இடுகைகள்

உண்மைக்குப் பக்கத்தில் ஒரு சினிமா: ஆந்த்ரே வெய்தாவின் வாக்களிக்கப் பெற்ற பூமி

படம்
பழைய படம் தான். 1975 இல் வந்த அந்த போலிஷ் படத்தின் தலைப்பு ஜெமியா ஒபிஜியானா. ஆங்கிலத்தில் ப்ரொமிஸ்டு லேண்ட் (Promised Land) என மொழி பெயர்க்கப் பெற்றதைத் தமிழில் வாக்களிக்கப் பெற்ற பூமி என பெயர்த்துச் சொல்லலாம். தொழிற்புரட்சி மற்றும் நகர்மயமாதலின் பின்னணியில் நிகழ்ந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட அந்தப் படத்தை எனது மாணவிகளோடும் மாணவர்களோடும் சேர்ந்து பார்த்தேன். எனக்கு நம்பிக்கையுள்ள கலை இலக்கியக் கோணத்தில் இந்தப் படம் முக்கியமான படம் என்று நான் சொன்னேன். உடனே அவர்களில் ஒருத்தியும் ”ஆமாம்; இது எங்களுக்கும் முக்கியமான படம்” என்று பலரையும் உள்ளடக்கிச் சொன்னாள். மற்றவர்களும் அதை மறுத்துச் சொல்லவில்லை. அப்படிச் சொல்லி விட்டு இந்தப் படமும் அதன் இயக்குநரும் போலந்து சினிமாவுக்கும் முக்கியம் என்றும் சொல்லிப் பெருமைப்பட்டார்கள். சோசலிசக் காலத்தில் (1975) எடுக்கப்பட்ட ஒரு சினிமாவை எனது மாணவர்கள் பாராட்டியதும் நினைவில் வைத்திருப்பதும் ஆச்சரியமாக இருந்தது.

எந்த மொழியின் வழியாகக் கல்வி கற்க வேண்டும்?

படம்
   இந்தக் கேள்விக்குத் தாய்மொழியின் வழியாகக் கல்வி கற்பதே சிறந்த கல்வி எனப் பலரும் உடனடியாகப் பதில் சொல்கிறார்கள். மொழிகளின் இயல்புகள், மாற்றங்கள், வளர்ந்த வரலாறு, தேய்ந்து காணாமல் போனதன் காரணங்கள் எனப் பலவற்றையும் ஆய்வு செய்து முடிவுகளைச் சொல்லும் மொழியியல் (Linguistics) துறையைச் சார்ந்த அறிஞர்களும் ஆய்வாளர்களும் தாய்மொழியின் வழியாகக் கற்றலே இயல்பானது; எளிமையானது; சரியானது எனச் சொல்கின்றனர்.

வரலாற்றிலிருந்து நிகழ்காலத்தை நோக்கி: பாலாவின் பரதேசி

படம்
பாலாவின் பரதேசி படத்தைத் திரையரங்கின் பெருந்திரையில் அசையும் பிம்பக் கோர்வையாகப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு இல்லை. கணிணியின் குறுந்திரையில் பார்க்கத்தக்க இணைப்புக்காகக் குறைந்தது 10 நாட்கள் காத்திருக்க வேண்டும்.  காத்திருந்து பார்த்தவுடன் கட்டுரையொன்றை எழுதி தமிழ் நாட்டுப் பத்திரிகை ஒன்றிற்கு அனுப்ப வேண்டும் என்று தோன்றியது, அதே நேரத்தில் பரதேசி போன்ற திரைப்படத்தைக் கணிணியில் பார்த்து விட்டு விமரிசனம் செய்வது, அதில் செலுத்தப்பட்டுள்ள உழைப்பு, அக்கறை, திரைமொழி சார்ந்த நுட்பங்கள் போன்றவற்றிற்கு நியாயம் செய்வதாக அமையுமா?  என்ற கேள்வி தயக்கத்தையும் உண்டாக்கியது.  ஆனால் அந்தப் படத்தைச் சுற்றி நடந்த புலம்பல்களும் புழுதி வாரித் தூற்றல்களும் எனது பார்வையையும் கருத்துக்களையும் பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை உருவாக்கி விட்டன.

தமிழர்கள் இப்படி மட்டும் தான் இருக்கிறார்களா ஜெயமோகன்?

படம்
இப்படி இருக்கிறார்கள் என்று தலைப்பு வைத்து ஜெயமோகன் http://www.jeyamohan.in/?p=36719 எழுதிய அந்தக் கட்டுரை ”இப்படிப் பட்ட ஒரு கூட்டம்  தமிழ்ச் சமூகத்தில் இருக்கிறது” என்று எழுதிக் காட்டியதோடு முடித்திருந்தால் தனது வலைப்பூவில் அவர் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளில் ஒன்று என நினைத்து வாசிக்கப்பட்டு விடப்பட்டிருக்கும். அந்த வாய்ப்பை வழங்காமல் இப்படிப்பட்ட கூட்டம் இருப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து சொல்ல முயன்றதன்