இடுகைகள்

முதலில் இல்லை; முழுமையில் இருக்கிறது

உலக அளவில் அதிகம் பேர் பேசும் மொழி ஆங்கிலம் என்பதை நாம் அறிவோம். அந்த மொழியில் அதிகம் மதிக்கப்படும் இலக்கிய ஆசிரியன் யார் எனக் கேட்டால் ஷேக்ஸ்பியர் என்ற பெயரைக் குறிப்பிடுவார்கள்.

புனல் வாதம் அனல் வாதம்

ஆந்திர அரசு பெண்ணையாற்றில் 100 தடுப்பணைகளைக் கட்டும் பணிகளைத் தொடங்கி விட்டது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளைப் பலரும் எழுப்பி வருகின்றனர். ஆந்திரத்து ஸ்ரீசைலம் மலையில் உற்பத்தியாகும் பொன்னையாறு வேலூர் மாவட்ட திருவலம் அருகே பாலாற்றில் கலக்கிறது. அதிலிருந்து வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களுக்குக் குடிதண்ணீர் கிடைக்கிறது. எனவே மத்திய அரசில் தனக் கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தித் தமிழக முதல்வர், இந்தப் பிரச்சினைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.

தேர்வு முடிவுகள் - சில கேள்விகளும் சில புரிதல்களும்

பள்ளி இறுதியாண்டுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளின் முற்பகல் வேலை. போட்டி போட்டிக் கொண்டு உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகள் தொலைபேசியில் தேர்வு முடிவுகளைச் சொல்லிக் கொண்டி ருந்தன. சந்தோசமான தருணங்களை வெளிப்படுத்தும் குரல்களின் ஊடே குறைந்த மதிப்பெண்கள் வாங்கிய வர்களின் குரல் பலமின்றி ஒதுங்கிப் போனதையும் கேட்க முடிந்தது.

மனச்சுவர்கள் உடைய வேண்டும்

திடீரென்று சில ஊர்களும் நபர்களும் மாநில எல்லைகளைத் தாண்டி தேசத்தின் பரப்புக்குள்ளும் சர்வதேச எல்லைக்குள்ளும் கவனம் பெற்று விடுவதுண்டு. மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமம் திடீர் பரபரப்பில் தேசிய அலைவரிசைகளின் கவனத்துக்குரியதாக ஆகி விட்டது. இருபத்தைந்து வருடங்களாக இருந்த தடுப்புச் சுவர் இடிக்கப்பட்டதன் மூலம் உத்தப்புரம் கிராமத்தில் தீண்டாமையும் சாதி வேறுபாடும் ஒழிந்து விடும் என்று நினைத்துக் கொண்டால் நாம் கண்களை இறுக மூடிக் கொண்டு ஆகாயத்தில் பரப்பதாகக் கனவு காண்கிறோம் என்று தான் அர்த்தம்.