இடுகைகள்

ஜெயமோகனுக்கு வாழ்த்து

படம்
 தமிழகத்தின் தனியார் பல்கலைக்கழகங்கள் ஆளுமைகளுக்குத் தங்கள் பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டங்களை வழங்குகின்றன. பெரும்பாலும் தொழில் அதிபர்கள், திரைத்துறைப் பிரபலங்களுக்கு வழங்கும் அத்தகைய பட்டங்களின் நோக்கம் அந்நிறுவனங்களின் வணிக நோக்கத்தோடு தொடர்புடையன.

நீதிமான்களின் கைகளால் சிதைக்கப்படும் அமைப்புகள்

படம்
யானையைப் பார்த்த குருடர்களின் கதை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறையையொட்டிப் போடப்பட்ட வழக்கில் வந்துள்ள தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். கிராமப்புறங்களில் நடக்கும் மரத்தடிப் பஞ்சாயத்துகளின் தீர்ப்பைப்போன்றன. நடப்பில் இருக்கும் அரசதிகாரத்தின் - குறிப்பாக ஒன்றிய அரசின் அதிகாரத்தின் மனநிலையையொட்டித் தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்களின் இந்தத் தீர்ப்பை "யானையைப் பார்த்த குருடர்களின் மனநிலை"யோடு ஒப்பிடத்தோன்றுகிறது.

தமயந்தியின் தன் விருப்ப சினிமாக்கள்

படம்
  காயல் - பிரிவுத்துயரின் வலைப்பின்னல் அக்டோபர் 02, 2025 எழுத்தாளர் தமயந்தியின் இயக்கத்தில் வந்துள்ள காயல் அவரது இரண்டாவது சினிமா. முதல் சினிமா தடயம். சினிமாவுக்குள் நுழைந்த மற்ற எழுத்தாளர்களிடமிருந்து தமயந்தியின் நுழைவும் இருப்பும் முக்கியமான வேறுபாடு உடையது. எழுத்தாளர் என்ற தனித்த அடையாளத்தோடு நுழைந்து, வணிக சினிமாவுக்குள் தன் இருப்பிற்காகப் போராடியிருக்கிறார். அவரது முதல் படம் தடயத்தைப் பார்வையாளர்கள் முன்வைக்கப் பலவிதமான சிரமங்களை அனுபவித்தார். திருநெல்வேலியில் ஒரு முதியோர் இல்லத்தில் இருந்த அரங்கில்தான் தடயம் படத்தைப் பார்த்தேன். இரண்டாவது படமான காயலையும் முடித்துவைத்து ஆண்டுக்கணக்கில் காத்திருந்து அரங்கில் வெளியிட முடிந்துள்ளது. இத்தகைய முயற்சிகளின் பின்னணியில் மனந்தளர்ந்து விடாத அவரது பிடிவாதம் இருக்கிறது. இந்தப் பிடிவாதமெல்லாம் மற்ற எழுத்தாளர்கள் காட்டாத ஒன்று. அவரவர் கதைகளைப் படமாக்கும் நோக்கத்தில் சினிமாவுக்குள் நுழைந்தவர்கள் மிகவும் குறைவு. ஆரம்பத்தில் உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான் என இரண்டு நாவல்களைத் தானே இயக்கிய ஜெயகாந்தன் பீம்சிங்கின் திறமையை நம்பி அவர...

குறுங்கதைகளின் பன்முகங்கள்

  குறுங்கதைகளின் செவ்வியல் வெளிப்பாடுகள் இலக்கியத்தின் வடிவம்- வகை மாற்றங்களில் இரண்டு தன்மைகளைக் காணமுடிகின்றது. ஒன்றை இயற்கையான வளர்ச்சிநிலை எனவும், இன்னொன்றைத் தேவைக்கேற்ற மாற்றம் எனவும் சொல்லலாம். முதல்வகை வளர்ச்சி விதையிலிருந்து கிளைபரப்பி, காய்த்துக் கனியாகிப் பலன் தரும் வடிவம். ஆனால் தேவைக்கேற்ப நடக்கும் மாற்றம் ஒருவிதத்தில் அறிவியல் கண்டுபிடிப்பின் விளைவான போன்சாய் தாவரங்களைப் போன்றவை. அழகியலும் குறியீடும் கொண்டு வாசகர்களின் ஈர்ப்பைப் பூர்த்தி செய்வன. அந்த வகையில் இப்போது எழுதப்படும் குறுங்கதைகள் சமகால வாசகர்களின் தேவைக்கான இலக்கிய வடிவம். பசித்திருக்கும் பேய்கள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள கே.பாலமுருகன் தொகுத்தளிக்கும் இக்குறுங்கதைகள் அந்த வடிவத்தின் செவ்வியல் தன்மைகள் கொண்ட கதைகள். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் பெரும்பாலானவை மரணத்திற்கு நெருக்கமான சூழலைக் காட்சிப்படுத்துகின்றன. அப்பாவின் மரணதிற்குக் காரணமாகும் அக்காவின் கூந்தல் ஒரு படிமமாக மாறி அந்தக் கதையோடு முடிந்துபோனாலும், சாவின் படிமங்கள் வெவ்வேறு காட்சிகளில் படர்ந்து நிற்கின்றன. மறுபடியும் தப்பிவந்த ...

திரைப்பட ஆக்கம்- கவனமும் கவனமின்மையும்

படம்
கலை, இலக்கியங்கள் அவை தோன்றிய காலச் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி எனச் சொல்லப்பட்ட கருத்துநிலை போதாமை உடைய ஒன்று. அதனை உணர்ந்த நிலையில், குறிப்பிட்ட காலகட்டத்தின் தேவைக்காகவும் இயக்கத்திற்காகவும் பிரதிகள் உருவாக்கப்படுகின்றன என்ற புரிதல் ஏற்பட்டது. அதனால் வெகுமக்கள் திரள்திரளாகப் பார்த்து ரசிக்கும் திரைப்படங்களுக்குள் அவர்கள் அனைவருக்கும் தேவையான பொதுக்கூறுகள் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து சொல்லும் நோக்கத்தோடு சினிமாவைப் பார்க்கவும் விளக்கவும் முயன்றோம். 1990- களின் இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தப் பார்வையைத் தமிழகச் சிந்தனையாளர்கள் பலரும் வரித்துக் கொண்டார்கள். மிகச் சிறுபான்மையினருக்கான சினிமாவைக் கொண்டாடும் மனப்பாங்கைக் கைவிட்டுவிட்டுத் திரைப்பட ஆய்வுகள் வெகுமக்கள் சினிமாவை நோக்கி நகரத் தொடங்கின. அந்நகர்வுகளில் முன்கை எடுத்தவர்களில் ஒருவனாக நானும் இருந்தேன். பகல் காட்சிகளைப் பார்க்க வாய்ப்பில்லாத நிலையில் பெரும்பாலான சினிமாக்களைப் பின்னிரவுக் காட்சிகளில் தான் பார்த்திருக்கிறேன். . திரையரங்குகள் சென்று பார்க்கவேண்டிய தேவை இப்போது இல்லை. ஆனாலும் உடனடியாகப் பார்த்துவிட ...