானும் கேரளத்திலிருந்து பாண்டிச்சேரிக்கு நாடகம் படிக்க வந்திருந்த சிபு எஸ் . கொட்டாரம் என்ற மாணவனும் ஹெரால்ட் பிண்டரைப் (Harold Pinter) பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். தமிழ் நவீன நாடக்காரர்கள் பலருக்கும் கூட அந்த மோகினியிடம் காதல் இருந்த நேரம் தான். நானோ அந்தக் காதல், பெருந்திணைக் காதல் என்று நம்பியவன். சிபு எஸ் கொட்டாரத்திற்கும் அதே எண்ணம் உண்டு. இருவரும் பிண்டரைப் பற்றிப் பேசக் காரணமாக இருந்த நாடகம் பிறந்த நாள் கொண்டாட்டம் (Birthday Party) தான். அது அவரது முக்கியமான நாடகம். அந்நாடகம் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பதாகவும் தமிழில் மொழி பெயர்த்து மேடை யேற்றலாம் என்றும் அவர் சொன்னார்.

குஷ்பு:தமிழ் விரோதமா? பாதுகாப்பா?

படம்
இந்த இரண்டாம் கட்டப் போர் ஒருவிதத்தில் குதிரைப் படைத் தாக்குதல் என்று வருணிக்கத்தக்கது. சட்டம் என்னும் குதிரை ஏறி வாதம், மறுப்பு, சாட்சி, நிபந்தனைகள் என்று பலவித வாள்களுடன் தமிழ்ப் பண்பாடு காக்கும் வீரத்தமிழர்கள் நீதிமன்றக் களங்களில் குஷ்புவைச் சந்திக்கத் தயாராகியுள்ளனர். பழம்பெரும் நகரமான மதுரையம்பதியிலிருந்து தொடங்கிவிட்ட இந்தப் போர் திருச்சி, நெல்லை, சேலம் என்னும் மாநகரங்களின் மாவட்ட நீதிமன்றக் கூண்டுகளிலும், சங்கரன்கோவில், திருக்கோவிலூர், கோவில்பட்டி எனச் சிறு நகரங்களின் தாலுகா நீதிமன்றக் கூண்டுகளிலும் நடைபெறப்போகிறது. 

நடிப்புச் சொல்லித் தரும் நாடகப்பள்ளிகள்

படம்
  சண்முகராஜனின் முயற்சிகளை முன் வைத்து:  பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் கலைஞர்களை உருவாக்குவதில்லை என்றொரு குற்றச்சாட்டு உண்டு. இலக்கியத்தில் ஆய்வுப் பட்டத்திற்குப் பின்னும் ஒரு கவிதை, கதை, நாடகம் என எழுதும் ஆற்றல் ஒருவருக்கு ஏற்படுவதில்லை என்ற வாதத்தில் உண்மை இல்லாமல் இல்லை. எழுத்துக்கலை சார்ந்து சொல்லப் படும் இந்தக் குற்றச்சாட்டு நாடகக் கலையின் இன்னொரு பரிமாணமான அரங்கவியல் துறைக்குப் பொருந்தாது என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இந்தியாவில் செயல்படும் பல நாடகப் பள்ளிகள் தேர்ந்த நாடகக் கலைஞர்களை உருவாக்கியிருக்கின்றன . அதிலும் குறிப்பாக புதுடெல்லியில் செயல்படும் தேசிய நாடகப் பள்ளியின் மாணவர்கள் தேர்ந்த நடிகர்களாக, இயக்குநர் களாக, ஒப்பனைக் கலைஞர்களாக, ஆடை வடிவமைப்பாளர்களாக உலக முழுக்க வலம் வருகின்றனர்.

அழிபடும் அந்தரங்கம்

  பிரசாத் என்ற பெயருக்கு முன்னால் ‘கன்னட’ என்ற சொல்லை அவரே சேர்த்து வைத்திருந்தாரா..?அல்லது தமிழ் அச்சு ஊடகங்கள்தான் சேர்த்துச் சொல்கின்றனவா..? என்பது உறுதியாகத் தெரியவில்லை. அந்தப் பெயரைச் சுற்றி எழுப்பப்படும் புனைவுகளுக்கும், எழுதப்படும் கதைகளுக்கும் வண்ணங்கள் வழங்க வேண்டும் என்று என்னிடம் கேட்டால், நான் பரிந்துரை செய்வன; பச்சையும் நீலமும் கலந்த செஞ்சுடர் இருட்டு என்பது தான்.செஞ்சுடர் இருட்டாகப் பரவி விரியும் காட்சிகளில் மிளிரும் பச்சை வண்ணமும் நீல வண்ணமும் உண்டாக்கும் உணர்வுகள் எப்படிப் பட்டவை; அவை பார்வையாளர்¢களின் மனத்தில் எழுப்பும் உணர்வுத் தூண்டல்கள் என்ன வகையானவை என்பதை விளக்குவதற்கு புள்ளியியல் விவரங்கள் தேவையில்லை. வண்ணங்கள் பற்றிய பாரம்பரிய அறிவே கூடப் போதும்¢. ஆனால் காட்சிச் சாதனங்களுக்குச் சற்றும் குறையாமல் எழுத்தும் உணர்வுத் தூண்டலைச் செய்யும் வல்லமை உடையன என்பதைத் தர்க்க பூர்வமாக விளக்க வேண்டும் என்றால் புள்ளிவிவர ஆய்வொன்றை மேற்கொள்ளத் தான் வேண்டும். அந்த ஆய்வு வெறும் புள்ளியியல் துறையோடு நின்று விடாமல், மருத்துவ உளவியல் துறையையும் இணைத்துக் கொண்ட புள்ளியியல் ஆய்வாக இருந