இடுகைகள்

நினைவின் தடங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரங்கலை எழுதும் கலை

படம்
கருணா:நிகழக்கூடாத மரணம் டிசம்பர் 22, 2020 நேரடித் தொடர்புகள் இல்லாத நிலையிலும் நண்பர்கள் என்ற அடையாளத்தோடு வாசிக்கவும் முரண்படவும் உரையாடவும் உதவி கேட்கவுமான வாய்ப்புகள் கொண்ட சமூக ஊடகத்தின் காலத்தில் வாழும் நமக்கு சில மரணங்கள் நிகழக்கூடிய மரணங்களாகத் தோன்றிக் கடந்துபோகின்றன. சில மரணங்கள் நிகழ்ந்திருக்கக் கூடாது என்று தோன்றுகின்றன.

அஷ்வகோஷ்: தொடரும் நினைவுகள்

படம்
  காலையில் அஷ்வகோஷின் மரணச்செய்திக்குப் பின் அவர் குறித்த நினைவுகள் ஓடிக்கொண்டே இருந்தன. கடைசியாக அவரைச் சந்தித்தது அவருக்கு ’விளக்கு விருது’ வழங்கும் விழாவின்போது. பார்த்துக் கையைப்பிடித்து மகிழ்ச்சியைச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். முழுவதும் இருக்கவில்லை.

சுந்தரராமசாமி

படம்
நிகழ்வதற்கு முன்பாகவே அந்த மரணம் தகவலாகத் தெரிவிக்கப்பட்டது. காலச்சுவடு அலுவலகத்திலிருந்து இணையம் வழியாக அதனைச் சொன்னவர் அதன் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அரவிந்தன். அரவிந்தனின் தகவல் எடுத்த எடுப்பிலேயே சு.ரா. இறந்துவிட்டார் எனச் சொல்லவில்லை. அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து கவனிக்க வேண்டிய நோயாளிகளுக்கான பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தான் சொல்லியது. ஆனால் நான் என்னவோ அதனை மரண அறிவிப்பாகவே எடுத்துக் கொண்டு உரையாடல்களைத் தொடங்கியிருந்தேன்.

இப்படியாக முடிந்தது 2022

படம்
எனது எழுத்துகளின் அடிப்படைத்தன்மை என்னவென்று கேட்டால், எல்லாவற்றையும் சூழலில் வைத்து வாசித்துப் பேசுவது என்றே சொல்ல விரும்புகிறேன். பார்ப்பனவற்றையும் கேட்பனவற்றையும் வாசிப்பனவற்றையும் உணர்வனவற்றையும் உள்வாங்கிப் பகுப்பாய்வுக்குட்படுத்தி வாசிக்கிறேன். ஆம் எல்லாமும் வாசிப்புத்தான். வாசித்தனவற்றை வகைப்படுத்திப் புரிந்துகொள்கிறேன். புரிந்துகொண்டதின் அடிப்படையில் விளக்கங்களையும் மதிப்பீடுகளையும் முன்வைக்கிறேன்.

முனைவர் தே.ஞானசேகரன்- கல்விப்புல எல்லைகளைத் தாண்டியவர்.

படம்
இன்று முற்பகலில் (நவம்.24) பேரா.தே.ஞானசேகரனின் மறைவுச் செய்தி அலைபேசி வழியாகவும் முகநூல் குறிப்புகள் வழியாகவும் வந்து சேர்ந்தன. ஓய்வுபெற்று 2 ஆண்டுகள் தான் ஆகின்றன. அதற்குள் மரணம் என்பதை ஏற்கமுடியவில்லை.

பா.செயப்பிரகாசம் என்னும் தெக்கத்திக்காரர்

படம்
நிலப்பரப்பு சார்ந்தும் சொல்முறைகள் சார்ந்தும் பேசப்பட வேண்டிய கதாமாந்தர்கள் சார்ந்தும் கரிசல் இலக்கியத்தின் எல்லைகளை விரிவுபடுத்தியவர் சூரியதீபன். அந்தப் பெயர் அறிமுகமானது மன ஓசை இதழ் வழியாகவே. ஆனால் அதற்கும் முன்பே பா.செயப்பிரகாசம் என்ற பெயர் அறிமுகம். கரிசல் எழுத்தின் முன்னத்தி ஏராகக் கி.ராஜநாராயணன் பெயரை முதலில் வைத்துத் தொடங்கும் பெரும்பாலான பட்டியல்களில் மூன்றாவதாக வந்து நின்றவர் பா.செயப்பிரகாசம். இரண்டாவது பெயர் பூமணி.

