இடுகைகள்

தொலைக்காட்சியைப் படித்தல்: பங்கேற்பும் விலகலும்

படம்
நிகழ்த்துக்கலைகள் கண்வழிப்பட்டவை; செவி வழிப்பட்டவை. நிகழ்த்துக்கலைகளுள் ஒன்றான நாடகக் கலை, பாத்திரங்களின் வார்த்தை மொழியின் உதவியால் பிற நிகழ்த்துக் கலைகளிலிருந்து தன்னை வேறு படுத்திக் கொள்கிறது. மேடை நிகழ்வில் உற்பத்தியாகும் வார்த்தைமொழி (Verbal language) காட்சி ரூபம் (Visual) ஒலிரூபம் (Sound) என மூன்று நிலைகளில் தன்னை வந்தடையும் குறிகளின் மூலம் பார்வையாளர்கள் மேடை நிகழ்வோடு பரிவர்த்தனை கொள்கிறார்கள். சரியான பரிவர்த்தனை நடக்கும் நிலையில் பார்வையாளன் திருப்தியாக உணர்கிறான். சரியான பரிவர்த்தனைக்கு நாடகக்கலை எப்போதும் நடிகனையே நம்பியுள்ளது. காமிராவின் வழி பார்க்கப்பட்டு, அடுக்கப்பட்ட பிம்பங்களாக உருமாறி, தொழில்நுட்பத்தின் உதவியால் திரையில் உயிர்பெறும் திரைப்பட ஊடகம் கூடப் பார்வையாளர்களோடு பரிவர்த்தனை ஏற்படுத்த, நடிக பிம்பங்களையே அதிகம் நம்புகிறது.

பாடத்திட்டம்: பாஸ்டன் பாலாவின் கேள்வி: எனது பதிலும் விளக்கங்களும்

படம்
எனது முகநூல் சுவரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியாகத் தினத்தந்தியின் செய்தி ஒன்று இருந்தது. அதை எனது சுவரில் ஒட்டிய பாஸ்டன் பாலா என்பவர், ” இது குறித்து தங்கள் எண்ணம்   என்ன ? ”  என்று கேட்டிருந்தார். http://www.dailythanthi.com/article.asp?NewsID=740129&disdate=6%2F26%2F2012   பாஸ்டன் பாலா ! உங்கள் கேள்விக்கு முதலில் எனது கருத்தைச் சொல்லி விடுகிறேன்:   ” நவீனத்துவ அடிப்படைகளற்ற நம்பிக்கைகள் சார்ந்து எழுப்பப்படும் கண்டனங்கள் ஏற்கத்தக்கன அல்ல என்பது என்னுடைய பொதுவான கருத்து. ’ பக்தர்களின் ” நம்பிக்கைக்கும் , ” பாட்டாளி மக்களின் ” ” தார்மீகக் கோபத்திற்கும் ,   ஆதிக்கக் குழுமங்களின் ” கண்ணசைப்புக்கும் ஏற்பப் பாடத்திட்டத்தை அமைப்பது என முடிவு செய்து விட்டால் பாடத்திட்டம் உருவாக்குவது சாத்தியமில்லாமலே போய்விடும் என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

தீர்ப்பளிக்கப்படாத வழக்கு

[இந்நாடகத்தை மேடையேற்றவிரும்புபவர்கள் தகவல் தெரிவித்து விட்டு மேடையேற்றிக் கொள்ளலாம் ] THE JUDGEMENT RESERVED  THE PLAY READING BY  A.RAMASAMY  காட்சி ;1 நாடகம் தொடங்கும்போது முன் மேடையில் ஒரு நபர் சுழல் நாற்காலியில் அமர்ந்துள்ளான். தலையில் கௌபாய் தொப்பி. கையில் ஒன்றரை அடி நீள உருட்டுக்கோல். இருபுறமும் உலோகப் பூண் . அவன் நாடகத்தின் இயக்குநராகக் கருதுபவன்.பெர்முடாஸ் , பேன்ஸி பனியன் என வித்தியாசமான ஆடைகள் அணிந்துள்ளான். அவனுக்கு முன் உயரம் குறைந்த மேசை உள்ளது . அதில் நாடகப்பிரதிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவன் பார்வையாளர் களுக்கு முதுகு காட்டி அமர்ந்துள்ளான். பின் மேடை இருட்டாக உள்ளது. பகலில் நடப்பது என்றால் திரையிட்டு மூடி இருக்கலாம். திரைக்குப் பின் ஒரு நீதிமன்றத்தின் மிகக் குறைந்த வடிவம் இருக்க வேண்டும். சுழல் நாற்காலியையும் கையில் உள்ள கோலையும் சுழற்றியபடி திரும்பிய

திரும்பத்திரும்ப வரும் கண்ணகி :

படம்
எல்லாச் சின்னங்களும் ஆபத்தானவை; இனம், இன உணர்வு உள்பட என்று  நான் சொன்னால் பலர் சிரிக்கிறார்கள். ஏதேனும் ஓர் அடையாளம் தேவை என்கிறார்கள். இப்போது கண்ணகி சில தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம், எப்படி? அவள் கற்புக்கரசி. கணவன் செய்த பச்சைத் துரோகத்தை மன்னித்து ஏற்றவள். தவறாக அவன் கொல்லப்பட்டபோது அரசனிடம் சென்று நீதி கேட்டவள். அவளது கற்பே அவளது பலம். கண்ணகியை நவீனப் பெண் தனது அடையாளமாக ஏற்க மாட்டாள் என்று நான் சொன்னபோது ஒரு எழுத்தாள நண்பர் சொன்னார். ‘ நீங்கள் பார்ப்பணர்; அதனால் தமிழ்ப் பண்பாடு புரியாது உங்களுக்கு’