இடுகைகள்

தமிழ் இலக்கியம் கற்பித்தலும் நவீனத் தொழில் நுட்பமும்

கற்பித்தலின் பரிணாமம் கற்றல் என்பதற்குள் தகவல் திரட்டல், சேமித்தல், பயன்படுத்துதல் ஆகிய மூன்று பரிமாணங்கள் உண்டு . பள்ளிக் கல்வி தொடங்கி ஆய்வுக் கல்வி வரையிலான எல்லாவற்றிலும் இம்மூன்று நிலைகளும் வெவ்வேறு விதமாக நடை பெறுகின்றன. பாடத் திட்டம் சார்ந்து ஆசிரியர் தரும் தகவல்களை மனதில் சேமித்துத் தேர்வுத் தாளில் எழுதிப் பயன்படுத்தும் வேலையைப் பள்ளிக் கல்வியின் மாணாக்கர்கள் செய்கிறார்கள். பள்ளிக் கல்வியில் அப்படிச் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதும், அதைச் சரியாகச் செய்பவர்களைச் சிறந்தவர்கள் எனப் பாராட்டுவதும் ஓரளவுக்குப் பொருத்தமானது. இந்நிலையைப் பள்ளிக் கல்வியோடு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். அந்த அடிப்படையில் தான் உயர்கல்வியான கல்லூரிக் கல்வியின் தொடக்க நிலையிலேயே துறை சார்ந்த சிறப்புக் கல்விக்குள் மாணாக்கர்கள் நுழைக்கப் படுகின்றனர். சிறப்புக் கல்விக்கான பாடத் திட்டத்தில் படிக்க வேண்டிய பனுவல்கள் எனக் குறிப்பிடுவ தோடு பார்வை நூல்களையும் பாடத்திட்டக் குழுக்கள் தருவதற்கு அப்படியொரு நோக்கம் இருப்பதே காரணம்.

தமிழில் நவீன நாடகங்கள்

தமிழை இயல், இசை, நாடகம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்துப் பேசி வருவது ஒரு மரபாக இருக்கிறது. இயல் தமிழ் என்பது என்ன..? என்பதை விளக்க நமக்குத் தொல்காப்பியப் பொருளதிகாரம் தொடங்கிப் பழைமையான இலக்கணநூல்கள் இருக்கின்றன. ஆனால் இசைத்தமிழ் இதுதான் என்று விளக்குவதற்கும் நாடகத் தமிழின் இலக்கணம் இவையெனச் சொல்வதற்கும் முறையான இலக்கணநூல்கள் தமிழில் இல்லை. இருக்கின்ற இலக்கண நூல்கள் காலத்தால் மிகப் பிற்பட்டவை. குறிப்பாகப் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அவையும் தமிழ் மொழி வழங்கும் நிலப் பரப்பிற்குள் பிறமொழியாளர்களின் வருகையோடு இசையும் நாடகமும் அறிமுகமாகி அவற்றின் இலக்கணங்களை விளக்கத் தொடங்கிய பின்பு எழுதப்பட்டவை. பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரத்தின் அறிமுகமே பரிதிமால் கலைஞர் எனத் தன்னை அழைத்துக் கொண்ட சூரிய நாராயண சாஸ்திரியாரை நாடகவியலை எழுதத் தூண்டியது. விபுலானந்த அடிகள், ஆபிரகாம் பண்டிதர் போன்றவர்களின் முயற்சிகளுக்குத் தூண்டுகோலாக இருந்தவை கர்நாடக சங்கீதத்தின் வரைமுறைப் பட்ட இசையியல் என்பதை இன்று மறுப்பது எளிமையல்ல. ஆனால் அரங்க நிகழ்வுகள் மற்றும் நாடகங்களின் மேடை யேற்றம் என்பன மிகத் தொ

மனிதநேயம் பேசிய தமிழ் நாடகங்கள்

கலை இலக்கியங்கள் மனிதவாழ்வின் அன்றாட நிகழ்வில் தவிர்க்கமுடியாத அங்கம் என்பதில் பலருக்கும் கருத்துவேறுபாடுகள் இருக்கக் கூடும். அதேபோல் கலையின் பணி ஒட்டுமொத்த சமூகத்தையும் மாற்றிக் காட்டுவது தான் என்பதிலும் ஒத்தகருத்தை எட்டிவிடமுடியாது. ஆனால் படைப்பின் உருவாக்கத்தில்,சமூகத்தின் இயங்குநிலைக்கும் கூட்டுச் சிந்தனைக்கும் முக்கியமான இடம் உண்டு என்பதை மறுப்பதற்கு அதிகமானபேர் இருக்கமாட்டார்கள். ஒரு படைப்பை-குறிப்பாக எழுத்து சார்ந்த கலைப்படைப்புகளை- தனியொரு மனித மனத்தின் பிரத்தியேகமான கணங்களின் வெளிப்பாடுகள் தான் எனச்சொன்னாலும் கூட்டுமனத்தின் நனவுமனமும் நனவிலி மனமும் ஆற்றும் வினைகளின் பங்களிப்பும் உண்டு எனச்சொல்லுவதும் அதன் மேல் விவாதங்கள் நடத்துவதும் உலகம் முழுக்க நடந்துவரும் அறிவார்ந்த சொல்லாடல்களின் இயல்பு.தனிமனிதனின் நனவுமனமும் நனவிலி மனமும் இயங்கும் காரணங்களைப்பற்றி உளவியலில் பலவிளக்கங்கள் தரப்படலாம். கூட்டுமனத்தின் நனவிலி மனம் தனியொரு அலகின் பிரதிநிதியாக அலைவதிலேயே ஆர்வம் கொண்டதாக இருக்கிறது என்றாலும் நனவுமனம் சமூகத்தின் மனசாட்சியாக இருக்கவே விரும்புகிறது. கலை இலக்கியத்துறைகளில் ஒ

தமிழில் பாரம்பரிய அரங்கும் நவீன அரங்கும்

படம்
தமிழை இயல், இசை, நாடகம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்துப் பேசி வருவது ஒரு மரபாக இருக்கிறது. இயல் தமிழ் என்பது என்ன..? என்பதை விளக்க நமக்குத் தொல்காப்பியப் பொருளதிகாரம் தொடங்கிப் பழைமையான இலக்கண நூல்கள் இருக்கின்றன. ஆனால் இசைத்தமிழ் இதுதான் என்று விளக்குவதற்கும் நாடகத் தமிழின் இலக்கணம் இவையெனச் சொல்வதற்கும் முறையான இலக்கணநூல்கள் தமிழில் இல்லை. இருக்கின்ற இலக்கண நூல்கள் காலத்தால் மிகப் பிற்பட்டவை.