இடுகைகள்

பாலச்சந்திரனின் படத்தொகுப்புக்குப் பின் : மிதக்கும் குமிழிகள்

படம்
காலத் தாழ்ச்சி தான் என்றாலும் நிகழ்ந்து கொண்டிருப்பனவற்றைக் கவனிக்காமல் யாரும் தப்பி விட முடியாது என்ற வகையில் தமிழக மாணவர்களின் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஊடகப் பெருக்கத்த்தின் பங்கும் குறிப்பிடத் தக்கனவாக இருக்கின்றன. உண்மையான அக்கறை என்பதையும் தாண்டி தங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு ஊடக நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் விவாதக் களங்களும், நேரலைச் செய்தித் தொகுப்புகளும் மேலும் மேலும் வலுவூட்டிக் கொண்டிருக்கின்றன. வெகுமக்கள் உளவியலைக் கட்டமைப்பதில் ஊடகங்களின் பங்கு பற்றிப் பேசினாலும் எல்லாவற்றையும் தாண்டி முக்கியமான திசை திருப்பலாக அமைந்தவை   அந்தப் புகைப்படங்களின் வரிசைகள் மட்டுமே என நினைக்கிறேன்.

வைரமுத்துவின் தோழிமார் கதை- ஒரு பார்வை

படம்
அவரே இந்த வரிகளைக் கவிதை எனச் சொல்லவில்லை. வட்டார வழக்கில் ஒரு நாட்டுப் பாட்டு என்றுதான் தொடங்குகிறார். வைரமுத்து வாசிக்கும் வரிகளை படக் காட்சித் தொகுப்போடு முதலில் பாருங்கள். நாட்டுப் பாட்டை அதற்கான பாடகர்களைக் கொண்டு பாடச் செய்யாமல், தனது கவிதையை வாசிக்கும் தொனியில் அவரே வாசிக்க, அதற்கு உரையெழுதுவதுபோல ஒருவர் படக்காட்சிகளை அடுக்கித் தந்திருக்கிறார். படக்காட்சிகளும் வரிகளின் வாசிப்பும் முடிந்தபோது எனக்கொரு சந்தேகம் எழுந்தது. அதனைச் சந்தேகம் எனச் சொல்வதைவிட எல்லாவற்றையும் ’விமரிசனப்பார்வை’யோடு வாசித்துப் பழகியதால் தோன்றிய கேள்வி என்று சொல்வதுதான் சரி. தோழிமார் கதை எனத் தலைப்பு வைத்ததற்குப் பதிலாக ஒரு புங்கமரத்தின் கதை எனத் தலைப்பிட்டிருக்கலாம் என்று தோன்றியது. மூன்று வருடங்களாக (2008 ஜூன் மாதம் 19 ந்தேதி இணையத்தின் ஒளிக்காட்சி வடிவமான யு-ட்யூப்பில் பதிவு செய்யப்பட்டு புகுத்தப்பட்டுள்ளது).இது இணையத்தில் இருக்கிறது நான் முதன் முதலில் பார்த்த போது இருந்த எண்ணிக்கை 92 078 நீண்ட நாட்களாக மாற்றம் இல்லாமலேயே இருக்கிறது. எப்போதாவது ஒன்றிரண்டு பேர் அதனைத் திறந்து பார்க்கிறார்கள்.கேட்கிறார்கள்

தேடுதல்…

படம்
இசையை நகர்வுப்படங்களாக மாற்றுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்ட இந்நாடகம், சூழல் சார்ந்த உயர்வை உண்டாக்கவே விரும்புகிறது. இதில் இடம்பெறும் நடிப்புச் செயல்களோ வார்த்தைகளோ இசையை மீறியதாக இல்லாமல் ஒத்திசைந்தனவாக அமைய வேண்டும். இதற்காகத் தடித்த கம்பி வாத்தியங்களின் –சரோட்அல்லது தில்ரூபாவின் ராகங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அந்த ராகங்களும் பல்தள வெளிப்பாட்டு முறையிலான ஸ்டீரியோ மூலம் வெளிவர வேண்டும். மற்ற நாடகங்களில் பின்னணியுணர்வை உண்டாக்க இசை பயன்படுவது போல இதில் இல்லை ராகம்: தர்பாரி கனடா தாளம்: திரி தாளம் கருவிகள்: சரோட், தபேலா

வார்சாவில் இந்தியக் கொண்டாட்டங்கள்

படம்
இந்தியக் கொண்டாட்ட நிகழ்வு ஒன்றை இந்திய போலந்து நட்புறவுக் கழகம் (IPFA) நடத்தப் போவதாக முகநூல் குழுமம் சொல்லியது. போலந்தில் நான் உறுப்பினராக இருக்கும் ஒருசில முகநூல் குழுமங்களில் ஒன்று. “ வார்சாவில் வாழும் இந்தியர்கள்” என்னும் அந்தக் குழுமத்தில் வார்சாவுக்கு வருவதற்கு முன்பே உறுப்பினராக ஆகி விட்டுத்தான் வந்தேன். இந்தியாவிலிருந்து போலந்துக்குக் கிளம்பும் நாள் குறிக்கப் பட்டவுடன் போலந்து, வார்சா எனப் பெயரிட்டு கூகுள், முகநூல் எனத் தேடிய போது கிடைத்த பல விவரங்களில் இந்தக் குழுவும் ஒன்று.