மதுரைப் புத்தகக் காட்சிச் சந்திப்புகள்

  பெயர் மறந்த நண்பர் ----------------------------- நேற்று மதுரைப் புத்தகக் கண்காட்சியில் இவரைச் சந்தித்தேன். நான் எழுதிய இரண்டு மூன்று கட்டுரைகளில் இவரின் பெயரைக் குறிப்பிட நினைத்தேன். அப்போதெல்லாம் நினைவுக்கு வரவே இல்லை. ஆனால் அவரது அப்பா பெயர் நினைவில் இருந்ததால் நெல்லை வேலாயுதத்தின் மகன் என்று குறிப்பிட்டேன். நேற்றுச் சந்தித்தவுடன் அதை உடனடியாகச் சொல்லிவிட்டேன். உடனே தனது பெயரை - ராஜன் என்று சொல்லி நினைவுபடுத்தினார்.

சேடபட்டி முத்தையா: ஒரு நினைவு அலை

படம்
  இப்போது சேடபட்டி என்றொரு தொகுதி இல்லை. 2008 இல் உருவாக்கப்பட்ட தொகுதி மறுவரையில் அதன் ஒரு பகுதி திருமங்கலம் தொகுதிக்குள்ளும் இன்னொரு பகுதி உசிலம்பட்டித் தொகுதிக்குள்ளும் கரைந்து போய்விட்டது. என்றாலும் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் தான் இருந்தது. இப்போது அதுவும் தேனி நாடாளு மன்றத் தொகுதியாக மாறி விட்டது. அதன் பிறகும் அந்தப் பெயர் அவரது பெயருக்கு முன்னால் அடைமொழியாகவே இருந்தது. இந்த மாற்றங்களுக்கு முன்பே எனது வாக்குரிமையை அத்தொகுதியிலிருந்து மாற்றிக் கொண்டேன்.

வெங்கடேஷ் சக்கரவர்த்தி

படம்
அவரைச் சினிமா விமர்சகர் என்று சொல்வதைவிடச் சினிமாவைக் கற்பித்துக் கொண்டே இருந்த ஆசிரியர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் வகுப்பெடுத்த திரைப்பட ரசனை வகுப்புகள் பலவற்றில் இருந்திருக்கிறேன். முதன் முதலில் சந்தித்தது மதுரை மருத்துவக்கல்லூரிக்கருகில் இருந்த “ இந்திய மருத்துவக் கழகத்தின் அரங்கில்” . அங்கு யதார்த்தா நடத்திய சினிமா ரசனை வகுப்பில் ராஜனின் அழைப்பின் பேரில் வந்திருந்தார். அதற்கு முன்பே ப்ரீத்தம் சக்கரவர்த்தியைத் தெரியும். பரிக்‌ஷாவின் நாடகங்களில் பார்த்திருக்கிறேன்.

கோவையோடு ஞானியும்

படம்
கோவை புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். சந்தித்தவர்களில் - மேடையில் அவரின் பெயரைக் குறைந்தது பத்துப்பேராவது உச்சரித்திருப்பார்கள். கண்காட்சியில் மட்டும் என்றுகூடச் சொல்லமுடியாது. கோவையில் இருக்கும் இந்த இரண்டு மாதத்தில் நான் சந்திக்கும் பலரும் அவரது பெயரைச் சொல்வதும் அவரது தாக்கம் அவர்களுக்குள் எப்படி இருந்தது என்பதும் சொல்லப்படுகிறது. ஞானி கோவையின் இலக்கியமுகமாக இருந்துள்ளார் என்பதைத் திரும்பத்திரும்ப உணரமுடிகிறது.

