இடுகைகள்

சுந்தரராமசாமி என்னும் நவீனத்துவக் காதலன்

தமிழ்ச் சிந்தனைமரபு,  நவீனத்துவத்தைத் தனதாக்கிக்கொண்டதின் தொடக்கப் புள்ளியின் வெளிப்பாடு யார்? எனக் கேட்டால் சட்டென்று வரக் கூடிய பதில் ‘ கவி பாரதி ’ என்ற பெயர்தான். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் நடந்து விட்ட அந்தத் தொடக்கத்தை இன்று பலரும் மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கின்றனர். அத்தகைய மறுபரிசீலனைகள் பல நேரங்களில் படைப்பாளிகளை அவர்கள் தோன்றி வாழ்ந்த சூழலில் வைத்து விமரிசிக்காமல் இன்றைய சூழலில் வைத்து விமரிசித்துப் புதிய அடையாளங்களைச் சூட்டி வருகின்றன. இத்தகைய மறுபரிசீலனைகள் தவறான நோக்கம் கொண்டன என்று சொல்ல முடியா விட்டாலும் சில நேரங்களில் ஆபத்தான போக்குகளுக்கு இட்டுச் செல்லக் கூடியன என்பதையும் மறுத்து விட முடியாது.

தொட்டால் சுடாத பெருநெருப்பு

கரையில் நிற்கும் போதுதான் கப்பல்  மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறது -  இந்த வாக்கியம் மிகவும் உண்மையான வாக்கியம். ஆனால் கரையில் நிற்பதற்காகக் கப்பல் கட்டப்படவில்லை என்பது அதைவிட உண்மையான வாக்கியம்.

அழகிரி என்னும் அதிகார மையம்.

நவீன அரசியல் களம் மௌனமான அதிகார வேட்டை நடைபெறும் மைதானம் – இப்படிச் சொன்ன அறிஞன், அந்தக் கூற்றைப் பொதுவான ஒன்றாக - ஓர் உன்னத வாக்கியமாகக் கருதிச் சொல்லியிருக்க மாட்டான் என்றே நம்பலாம். குறைந்த பட்சம் தேர்தலுக்கு முன்னும் தேர்தலுக்குப் பின்னும் என இரு வேறு காலகட்டத்தில் மௌனத்தின் இடத்தை உத்தேசிக்காமல் எப்படிச் சொல்ல முடியும்.  தேர்தல்களின் காலம் மௌனங்கள் கலைக்கப்படும் காலம்; வசனங்கள் பேசப்படும் காலம்;ஒத்திகைகள் இல்லாமலேயே நேரடிக் காட்சிகள் அரங் கேற்றப்படும் காலம்.அரங்கேற்றங்கள் மேடைகளில் மட்டுமல்ல; தெருக்களை நாடியும், வீடுகளைத் தேடியும் வரும் காலம். ஆர்ப்பாட்டங்கள் அரங்கேறும் தேர்தல் அரசியலில் மௌனத்திற்கு ஏது இடம் எனக் கேட்டால், தேர்தல் அரசியலில் மௌனம் என்பது அதிகார வேட்டையின் கண்ணி வெடி எனச் சிலர் சொல்லலாம்.

மரணம் அல்ல; தற்கொலை

பதினைந்தாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிந்து, அமைச்சரவை பொறுப்பேற்பும் முடிந்து விட்டது. அமைச்சரவை அமைப்பதற்கு முன் நடக்கப் போவதாகப் பேசப்பட்ட அணிமாற்றங்கள், பேரங்கள், கொடுக்கல் வாங்கல்கள் என எதுவும் இல்லாமல் ஆக்கி விட்டன தேர்தல் முடிவுகள். இந்திய வாக்காளர்கள் அளித்துள்ள இந்த முடிவுகள் பலருக்கு நிம்மதிப் பெருமூச்சு. குறிப்பாகக் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைமைக் குடும்பமான நேரு குடும்பத் திற்கும் இதுவரை இல்லாத பெருமகிழ்ச்சி. தோல்வியைத் தழுவிக் கொண்ட பாரதீய ஜனதாக் கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் கூட நிம்மதிதான். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்..