இடுகைகள்

முகம் அறியா முதலாளிகளும் முகம் தெரிந்த முதலாளியும்:கு.அழகிரிசாமியின் தியாகம்

படம்
உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்தனம் அல்லது சரிவு இந்தியாவில் வெளிப்படை யாகத் தாக்கிய துறை தொழில் நுட்பக் கல்வித்துறை. வளாகத் தேர்வுக்கு ஒவ்வொரு கல்லூரி யையும் நாடிச் சென்று சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்த போக்கு கடந்த கல்வி யாண்டில் நடக்க வில்லை. அதன் விளைவாக இந்த ஆண்டுப் பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கையில் பல பரிமாணங்களை ஏற்பட்டுள்ளன.

வீடு

படம்
[சிறுகதை மூலம்:ம.மதிவண்ணன் எழுதிய திருவாளர் எம்.மின் வீடு என்னும் கதையும் மேற்படி வீட்டுடனான உரையாடலும்] இந்நாடகத்தில் பயன்பட்டுள்ள கவிதைவரிகளை எழுதிய கவிகள் சி.சுப்பிரமணிய பாரதி ஞானக்கூத்தன் சு.வில்வரத்தினம் பழமலய் பசுவய்யா சேரன் மனுஷ்யபுத்திரன் கண்ணதாசன் இன்னும் சில விளம்பரங்களின் வரிகள்

வளர்ச்சியின் அடையாளங்கள்: இமையத்தின் உயிர்நாடி

சொந்தக் கிராமத்திற்குப் போய்விட்டுத் திரும்பிய எனக்குத் திரும்பத் திரும்ப இமையத்தின் அந்தக் கதை ஞாபகத்திற்கு வந்து கொண்டே இருந்தது. கதையின் தலைப்பு உயிர்நாடி.வாசந்தி பொறுப்பில் இந்தியா டுடே வெளியிட்ட இலக்கியச் சிறப்பு மலர்கள் போல டைம்ஸ் ஆப் இந்தியா வுக்காக டைம்ஸ் இன்று என்ற தலைப்பில் ஒரு சிறப்பு மலரை 2008 ஆம் ஆண்டில் - பொங்கல் சமயத்தில் சுஜாதா தொகுத்தார் என்பதாக ஞாபகம். அந்தத் தொகுப்பில் தான் இமையத்தின் உயிர்நாடி கதை அச்சாகி இருந்தது.

உலகமே வேறு; தர்மங்களும் வேறு: புதுமைப்பித்தனின் இரண்டு கதைகள்

நிகழ்காலத் தமிழ் வாழ்வில் கலை இலக்கியத்தின் இடம் என்ன? பொதுவான இந்தக் கேள்வியைக் கூடத் தள்ளி வைத்து விடலாம். கல்லூரியில் படிக்கும் ஒரு மாணாக்கரிடம் கவிதையை நீங்கள் வாசித்தது உண்டா? அல்லது வாசிக்கக் கேட்டதுண்டா? என்று கேட்டுப் பாருங்கள். முதுகலை படிக்க வரும் மாணவிகளிடம் நான் கேட்டுப் பார்த்திருக்கிறேன்.(கலைப் பிரிவுகள் மாணவிகளுக்குரிய பாடங்களாகி விட்டன)