நினைவுகள் அழிவதில்லை

படம்
  முகநூலுக்குள் இப்போது வந்தவுடன் அந்த இருவரது மரணச்செய்திகள் முன்னிற்கின்றன. இருவரோடும் நெருக்கமான பழக்கமும் நினைவில் இருக்கும் நிகழ்வுகளும் இருக்கின்றன. முதலாமவர் நாடகவியலாளர் கே.எஸ்.ராஜேந்திரன்; இரண்டாமவர் நாவலாசியர் பா.விசாலம்

அலைகளைக் கடந்து...

படம்
ஒமிக்ரான் அலையாக மாறியுள்ள மூன்றாவது அலைக்கு முதல் அலையில் இருந்ததுபோல அடங்கி இருப்பது என்று முடிவு . முதல் அலையின்போது உருவாக்கப்பட்ட அச்ச உணர்வும் பீதியும் வீட்டுக்குள் முடக்கிப்போட்டது. வீட்டு மாடியில் தான் ஒருமணி நேரம் நடை. வாரம் ஒருமுறை தகுந்த பாதுகாப்பு கவசங்களுடன் கடைகளுக்குப் போய் வந்ததைத் தவிர வெளியேற்றமே கிடையாது. 

கவிதாசரண்: நினைவுகள்

கவிதாசரண் என்னும் பெயருக்குரிய உடலின் இயக்கம் நின்றுவிட்டது எனச்சொல்லும் அஞ்சலிக்குறிப்புகளைப் பார்க்கிறேன். அந்தப் பெயர்கொண்ட மனிதரைச் சந்தித்த இடத்தையும் நாளையும் நினைத்துக் கொள்கிறது மனம்.

நெடுமுடிவேணு : நினைவில் இருப்பார்

படம்
  இந்திய அளவில் தொடங்கிய நடப்பியல் அலை ஒவ்வொரு இந்திய மொழிகளிலும் ஒவ்வொரு விதமாகத் தாக்கத்தையும் பங்களிப்பையும் உருவாக்கியது. மலையாளத்தில் குறிப்பான சூழலில் நிகழும் நிகழ்ச்சிகளையும் அவற்றில் பங்கேற்ற வகைமாதிரிப் பாத்திரங்களையும் உருவாக்கிய பங்களிப்பாக வெளிப்பட்டது. மரபான மலையாள சமூகத்தில் உடைப்புகளை ஏற்படுத்தும்போது உண்டாகும் முரண்பாடுகள் அத்தகைய படங்களின் உரிப்பொருட்களாக வெளிப்பட்டன. அந்த வெளிப்பாட்டுக் காட்சிகளில் மாற மறுக்கும் முந்தைய சமூகத்துப் பிரதிநிதிகளின் வகைமாதிரிப் பாத்திரங்கள் பல உருவாக்கப்பட்டன.

பேரா. இராம.சுந்தரம்: நினைத்துக்கொள்கிறேன்

படம்
  முதுகலை படிக்கும் காலத்திலேயே அறிமுகமாகிச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் நண்பர்களைப் போலப் பேசிக்கொண்ட பேராசிரியர்கள் பலருண்டு. அவர்களில் ஒருவர் பேரா.இராம.சுந்தரம். நண்பர்களாகத் தொடரும் பேராசிரியர்கள் பலரையும் எனது நெறியாளரின் இருக்கைக்கு முன்புதான் சந்தித்திருக்கிறேன். அவர்களின் பேச்சில் நானும் கலந்துகொண்டதின் வழியாக ஆசிரிய - மாணவ உறவைத் தாண்டி நண்பர்களாகிவிடுவோம். தனிப்பட்ட அன்பும் நட்பும் கொண்டவர்.

கருணா:நிகழக்கூடாத மரணம்

படம்
  நேரடித் தொடர்புகள் இல்லாத நிலையிலும் நண்பர்கள் என்ற அடையாளத்தோடு வாசிக்கவும் முரண்படவும் உரையாடவும் உதவி கேட்கவுமான வாய்ப்புகள் கொண்ட சமூக ஊடகத்தின் காலத்தில் வாழும் நமக்கு சில மரணங்க ள் நிகழக்கூடிய மரணங்களாகத் தோன்றிக் கடந்துபோகின்றன. சில மரணங்கள் நிகழ்ந்திருக்கக் கூடாது என்று தோன்றுகின்றன.

வேதசகாயகுமார்: நினைவலைகள்

படம்
அவரது இறப்பு முதல் தகவலாக என்னிடம் வந்து சேர்ந்தபோது நேரம் முன்னிரவு 7.50. எழுதியவர் அனந்தபுரி நயினார். வருத்தமான செய்தி என பின்னூட்டக் குறிப்பெழுதிய பின் அவரோடான சந்திப்புகளும் உரையாடல்களும் விவாதங்களும் தொடர்ச்சியாக நினைவுக்கு வந்துகொண்டே இருந்தன.

பஸ்வான்: பங்கேற்பு அரசியலின் வகைமாதிரி

படம்
  பங்கேற்பு அரசியலின் அதிகப்படியான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக இந்தியாவின் ஒன்றிய அரசில் பங்கேற்றுக் கொண்டிருந்தவர் திரு. ராம்விலாஸ் பஸ்வான். ஜனதா அரசு, வி.பி.சிங்கின் கூட்டணி அரசு, வாஜ்பாயியின் அரசு, தேவ கௌடாவின் அரசு, மன்மோகன் சிங்கின் அரசு, நரேந்திரமோடியின் அரசு என எல்லா அரசுகளிலும் அதிகாரத்துவம் கொண்ட அமைச்சராகவே இருந்தார்.

யதார்த்தா ராஜன் : மதுரைக்கு நல்ல சினிமாவைக் கொண்டுவந்தவர்

படம்
  நேற்று (15/92020) முழுவதும் மதுரை நண்பர்களின் அஞ்சலிக்குறிப்புகள் வாசித்து வாசித்து மனம் தவித்துக்கிடந்தது. முதல் தகவலாகப் பேராசிரியர் முரளி (மதுரைக்கல்லூரி)யின் நிலைத்தகவல் தான் சொன்னது. அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசியபிறகு ராஜனோடு பழகிய நாட்களையும் நட்பையும் அவரது வேலைகளையும் எழுத நினைத்து உட்கார்ந்த ஒவ்வொருமுறையும் எழுத முடியவில்லை. எதை எழுதுவது ? எதை விடுவது ?  

ஆகஸ்டு - 16 முகநூல் நினைவூட்டல்கள்

  நாம் எழுதிவைத்த நாட்குறிப்புகளைத் திரும்பவும் வாசிப்பது ஒரு அனுபவம். ஏதாவது ஒரு நாளைத் திறந்து வைத்துக்கொண்டு அன்றும் அதற்கு முன்னும்பின்னும் நடந்த நிகழ்வுகளை அசைபோடும்போது நிகழ்காலம் மறந்துவிடவும் வாய்ப்புண்டு. அப்படியொரு வாய்ப்பை முகநூலின் நினைவுத்தூண்டல்கள் செய்கின்றன. ஒவ்வொருநாளும் உனது நினைவுகள் -Memories -எனத் திருப்பிக் கொண்டுவரும் நினைவுகள் நம்மை எடைபோட்டுக்கொள்ள உதவுகின்றன. 2010, பிப்ரவரியில் முகநூலில் இணைந்தது தொடங் கி முகநூலுக்காக எழுதியவை பல ஆயிரம் சொற்களாக இருக்கக்கூடும். .எழுதுவதற்காகவும் மற்றவர்கள் எழுதியனவற்றை வாசிப்பதற்காகவும் நட்புகளோடு உரையாடுவதற்காகவும் ஒவ்வொரு நாளும் முகநூலில் கழித்த நேரங்கள் கணிசமானவை. அவற்றை வீணான காலம் என்று நினைக்க முடியவில்லை. எப்போதும் ஒருவித விமரிசனத் தொனியோடு எழுதிய அவ்வெழுத்துகள் புதிய நட்புகளைத் தேடித்தந்திருக்கின்றன. பழைய நட்புகளில் பலரை எதிரிகளாகவும் ஆக்கியிருக்கின்றன. இன்று காலை சில ஆண்டுகளின் முன் பதிவுகளைக் காட்டியது முகநூல். வரிசையாகப் பார்த்துக்கொண்டே போனால் தொடர்ச்சியாகப் பின்னோக்கி ஆறு ஆண்டுகள் -2014 முதல் இந்தத் தேதியில் -ஆகஸ்